search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pronounce"

    ‘ரபேல்’ போர் விமான பேரம் குறித்து கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரும் மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது. #RafaleCase #SupremeCourt #Judgment
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே, இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வக்கீல் வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார்.



    பின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ந்தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளிக்கிறது. ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? என்பது அப்போது தெரியவரும். #RafaleCase #SupremeCourt #Judgment 
    ×