search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • காரியாப்பட்டி என்.பி.எம். டிரஸ்ட் நிறு வனர் அழகர்சாமி நன்றி கூறினார்.

    மதுரை

    காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் முன்னாள் ஒன்றிய செயலா ளர் பால்ச்சாமி தேவர் படத்திறப்பு, பிரைஸ் அறக் கட்டளை தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைபெற்றது.

    அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி னார். தி.மு.க. மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், ராஜேந்திரன், ஜெயப்பெருமாள், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ஏழை-எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்ெதாகை, விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், நெல் விதை கள், பெண்களுக்கு சேலை, தையல் எந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு சைக்கிள் ஆகியவற்ைற அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கி னார்.

    இதில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., திருச்சுழி யூனியன் சேர்மன் பொன்னுத்தம்பி, காரியா பட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லம், போஸ் தேவர், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காரியாப்பட்டி என்.பி.எம். டிரஸ்ட் நிறு வனர் அழகர்சாமி நன்றி கூறினார்.

    • தேரோட்டம் கடந்த 13ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.
    • மாரியம்மன் யானை மற்றும் சிங்க வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கிய நிலையில் கம்பம் போடுதல், கொடியேற்றம் பூவோடு எடுத்தல் மற்றும் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 13ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் குட்டை திடல் பகுதியில் நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கையை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் நிறைவு நாளன்று மாரியம்மன் யானை மற்றும் சிங்க வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது . கடலூர் மாவட்டம் குட்டியாங் குப்பம் தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்த கவியரசன் பிரபு குழுவினர் வான வேடிக்கை நடத்தினர். இதில் இரண்டு அடி அவுட்டு, 3 அடி அவுட்டு ,இரண்டடி மாலை வெடி, சரம் மூன்றடி, குண்டு வெடி சரம் ,கலர் மத்தாப்பு ,செடி, மரம் ,பாம்பு வெடி உட்பட பல்வேறு வகையான வெடிகள் வானத்தில் கலர் கலராக வர்ண ஜாலங்களுடன் வெடித்தன. வெடிக்கும் வெடிகளை பார்த்து பொது மக்கள் உற்சாகம் அடைந்தனர். தீயணைப்புத் துறையினர் ,காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். உடுமலை நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வான வேடிக்கையை கண்டுகளித்தனர்.

    வானவேடிக்கை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ் எஸ். ஸ்ரீதர், செயல் அலுவலர் சீனிவாசன், சஞ்சீவ் சுந்தரம் மற்றும் நன்கொடையாளர்கள் செய்திருந்தனர்.

    • சிறுநீர் வெளியேறாதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும்.
    • தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

    திருப்பூர் :

    வெய்யிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- அதிக வெப்ப காலங்களில் சிறுநீர்த் தொற்று உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். வயதானவர்களுக்கு வெயிலால் உடல் பலவீனமாகி 'ஹீட் ஸ்ட்ரோக்' எனும் வெப்பத்தாக்கு நோய் வரலாம்.கோடைக் காலத்தில் வியர்வைச் சுரக்காதது, சுரந்தும் ஆவியாகாதது, 'ஹைபோதலமஸ்' சரியாக வேலை செய்யாமல் இருப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் அதிகம்.நடுத்தர வயதினருக்கு சிறுநீரகப் பிரச்னைகளும், குழந்தைகளுக்கு தொண்டையில் பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.வெப்பம் அதிகமுள்ள காலங்களில் அதிக வியர்வை மற்றும் அளவுக்கதிகமாக சிறுநீர் வெளியேறாதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும்.அதை தவிர்க்க இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்ற இயற்கை பானங்கள், தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

