என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Procession"

    • சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத் தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது.
    • இன்று காலை உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகமும், அதன் பின்பு காலை 8.10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத் தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. கடந்த 2 ந் தேதி இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடந்தது. தினமும் காலை 6 மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதை தொடர்ந்து பெண்கள் கம்பத்திற்கு மஞ்சள் பூசி தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தினர். 7-ந் தேதி இரவு தலவுமலை மற்றும் வடுகபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து மாரியம்மனை வழிபட்டனர். 8 -ந் தேதி இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து அம்மன்கோவில்புதூர், வாய்கால்மேடு பகுதி மக்கள் வந்து வழிபாடு நடந்தினர்.

    நேற்று இரவு காவிரி சென்று தீர்த்தம் கொண்டு வந்து இரவு 8.30 மணிக்கு மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேக ஆராதனை நடந்தது. அதைதொடந்து கொமாரபாளையம், பனங்காட்டுபுதூர் மக்கள் வந்து மாரியம்மனை வழிபட்டனர். அதன்பின்பு காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊர் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாவிளக்கு பூஜை நடத்தினர்.

    இன்று காலை 7.20 மணிக்கு உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகமும், அதன் பின்பு காலை 8.10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதைதொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பழி கொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    பின்னர் மாலை 3.30 மணிக்கு குழந்தைகள் சேற்று வேஷம் இட்டு மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 5.20 மணிக்கு தேர் நிலை சேரும். இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடக்கும்.

    நாளை மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன் 15 நாள் விழா நிறைவு பெறுகிறது. முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை தொட–ர்ந்து முருங்கத்தொழுவு சுற்று பகுதியில்உள்ள 14-க்கும் மேற்பட்ட கிராமங்க–ளில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    • மாயாண்டியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, நிவாரண உதவி வழங்கக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காலையில் 6 பேர் திடீரென அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    நெல்லை:

    பாளை சீவலப்பேரியை சேர்ந்த தொழிலாளி மாயாண்டி என்பவர் கடந்த 10-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

    13 பேர் கைது

    இதுதொடர்பாக போலீசார் 3 சிறுவர்கள் உள்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் மாயாண்டியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, நிவாரண உதவி வழங்கக்கோரி அவரது உறவினர்கள் மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    5-வது நாளாக போராட்டம்

    இன்று 5-வது நாளாக ஊர்வலமாக சென்று பாளை லூர்துநாதன் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். இதையொட்டி துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இன்று காலையில் 6 பேர் திடீரென அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மாயாண்டியின் உறவினர்கள் பாளை ராஜகோபாலசுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு லூர்துநாதன் சிலைக்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய துணை கமிஷனர் சீனிவாசன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டால் வழக்குபதிவு செய்யப்படும்.

    இதனால் மாண வர்கள் எதிர்காலம் கேள்வி க்குறியாகும். எனவே குறிப்பிட்ட சிலர் மட்டும் பேச்சுவார்த்தைக்கு வருவமாறு அழைப்பு விடுத்தார். அப்போது பேசிய மாயாண்டியின் உறவினர்கள் கைது செய்யப்பட்ட 6 பேரை விடுதலை செய்தால் நாங்கள் கலைந்து செல்கிறோம் என தெரிவித்தனர்.

    தொடர்ந்து முக்கிய சிலர் மட்டும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். மற்றவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    மீண்டும் பேச்சுவார்த்தை

    மாயாண்டியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
    • நீரிழிவு நோய் சிகிச்சை முறைகளில் இன்றைய முன்னேற்றம் குறித்து உரையாற்றினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் மருதுதுரை மற்றும் நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது இத்ரிஸ், கௌதமன் கலந்து கொண்டனர்.

    மருத்துவத்துறை பேராசிரியர்கள் பராந்தகன், கண்ணன், உதவி மருத்துவமாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் நடந்த கருத்தரங்க கூட்டத்தில் நீரிழிவு நோயாளிகளின் கால் பாதுகாப்பு குறித்து பேராசிரியர் மருதுதுரை, பேராசிரியர் பிரபுசங்கர், உரையாற்றினர்.

    திருச்சி தனியார் மருத்துவமனை நிர்வாகி விவேக்சுந்தரம், நீரிழிவு நோய் சிகிச்சை முறைகளில் இன்றைய முன்னேற்றம் குறித்து உரையாற்றினார்கள்.

    இக்கருத்தரங்கில் மருத்துவ பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

    • உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளி கல்வி துறையின் உத்தரவுபடி தாரமங்கலம் வட்டார வளமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை பள்ளியின் தலைமைஆசிரியர் எழில் மணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தாரமங்கலம்:

    உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளி கல்வி துறையின் உத்தரவுபடி தாரமங்கலம் வட்டார வளமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை பள்ளியின் தலைமைஆசிரியர் எழில் மணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    வட்டார கல்வி அலுவலர் அமலா, வட்டார மேற்பார்வையாளர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் தேர்நிலையம், அண்ணாசிலை, பஸ் நிலையம் வழியாக சென்று கைலாசநாதர் கோவில் அருகில் நிறைவு பெற்றது.

