search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public opposition.meeting cancelled"

    • நிர்வாகிகள், பொதுமக்கள் எதிர்ப்பால் காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
    • தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நன்றி கூட சொல்ல வராதவர்கள் இப்போது எதற்கு பூத் கமிட்டி கூட்டம் நடத்த வருகிறார்கள்?

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஒன்றியம் புத்தூரணி களபங்குடியில் காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற இருந்தது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள இருந்தனர். இதற்காக அங்குள்ள அரசு சமுதாயக்கூடத்தில் ஏற்பாடுகள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் சமுதாயக் கூடம் முன்பு திரண்டனர். அவர்கள் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து பூத் கமிட்டி கூட்டத்தை நடத்த விட மாட்டோம் எனக்கூறி சமுதாயக்கூடத்திற்கு பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு தெரியாமல் காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறு கிறது. அதிகாரத்தை சிலர் துஷ்பிர யோகம் செய்கி றார்கள். கண்ணங்குடி ஒன்றியத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார் கள். இதற்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. இப்போது பூத் கமிட்டி அமைக்க வருகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து ஓட்டு போட்டு எந்த பலனும் இல்லை. எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பூத் கமிட்டி அமைத்தது நியாயமற்றது.

    கடந்த தேர்தலில் வெற்றி பெற்றபிறகு நன்றி கூட சொல்ல வராதவர்கள் இப்போது எதற்கு பூத் கமிட்டி கூட்டம் நடத்த வருகிறார்கள்? என்றனர். நிர்வாகிகள், பொது மக்கள் எதிர்ப்பால் களபங்குடியில் நடைபெற இருந்த காங்கி ரஸ் பூத் கமிட்டி கூட்டம் ரத்தானது.

    ×