    கோடைக்காலத்தில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அல்சர் பிரச்னைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவு, காய்கறி, பருப்பு வகைகள் நீர்ச்சத்து நிறைந்த பழவகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.குறிப்பாக, வழக்கமாக குடிக்கும் அளவை விட சற்று அதிகமாக நீர் அருந்த வேண்டும். சூரிய ஒளியில் உள்ள புறஊதாக் கதிர்களால் கோடைக்காலங்களில் சருமத்தில் அரிப்பு ஏற்படும்.எனவே பகலில் வெளியே செல்லும்போது முகம் மற்றும் கைகளை துணிகளால் மூடியபடி செல்வது நல்லது. தலைக்கு தொப்பி அணிவது குடை பயன்படுத்துவது நல்லது.வயதானவர்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம். குழந்தைகள் மதியவேளையில் விளையாடுவதை தவிர்த்து மாலையில் விளையாடலாம்.பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. அடர் நிறத்திலான ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும்.ஐஸ் வாட்டர் குடிப்பது, உடலுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.ஐஸ் வாட்டர் குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 27 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருக்காலை உரிமம் முடிவடைந்த நிலையில் அதனை புதுப்பி க்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17ந் தேதி முதல் கடந்த 27 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப ட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த ஏப்ரல் 8-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்ட பந்தலில், அப்பகுதி மக்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர். இந்த நிலையில் நேற்று 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • மின் கம்பத்தின் கீழ் பகுதி உடைந்ததால் சாய்ந்து விழும் நிலை ஏற்பட்டது.
    • 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் மங்கலம் ரோடு அரசு கல்லூரி எதிரே உள்ள ரோட்டில் நேற்று சரக்கு வேன் ஒன்று மின் கம்பத்தில் மோதியது. இதில் மின் கம்பத்தின் கீழ் பகுதி உடைந்ததால் சாய்ந்து விழும் நிலை ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் - பக்கத்தினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், அந்த பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி, ஊழியர்கள் மூலம் மின்கம்பத்தை மாற்றி அமைத்து சரி செய்தனர். இதனால் மங்கலம் ரோடு பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. கோடை வெயிலால் ஏற்கனவே அவதியில் இருந்த மக்கள், மின்தடையால் மேலும் அவதிப்பட்டனர்.

    • ஒரு மாதம் கடந்த நிலையில் சிறுத்தை சிக்கவில்லை.
    • மலையடிவாரப்பகுதியில் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது.

    காங்கயம் :

    காங்கயம் ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தை மலையடிவார பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்கள் ஆகிவற்றை இழுத்து சென்று கொன்று தின்றது. இந்த சம்பவம் தொடர்கதையானதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ஊதியூர் மலையடிவார பகுதிக்கு செல்லவே அஞ்சினர். எனவே சிறுத்தையை பிடித்துவனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 30 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்கள், 4 கூண்டுகள் ஆகிவற்றை வைத்து கண்காணித்து வந்தனர். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த எந்தவித காட்சிகளும் கேமராக்களில் பதிவாகவில்லை. சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டிலும் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது. மேலும் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி சுமார் 1 மாத காலம் ஆனநிலையில் ஊதியூர் மலையடிவார பகுதியில் வசிக்கும் மக்கள் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமோ? என்று அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது :- ஒரு மாதம்கடந்த நிலையில் சிறுத்தை சிக்கவில்லை. அவ்வப்போது மலையடிவாரப்பகுதியில் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. மாறாக சிறுத்தையின் கால்தடங்கள் மட்டுமே கிடைத்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் வனத்துறை வீரர்கள் சிலர் சிறுத்தையை நேரில் பார்த்ததாக தெரிவித்தனர்.

    இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறுத்தை வனப்பகுதியை விட்டு வந்து ஆடு மாடுகளை வேட்டையாடவில்லை. சமீபத்திய கால்தடங்களும் கிடைக்க வில்லை. இதனால் எங்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் வழக்கம் போல் இதுவரை வெளியே நடமாட முடியவில்லை. தற்போது ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளதா? எனவும் சந்தேகம் உள்ளது. இதனால் பெரும் குழப்பம் அடைந்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது :- வனப்பகுதிக்குள்ளேயே சிறுத்தை பதுங்கி இருந்து அங்குள்ள மான்களை வேட்டையாடி சாப்பிட்டு வரலாம். வனப்பகுதியில் அதற்கு உணவு கிடைக்காமல் போனால் வெளியே வந்து வேட்டையாடலாம். ஆனால் இதுவரை சிறுத்தை வேட்டையாடி சென்றதாக எந்த தகவலும் வரவில்லை. ஒருவேளை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததா? என தெரியவில்லை. அப்படி சிறுத்தை இடம் பெயர்ந்தால் கண்டிப்பாக உணவிற்காக வெளியிடங்களில் வேட்டையாடி இருக்கும். இதுபோன்ற எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனால் எங்களுக்கே குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. எனவே மேலும் 2 அல்லது 3 நாட்கள் பொறுத்திருந்து சிறுத்தை குறித்த ஏதாவது தகவல் கிடைக்கிறதா? என்று பார்க்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் யாராவது சிறுத்தையை பார்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் என தெரிவித்துள்ளனர்.

    • மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட மகிழ்ச்சிபுரம், விநாயகர் கோவில் அருகில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக் கொண்டார்.
    • பொதுமக்களின் அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு வார்டாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு க்களை பெற்று வருகிறார்.

    மாநகராட்சி 19-வது வார்டு

    மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட மகிழ்ச்சிபுரம், விநாயகர் கோவில் அருகில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக் கொண்டார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி, விதவை உதவித்தொகை, தையல் மிஷின் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

    பின்னர் அப்பகுதியில் உள்ள தெருக்களில் மழை காலங்களில் தேங்கிய மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் உருவா கின்றன. அதை அப்புறப் படுத்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அந்த பகுதியை அமைச்சர் கீதாஜீவன், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    குறைகளை தீர்த்து வைப்பேன்

    பின்னர் பொது மக்களிடம் கூறுகையில், 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக எந்த பணிகளும் நடைபெற வில்லை. இதனால் இப்பகுதி முழுமையான வளர்ச்சியை நோக்கி செல்லாத நிலை இருந்துள்ளது. இனி வரும் காலங்களில் முதல்-அமைச்சர் முக. ஸ்டாலின் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு திட்டங்களை உருவாக்குவார்.

    அதன் மூலம் உங்களது பகுதியில் உள்ள அனைத்து குறை களையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் அன்ன லெட்சுமி, உதவி ஆணையர் சேகர், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியராஜ், கவுன்சிலர் டாக்டர் சோமசுந்தரி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், மாநகர தொண்டரணி அமைப்பா ளர் முருகஇசக்கி, துணை அமைப்பாளர் மணி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வார்டு அவைத்தலைவர் முனியசாமி, வட்ட செயலாளர் பத்மாவதி, துணைச்செயலாளர்கள் மாரி முத்து, பாலசுப்பிர மணியன், பரமசிவம், பொருளாளர் சீனிபாய், வட்டப்பிரதிநிதிகள் மேக நாதன், அமிர்தலிங்கராஜ், சுடலை, செபஸ்டீன், நிர்வாகிகள் மாடசாமி, ஹரிராம், ராமர், பெருமாள், சுடலைமணி, அந்தோணி ராஜன், முருகன் மற்றும் பாஸ்கர், மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எந்த நேரமும் தளி சாலை வாகன நெருக்கத்துடன் பரபரப்பாக காணப்படும்.
    • இதன் வழியாக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தளி சாலை பிரதானமாக உள்ளது.இந்த சாலையை திருமூர்த்திமலை, அமராவதி,மூணாறுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இதன் காரணமாக எந்த நேரமும் தளி சாலை வாகன நெருக்கத்துடன் பரபரப்பாக காணப்படும். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்:-

    உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் தளி சாலையின் பங்கு முக்கியமானதாகும்.இதன் வழியாக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையின் குறுக்காக செல்கின்ற ரயில் பாதையின் மீது கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது.அதற்கு முன்பு தளி சாலை ஒரு வழிப்பாதையாக இருந்தது.அப்போது பஸ் நிலையம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வருகின்ற வாகனங்கள் ராஜேந்திரா சாலை வழியாக சென்று காந்தி சதுக்கத்தை அடைந்து திருமூர்த்திமலை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு சென்று விடும். அதே போன்று நகருக்குள் நுழையும் வாகனங்கள் தளி சாலை வழியாக வந்து பொள்ளாச்சி- பழனி நெடுஞ்சாலையை அடைந்து பஸ் நிலையத்துக்கு சென்று விடும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீராக இருந்து வந்தது. ஆனால் பாலம் கட்டப்பட்ட பின்பு ஒரு வழி சாலையாக இருந்த தளிசாலை இரு வழி சாலையாக மாறிவிட்டது. இதனால் வாகன பெருக்கமும் அதிகரித்து உள்ளது.அத்துடன் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அதை செயல்படுத்த முன்வர வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.எனவே தளி சாலையில் ஏற்பட்டு வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் அதன் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.அத்துடன் முன்பு இருந்தது போன்று ஒரு வழி பாதையாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • திருக்கோவிலூர் பகுதியில் வெயில் கொடுரமாக இருப்பதால், இங்கு மின்சாரம் இல்லாமல் பொது மக்களால் வாழவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது.
    • நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 தடவை திடீர் திடீர் என மின்வெட்டு ஏற்படுகிறது.

