என் மலர்
நீங்கள் தேடியது "protests"
- கடந்த 6 மாதமாக 7-வது வார்டு சுடுகாடு பகுதியில் தனியாருக்கு சொந்த மான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.
- குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சியில் அன்றாடம் சேகரிக்க படும் குப்பைகள் கடந்த 6 மாதமாக 7-வது வார்டு சுடுகாடு பகுதியில் தனியாருக்கு சொந்த மான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. சமீப காலமாக இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர். இதனால் தீயில் இருந்து வெளியேறும் நச்சு புகையானது அந்த பகுதியைசேர்ந்த குடியிருப்பு முழுவதும் சூழ்ந்து கொள்வதால் மக்கள் மூச்சு திணறலால் அவதி பட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஒன்று திரண்டு தாரமங்கலம் நங்கவள்ளி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த நகராட்சி மன்ற தலைவர் குணசேகரன். ஆணையாளர் முஸ்தபா, காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் ஆகியோர் பொதுமக்களை நகராட்சிக்கு அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் இன்னும் 6 மாதத்தில் குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது என்றும், குப்பைக்கு தீ வைக்கும் மர்ம நபர்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- கடலூரில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கள்ளசாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
கடலூர்:
கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கள்ளசாராயம் குடித்து மரணங்கள் நடைபெறுவதை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் ஜெயா, மாலா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநகர தலைவர் சாமந்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சுபஸ்ரீ, மாவட்ட தலைவர் மருதை, மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். முடிவில் பொதுச் செயலாளர் சுதா நன்றி கூறினார்.
- தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
- அனைத்து தலித் இயக்கங்களின் நியாயமான கோரிக்கைகளை வெல்வது என முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட அனைத்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வக்கீல் வின்சென்ட் ராஜ் தலைமையில், அனைத்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மூத்த போராளிகள் நிரவி தங்கராசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் நிலவழகன், டாக்டர் அம்பேத்கர் கல்வி பொருளாதாரம் மேம்பாட்டு மையம் நிறுவனர் தணிகாசலம், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் சூர்யா, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல கூட்டமைப்பின் தலைவர் நாகூரான், சமூக நீதிக் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணை ப்பாளர் வின்சன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், திட்டமிட்டப்படி எதிர்வரும் 29-ந் தேதி தொடர் முழுக்க போராட்டம் நடத்தி, அனைத்து தலித் இயங்களின் நியாயமான கோரிக்கைகளை வெல்வது என முடிவு செய்யப்பட்டது.
- ஊதியூா் வனப் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சிறுத்தை சுற்றி வருகிறது.
- மாடு, நாய்கள், ஆடுகள், கோழிகளை கொன்று வருகிறது.
காங்கயம் :
காங்கயம் அருகே ஊதியூா் வனப் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத் துறையினா் பிடிக்க வலியுறுத்தி காங்கயத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, பொதுச்செயலாளா் முத்துவிஸ்வநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் காங்கயம் வட்டம், ஊதியூா் வனப் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சிறுத்தை சுற்றி வருகிறது. சிறுத்தை திடீரென விவசாயிகளின் நிலப் பகுதிக்குள் நுழைந்து மாடு, நாய்கள், ஆடுகள், கோழிகளை கொன்று வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழும் நிலையில் உள்ளனா். எனவே வனத் துறையினா் கூடுதல் கவனம் செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிா்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
- நேரு எம்.எல்.ஏ. எச்சரிக்கை
- உயரதிகாரிகளின் அலட்சியப்போக்கும், லஞ்ச ஊழலமே காரணம்.
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை தொகுதி நேரு எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவையும் சேர்க்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் புதுவை புது ப்பொலிவு பெற்றி ருக்கும். இதை செய்ய தவறியதால் புதுவை நகரம் சுகாதாரமற்ற குப்பை மேடுகளாக, வாய்க்கால்கள் துர்நாற்றத்துடன், புதர்கள் மண்டி சீர்கேடாக காட்சியளிக்கிறது.
தொடங்கப்பட்ட பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதுடன் கட்டுமான பணிகள் தரமற்றதாகவும், குறைபாடுகள் நிறைந்தும் காணப்படுகிறது.
பல கட்டுமான பணிகள் தடைபட்டு வேலைகள் நடைபெறாமல் உள்ளது. இதற்கு உயரதிகாரிகளின் அலட்சியப்போக்கும், லஞ்ச ஊழலமே காரணம்.