    ஊர்வலத்தில் பதாகை கையில் ஏந்தியபடி "சேர்ப்போம் சேர்ப்போம் மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்ப்போம் "கொடுப்போம் கொடுப்போம் சம வாய்ப்பு கொடுப்போம் " ஆதரிப்போம் ஆதரிப்போம் மாற்றுத் திறனாளிகளை ஆதரிப்போம் " என்று கோசங்களை எழுப்பினர்.

    ஊர்வலத்தில் மாற்று திறனாளிகளின் பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்,வட்டார ஆசிரிய பயிற்றுனர்கள்,முட நீக்கு வல்லுநர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் சிறப்பு ஆசிரிய பயிற்றுனர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

    • பெண் குழந்தைகளுக்கான ஊக்க தொகை ஆகியவற்றை அளித்து வருகின்றது.
    • துளசேந்திரபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாற்று திறனாளி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.

    சீர்காழி:

    வட்டார வளமையம் கொள்ளிடம் ஒன்றியத்தின் சார்பாக உலக மாற்றுதிற னாளிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இப்பேரணிக்கு வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி வரவேற்புரை ஆற்றினார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமையே ற்றார். பேரணியை ஒன்றிய துணைத்தலைவர் பானுசேகர் தொடங்கிவை த்தார்.

    கொள்ளிடம்காவல் துணை ஆய்வாளர் கோவிந்த ராஜன் வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார வளமையமேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி பேசும் பொழுது மாற்றுதி றனாளி குழந்தைகளை சமூகத்தில் பாதுகாப்பு கொடுத்து அவர்களை சமமாக நடத்த வேண்டும், அவர்களிடம் பல திறமைகள் உள்ளது.

    அதை வெளிபடுத்த அனைவரும் வாய்பளிக்க வேண்டும்.

    மாற்று திறனாளி குழந்தைகளுக்கு தமிழக அரசு தேசிய அடையாள அட்டை, மாதாந்திர பராமரிப்பு தொகை இலவச பேருந்து பயணம் கல்வி உதவிதொகை உதவி உபகரணங்கள் பெண் குழந்தைகளுக்கான ஊக்க தொகை ஆகியவற்றை அளித்து வருகின்றது.

    இவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பிசியோதெரபி பயிற்சி கொடுத்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

    முன்னதாக துளசேந்திரபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாற்று திறனாளி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.

    இந்நிகழ்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஐசக் ஞானராஜ், பாக்கியலெட்சுமி, அபூர்வராணி, கவிதா, சிறப்பு ஆசிரியர்கள் பிரவினா, ரூபா, ராஜலெட்சுமி, கீதா, உமா, ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் தணிக்கையா ளர்கள் ராஜீவ் காந்தி சிவனேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பிசியோதெரபி மலர் கண்ணன் நன்றி கூறினார்.

    • ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 30-ந் தேதி தொடங்கின.
    • தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாரதனையும் நடைபெறுகிறது பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் செல்வ விநாயகர், கல்யாண விநாயகர், செந்தூர் வேலன், ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 30-ந் தேதி தொடங்கின.

    தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தன. இன்று மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜைதொடங்குகிறது. தொடர்ந்து ரக்ஷா பந்தன், கும்பஸ்தாபனம், யாக சாலை பிரவேசம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கின்றன.

    நாளை விசேஷ சாந்தி, 2-ம் கால யாக பூஜையும், மாலை 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. 5-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு செல்வ விநாயகர், எல்லை மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாரதனையும் நடைபெறுகிறது பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது அன்று மாலை 7 மணிக்கு தேச மங்கையர்க்கரசி ஆன்மீக சொற்பொழிவு மறுநாள் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு செந்தில் கணேஷ் ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சையில் அ.தி.மு.க. ( ஓ.பி.எஸ் . அணி ) சார்பில் கரந்தை பகுதி செயலாளர் அறிவுடை நம்பி தலைமையில் தஞ்சை ஆற்றுப்பாலத்தில் இருந்து நிர்வாகிகள் ஊர்வலமாக ரயில் நிலையம் முன்பு வந்தனர்.

    பின்னர் அங்குள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் ரமேஷ், சாமிநாதன், சண்முக பிரபு, ஒன்றிய செயலாளர்கள் துரை வீரணன், சாமிவேல் , பாவா என்ற ராமச்சந்திரன், திருச்சி மண்டலதகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன்,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் நாஞ்சி சத்யராஜ், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தவமணி, பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் வீரராஜ், கரந்தை பகுதி துணை செயலாளர் சி.ஏ.தாஸ், குளிச்சப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி, தஞ்சை சட்டமன்றத் தொகுதி இணை அமைப்பாளர் முரளி முருகன், கவுன்சிலர்கள் மணிகண்டன், சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று தஞ்சையில் அ.தி.மு.க. (இ.பி.எஸ். அணி) சார்பில் தஞ்சை சாந்தி கமலா தியேட்டர் அருகில் இருந்து மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், பால்வளத் தலைவர் காந்தி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    பின்னர் தஞ்சை ரயில் நிலையம் முன்பு உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மரியாதை செய்தனர்.

