search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "proest"

    • குடிபோதையில் பஸ்சை இயக்க அனுமதித்த பஸ்சின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தருமபுரி:

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்ள தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டியில் இருந்து இன்று காலை தனியார் பஸ்சில் அந்த கட்சியின் நிர்வாகிகள் 60-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு சென்றனர்.

    அப்போது பஸ் பொம்மிடி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பஸ்சில் பயணித்த கட்சியின் மற்ற நிர்வாகிகள் திடீரென்று சம்பவ இடத்திலேயே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் டி.எஸ்.பி மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் தான் விபத்து அரங்கேறி உள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் விபத்து நடக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் உயிர் தப்பினோம்.

    குடிபோதையில் பஸ்சை இயக்க அனுமதித்த பஸ்சின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்சியினர் அனைவரும் சத்தம் போட்டனர்.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தி வரும் 26-ந்தேதி புதுவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாரதிய ஜனதா அழைப்பு விடுத்துள்ளது. #Sabarimala #BJP #BJPProtest
    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலையில் பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு ஒரு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு பிறகும் சபரிமலை புனிதத்தை பாதுகாக்க கோடிக்கணக்கான இந்து பெண்கள் நாங்கள் கோவிலுக்கு செல்ல மாட்டோம் என சபதம் ஏற்றுள்ளனர்.

    ஆனால், வெளிநாட்டு கொள்கையை சுவீகரித்திருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் சபரிமலை புனிதத்தை சீர்குலைக்க சில சமூக விரோத சக்திகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    இதற்காக அய்யப்ப பக்தர்கள் மீது அடக்கு முறையை, ஒடுக்கு முறையை ஏவிவிட்டுள்ளனர். சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் தங்கலாம் என்பது புதிதாக ஏற்படுத்தப்பட்டதல்ல. பல ஆண்டுகளாக தொடர்ந்து இருக்கும் நடைமுறைதான்.

    ஆனால், கேரளாவில் உள்ள பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு அரசு பக்தர்களை தங்கவிடாமல் தடுக்கின்றனர். சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    கேரள மாநில ஐகோர்ட் பக்தர்களுக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என உத்தரவிட்டும் அதை செயல்படுத்த மார்க்சிஸ்ட் அரசு முன்வரவில்லை. கைது செய்யப்பட்ட பக்தர்களை விடுவிக்க வேண்டும் என்றும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 26-ந்தேதி புதுவையில் முழு அடைப்பு(பந்த்) போராட்டத்திற்கு பா.ஜனதா அழைப்பு விடுக்கிறது.

    புதுவையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து சபரிமலை செல்லவுள்ளனர். எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் தாமாக முன்வந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். வணிக நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள், ஆட்டோ, பஸ், டெம்போ ஓட்டுனர்களும் பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #BJP #BJPProtest
    ×