    கள்ளக்கறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் கோரத்தாண்டவம் பொது மக்களை வாட்டி வதைக்கின்றது. குறிப்பாக திருக்கோவிலூர் பகுதியில் வெயில் கொடுரமாக அடிக்கிறது. இதனால் இங்கு மின்சாரம் இல்லாமல் பொது மக்களால் வாழவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது. ஆனால், திருக்கோவிலூர் மின்வாரய ஊழியர்களின் செயல்பாடு சுட்டெரிக்கும் சூரியனே தேவலாம் என்ற அளவில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 தடவை திடீர் திடீர் என மின்வெட்டு ஏற்படுகிறது. அவ்வாறு மின்வெட்டு ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வரும்போது கூடுதலான மின்னழுத்தத்துடன் வருகிறது. இதனால் மின்சாதன பொருட்கள் ஆங்காங்கே பழுதடைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்டால் பதில் ஏதும் இல்லை   கோடை காலம் தொடங்கியதால் மின் பற்றாக்குறையால் இந்த மின்தடை ஏற்படுவதாக வைத்துக் கொண்டால் கூட நாள் ஒன்றுக்கு எத்தனை மணி நேரம் மின்தடை ஏற்படும் என அறிவித்துவிட்டு மின்சாரத்தை நிறுத்தலாம். அதை விடுத்து திடீர் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதும் பின்னர் உயர் மின்னழுத்தத்தில் மின்விநியோகம் நடைபெறுவதும் பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.மேலும் 24 மணி நேரத்தில் எத்தனை மணி நேரம் மின்தடை ஏற்படும் என்பதை உடனடியாக பட்டியலிட்டு திருக்கோவிலூர் மின்வாரியம் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • 5 இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது.
    • போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்காமலும், வழக்குப்பதிவு செய்யாமலும் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கண்டியன் கோவில் ஊராட்சி தலைவர் கோபால், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், ஆகியோர் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியாவை சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    பல்லடம் அருகேஉள்ள பொங்கலூர் கண்டியன் கோயில் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக 5 இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து பணம், நகைகள், கொள்ளை போனதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தை அணுகி குற்ற சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளனர். இதுவரை போலீசார் எவ்வித நடவடி க்கையும் எடுக்காமலும் வழக்குப்பதிவு செய்யாமலும் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து குற்றச்சம்பவங்களில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி குற்றம் நடக்கும் பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொ ள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    • அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகள் கேட்டார்.
    • உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட பொன்னரகம் பகுதியில் உள்ள பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பின்னர் அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம் சில பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் குறைகேட்டார்.

    பின்னர் அவர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக முறையாக நடைபெறாமல் இருந்துள்ளன. இனி அனைத்து பணிகளும் நல்ல முறையில் செய்து கொடுக்கப்படும். உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், வட்ட செயலாளர் மனோ மரியதாசன், துணை செயலாளர்கள் பீரிடா லெட்சுமி, லிங்கராஜ், துரை, பொருளாளர் பரமசிவம், வட்டப்பிரதிநிதிகள் நல்லதம்பி, ஆதிநாராயணன், தமிழரசன், ஜோசப், கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா சரவணன், கவுன்சிலர் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், மற்றும் மணி, அல்பட், முன்னாள் அறங்காவலர் அறிவழகன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • துண்டு பிரசுரங்களை குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்யப்பட்ட உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது.

    செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை அரவை செய்த அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலந்து தயார் செய்யப்படுகிறது.

    இதன் மூலம் ரத்த சோகையை தடுக்கலாம். ரத்த உற்பத்திக்கும், நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் செறிவூட்டப்பட்ட அரிசி உதவுகிறது.

    இந்த நிலையில் இன்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி செறிவூட்ட ப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயரான உணவை சாப்பிட்டார்.

    இதனைத் தொடர்ந்து செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்ய ப்பட்ட உணவுகள் பொதுமக்களுக்கு வழங்க ப்பட்டு பரிமாறப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×