    இதில் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், அச்சகத் தலைவர் புண்ணியமூர்த்தி, நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிஷேகன், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோம ரத்தினசுந்தரம், மாணவரணி முருகேசன், அம்மா பேரவை துணைச் செயலாளர் பாலை ரவி , கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, 51-வது வட்ட செயலாளர் மனோகரன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, காந்திமதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவிய பொடி, பழங்கள் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.
    • சங்குகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சங்காபிஷேகம்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு முன் மண்டபத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவிய பொடி, பழங்கள் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து சங்குகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சங்காபிஷேகம் செய்யப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    • 5 மினாராக்கள், அலங்கார வாசல் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 2-ந் தேதி சந்தன கூடு ஊர்வலம்.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 466-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று பாய்மரம் ஏற்றப்பட்ட நிலையில் நாளை (24-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    விழாவை முன்னிட்டு தர்காவில் 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம், மண்டபம், உப்பு கிணறு, பக்தர்கள் அமரும் கூடம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நாகூர் தர்கா விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இதனை கண்டு முஸ்லிம்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 2-ந் தேதி சந்தன கூடு ஊர்வலமும், தொடர்ந்து 3-ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளதால் நாகூர் தர்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    • 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் பூஜைகள் செய்து அஞ்சலி.
    • ஊர்வலமாக சென்று நினைவு ஸ்தூபி மற்றும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி.

    தரங்கம்பாடி:

    தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004 ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.

    ஆழிப் பேரலை தாக்கியதன் 18ம் ஆண்டு நினைவு தினமான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னங்குடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் கூடி சிறப்பு ஹோமங்கள் செய்து ஆழிப் பேரலையின் தாக்குதலில் உயிர் நீத்த தங்களது உறவினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் நீராடினர்.

    தொடர்ந்து ஊர்வலமாக சென்ற மீனவர்கள் ஆழிப் பேரலை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்ப ட்டுள்ள நினைவுச்சின்னம் மற்றும் நினைவிடத்தில் 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் பூஜைகள் செய்து அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.

    தரங்கம்பாடியில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கடற்கரையில் மீனவர்கள் யாகம் செய்து உயிர் நீத்தவர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    அங்கிருந்து மலர் வளையத்துடன் 500க்கும் மேற்பட்டோர் மௌன ஊர்வலமாக நினைவு ஸ்தூபி மற்றும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் சந்திரபாடி மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், மௌன ஊர்வலமாக வந்து சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    இதில் எம்எல்ஏ. நிவேதா முருகன், முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், முன்னாள் எம் எல் ஏ பாலாஅருட்ச்செல்வன், உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    • 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளின் அகல் விளக்கு ஊர்வலம் நடந்தது.
    • வீட்டு வாசலில் அனைவரும் வண்ண கோலமிட்டு விளக்கேற்றி வரவேற்றனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் ஒன்றியம் புலவஞ்சி கிராமத்தில் தர்மா சாஸ்தா பெரும்பாதை ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் 15 ஆம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு தெய்வத்திரு குருசாமிக்கள் கலியமூர்த்தி, சாத்தையன் ஆகியோரின் அருளால் ஐயப்ப சாமியின் மண்டல பூஜை திருவிழா மற்றும் ஐயப்ப ரத ஊர்வலமும் சிறுமிகளின் அகல் விளக்கு ஊர்வலமும் நடைபெற்றது.

    முத்து மாரியம்மன் கோயிலில் கணபதி ஹோமம் நடந்தது. இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    நேற்று மாலை புலவஞ்சி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் கோயில் வரை ஐயப்பன் ரத ஊர்வலம் சென்றடைந்தது.

    பின்னர் ஸ்ரீ காமன் கோவில்களில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பிள்ளையார் கோவில் வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் அகல் விளக்கு ஊர்வலம் நடந்தது.

    இதனை அடுத்து அவர் அவர் வீட்டு வாசலில் அனைவரும் கோலமிட்டு விளக்கு ஏற்றி வரவேற்றனர். இந்த விழாவினை அடுத்து மெய்யன்பர்களும் ஐயப்ப பக்தர்களும் கிராம வாசிகளும் கலந்து கொண்டு அய்யன் அருள் பெற்றனர்.

    மேலும் குருசாமி முருகையன் சுவாமி ஐயப்ப பக்தர்களும் மற்றும் புலவஞ்சி கிராமவாசிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×