24 மணி நேர தடையில்லா மின்சாரம், சுகாதாரமான குடிநீர் வசதி, குற்ற செயல்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல், கழிவுநீர் வழிந்தோடாத சாலைகள், விபத்து ஏற்படா மல் தடுக்க ஆக்கிரமிப்பு இல்லா சாலைகள், பாதசாரிகள் நடந்து செல்ல ஆக்கிரமிப்பு இல்லா நடை பாதைகள் போன்ற முக்கிய அம்சங்கள் இத்திட்டத்தில் உள்ளன.
ஆனால் இத்திட்டங்கள் முறையாக அதிகாரிகளால் செயல்படுத்தப்ப வில்லை. இதற்கு அண்ணா திடல் கட்டுமான பணியே சான்று. ஒரு ஆண்டில் முடிக்க வேண்டிய பணி, 2½ ஆண்டாகியும் முடிக்கப்படா மல் காட்சி ப்பொருளாக உள்ளது.
இதிலும் பல குறைபாடுகள் உள்ளது. மத்திய அரசு இந்த மாதத்துடன் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை முடிக்க காலக்கெடு விதித்துள்ளது.
உருளையன்பேட்டை தொகுதியில் எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை. கண்காணிப்புகேமரா பொருத்தவில்லை,
புதிய பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வில்லை. பயணிகளுக்கு குடிநீர்கூட கிடைக்க வில்லை. பெரிய மார்க்கெட்டும் சீர்கேடுடன் உள்ளது. தலைமை செயலரும் பணிகளை ஆய்வு செய்யவில்லை. இந்த குற்றசாட்டுகளுக்கு தலைமை செயலர் பொறுப்பேற்க வேண்டும்.
கவர்னர் ஸ்மார்ட் சிட்டி குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என தெளிவுபடுத்த வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் மற்றும் ஊழலை கண்டித்து தலைமை செயலர், கவர்னரை கண்டித்து மக்களை திரட்டி, தலைமை செயலகம், கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சூலூர்,
சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது.
இந்த மதுபானக்கூடம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறி கருமத்தம்பட்டி பாஜகவினர், பாஜக மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கார்த்திக்காயணி தலைமையில் மதுபான கூடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, கடந்த 2 வருடங்களாக அனுமதியற்ற கட்டிடத்தில் தனியார் மதுபான கூடம் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் இந்த கடை செயல்படுகிறது. எனவே இந்த கடையை உடனே சீல் வைத்து பூட்ட வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சிறிது நேரம் கடையை மூடினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் நாளை(இன்று) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர். இதனை அடுத்து சமரசம் அடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதற்கிைடயே அங்கு வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.தையல்நாயகி சம்மந்தப்பட்ட தனியார் மதுபான கூட்டத்தை ஆய்வு செய்தார்.
- குற்றச் சம்பவங்களைத் தடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .
- குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய வேண்டும்.
அவிநாசி :
குற்றச் சம்பவங்களைத் தடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் தலித் விடுதலை கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் சகுந்தலா தங்கராஜ் தலைமை வகித்தாா்.தலைமை நிலையச்செயலாளா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் எம்.பி. செங்கோட்டையன் உரையாற்றினாா்.
அவிநாசியில் நடைபெற்று வரும் தொடா் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.இதில் மாவட்ட துணைச் செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடரும்.
- செல்வி போகட் மற்றும் திருமதி மாலிக் ஆகியோர் சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், "இந்த வழக்கில், எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடரும், ஆனால் அது (போராட்டம்) நீதிமன்றத்தில் இருக்கும், சாலையில் அல்ல.
மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சீர்திருத்தம் குறித்து, வாக்குறுதி அளித்தபடி, தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. ஜூலை 11 தேர்தல் தொடர்பாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் காத்திருப்போம்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இந்த பதிவு வெளியிட்ட சில நிமிடங்களில், செல்வி போகட் மற்றும் மாலிக் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் இருந்து ஓய்வு எடுப்பதாக டுவீட் செய்துள்ளனர்.
- தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.
- போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
செய்துங்கநல்லூர்:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தாமிரபரணி ஆற்றில் தண்ணீரும் குறைவான அளவே வருவதால் 500-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில் தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு பகுதியில் இருந்து 3-வது மற்றும் 4-வது பைப் லைன் திட்டம் மூலம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வல்லநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடந்த 1 மாதமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வல்லநாடு பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் வல்லநாடு பஜார் பகுதியில் நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தாா் கலவை தொழிற்சாலையை அகற்றக்கோரி போராட்டம் நடந்தது.
