search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Protesters Vandalise Govt Buses"

    மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்டக்காரர்கள் பேருந்துகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. #WestBengalBandh #BJP
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் வடக்கு தீனஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூர் பகுதியில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது மாணவர்களுக்கும் போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து பாஜக சார்பில் இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

    முழு அடைப்பையொட்டி பாஜகவினர் மற்றும் மாணவர்கள் அமைப்புகள் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், ரெயில் என எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போராட்டத்தின்போது சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பேருந்து டிரைவர்கள் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கினர்.



    ஹவுரா-பர்தமான் பிரதான வழித்தடத்தில் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    முழு அடைப்பு போராட்டம் நடத்தி மாநில வளர்ச்சியை முடக்குவதாக பாஜக மீது மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி குற்றம்சாட்டினார். மேலும், முழு அடைப்புக்கு யாரையாவது கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ள அவர், தங்கள் கட்சிக் காரர்கள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.  ஆனால், போராட்டத்தை முறியடிக்க அரசு பலவந்தமாக முயற்சிப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

    முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். #WestBengalBandh #BJP
    ×