- நச்சுப் புகையால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஊட்டி,
தேவாலா பஜாரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் தலைமை வகித்தாா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: கூடலூா் வட்டம், தேவாலா, போக்கா் காலனியில் தாா் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும்
நச்சுப் புகையால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த ஆலையை இப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்."
புதுச்சேரி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வர் ராகுல்காந்தி, அண்மை யில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து செய்த விமர்சனம் காரணமாக, குஜராத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு, 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப் பட்டது. இதை எதிர்த்து, குஜராத் ஹைகோர்ட்டில் ராகுல்காந்தி தாக்கல் செய்த அப்பீல் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங் களை காங்கிரசார் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் பஸ் நிலையம் அருகே உள்ள பாரதியார் சாலை யில், காரைக்கால் மாவட்ட காங்கிரசார், மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமையில் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
போராட்டத்தில், புதுவை முன்னாள் அமைச்சர்கள் கமலக்கண்ணன், சுப்பிர மணியன், முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கரன் காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள், தங்கவடி வேலு, கருணாநிதி, சுப்பை யன், அரசன், ரஞ்சித், முரளி, நிர்மலா உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில், ராகுல் காந்தியின் வளர்ச்சியை பொறுத்துகொள்ள முடி யாத பா.ஜ.க. அரசு, ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறிக்கும் வகையில், திட்ட மிட்டு பொய்வழக்குகளை ஜோடித்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது என காங்கிரஸார் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டி யன்பால் மற்றும் போலீசார், போராட்டக்காரர்களுடன் அமைதி பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர். இதை யடுத்து, காங்கிர சார் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். இந்த போராடத்தால், காரைக் கால் புதுச்சேரி-சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சேலம் மாவட்டம் ஓம லூர் அருகேயுள்ள சங்கீதப் பட்டி ஊராட்சியில் வெத்த லைக்கரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- கல் குவாரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆபத் தான முறையில் பறைகளை வெடி வைத்து தகர்க்கக் கூடாது என்று குவாரி நிர்வாகத்திடம் கூறினர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓம லூர் அருகேயுள்ள சங்கீதப் பட்டி ஊராட்சியில் வெத்த லைக்கரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
குடியிருப்புகள் மற்றும் மக்கள் நெருக்கம் நிறைந் துள்ள இந்த பகுதியில் கல் குவாரி செயல்பட்டு வரு கிறது. இந்த குவாரியில் எந்தவித பாதுகாப்பு விதி முறைகளையும் கடைபிடிக் காமல் வெடி வைத்து பாறைகளை தகர்த்து எடுக்கின்றனர். அவ்வாறு வெடி வைக்கும்போது சிதறும் பாறை கற்கள் குடி யிருப்பு பகுதிகளை தாக்கி வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. மேலும், கால் நடைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு களும் ஏற்பட்டுள்ளது.
கல் குவாரியில் வைக்கப் படும் வெடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பாதிக் கப்பட்டு வரும் கிராம மக்கள், அரசு அதிகாரி களிடம் தொடர்ந்து பல முறை புகரளித்தும், இது வரை எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. அதி காரிகள் சிறு விசாரணை கூட செய்ய வரவில்லை என்று மக்கள் வேதனை யுடன் கூறுகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை கல் குவாரியில் பாறைக்கு வெடி வைத்து தகர்த்துள்ள னர்.
அப்போது சிதறிய கற்கள் குடியிருப்பு பகு திக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியது. மேலும், அங்குள்ள இரண்டு சிறுவர்கள், கால்நடைகளை தாக்கி காயப்படுத்தியது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் கல் குவாரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆபத் தான முறையில் பறைகளை வெடி வைத்து தகர்க்கக் கூடாது என்று குவாரி நிர்வாகத்திடம் கூறினர். இங்கு வைக்கப்படும் வெடி எங்கள் உயிருக்கு பாது காப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துகிறது.
பகல் நேரத்தில் கற்கள் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே விழுகிறது. அப் போது யாராவது வீட்டில் இருந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று ஆதங்கத்துடன் கூறினர். அப்போது அங்கு வந்த ஊராட்சி தலைவர் ராஜா மணி ராஜா பொது மக்க ளுக்கு ஆதரவாக, சுற்றிலும் குடியிருப்புகள் நிறைந் துள்ள பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் பாறைகளுக்கு வெடி வைத்து குவாரி செயல்படுவதால் மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.
அதனால், இங்குள்ள மக்களின் உயிரை காக்க அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், மாவட்ட ஆட்சியர், கனிமவள துறை அதி காரிகள், சுற்றுசூழல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.