search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • நேற்று காலை தியாகராஜருக்கு சிறப்பு நீராட்டு விழா நடைபெற்றது.
    • 1.50 லட்சம் பேர் திரண்ட நிலையிலும் அசம்பாவிதங்களின்றி தேரோட்டம் நடந்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என கூறப்படும் இத்தேரோட்ட நிகழ்ச்சியில் சுமார் 1.50 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

    ஆழித்தேர் கோயிலின் நான்கு வீதிகளையும் சுற்றி நேற்று முன்தினம் மாலை நிலையடிக்கு வந்து சேர்ந்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று (2.4.23) காலை தியாகராஜருக்கு சிறப்பு நீராட்டு விழா நடைபெற்றது.

    மாலையில் வில்லும் அம்புமாய் முப்புரம் எரித்த மூர்த்தி வீதி உலா மற்றும் பிச்சாண்டவர் புறப்பாடு நடைபெற்றது.

    தேரோட்டம் முடிந்த பிறகு நேற்று மாலையும் ஏராளமான பொதுமக்கள் தேரை வந்து பார்த்து வணங்கி சென்றனர்.

    மேலும் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் திரளாக வந்து தேரை பார்த்து பின்னர் தியாகராஜரை வழிபட்டு, அதனைத் தொடர்ந்து கடைகளில் இருந்த பொருட்களையும் வாங்கிச் சென்றனர்.

    தேரோட்டத்தின் போது 1.50 லட்சம் பேர் திரண்ட நிலையிலும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தேரோட்டம் அமைதியாக நடைபெற்றது.

    . இந்த ஆண்டு 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் நகை திருட்டு சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.

    இரண்டு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போய் உள்ளதாக புகாராகியுள்ளது.

    மேலும் சிலரது செல்போன்கள் கூட்ட நெருக்கடியில் காணாமல் போய் இருப்பதும் தெரிய வந்தது.

    இந்த ஓரிரு சம்பவங்களை தவிர வேறு எந்த அசம்பாவிதமும் நடைபெ றாமல் பாதுகாப்பான முறையில் தேரோட்டம் நடத்தப்பட்டு இருப்பது பொதுமக்களிடத்தில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவ-மாணவிகள் அவசர கால உதவி எண்கள் அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
    • அதிராம்பட்டினம், மனோரா பஸ் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தஞ்சாவூர்:

    உலக சமூகப்பணி தின விழாவையொட்டி பொதுமக்களுக்கான அவசரகால உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வு பயணம் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கியது.

    இதில் தஞ்சை வல்லம் அடைக்கல மாதா கல்லூரி சமூகப்பணி துறை சார்பில் மாணவ-மாணவிகள் அவசர கால உதவி எண்கள் அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை கல்லூரி தாளாளர் அருணாச்சலம் தலைமையில் கல்லூரி முதல்வர் சுமதி, முதன்மையர் முனைவர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

    அவசரகால உதவி எண்கள் பயன்பாடு குறித்து எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் கல்லூரி சமூகப்பணித்துறைத் தலைவர் முத்துக்குமார், சமூக பணித்துறை பேராசிரியர்கள்வனிதா, கோபி ஆகியோர் வழிகாட்டுதலின் படி பொதுமக்களுக்கான அவசர கால உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வு பயணம் நடைப்பெற்றது.

    ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் கல்லூரி, பஸ் நிலையம், பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளி தம்பிக்கோட்டை வழியாக முத்துப்பேட்டை அண்ணா பஸ் நிலையம், அதிராம்பட்டினம் பஸ் நிலையம், மனோரா பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே சிவபுரத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், ஸ்ரீனிவாச ராமானுஜன் மைய நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.

    முகாமை புலத்தலைவர் ராமசாமி தொடங்கி வைத்தார்.

    இதில் உழவாரப்பணி, இலவச கண் பரிசோதனை, சித்த மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்றது.

    இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனர்.

    தொடர்ந்து, நடந்த கால்நடை மருத்துவ முகாமில் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும், இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வியல் முறை குறித்த கருத்தரங்கில் பேராசிரியர்கள் நரசிம்மன் மற்றும் வீரக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பின்னர், கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட பூச்செடிகள் நடப்பட்டது.

    முகாமில் சிவபுரம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன், சிவபுரம் ஊராட்சி செயலாளர் சங்கர், கோவில் தலைமை அர்ச்சகர் சதீஸ், தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம் வழிகாட்டுதல்படி, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் கணேசன், வெங்கடேஷ், ரம்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • நுழைவுச்சீட்டு இருந்தும் நரிக்குறவர் இனமக்கள் திரையரங்க வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் திரைப்படம் பார்க்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சென்னையில் உள்ள திரையரங்கில் புதிய படம் பார்க்க சென்ற நரிக்குறவர் இன மக்கள் நுழைவுச்சீட்டு இருந்தும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    இது சர்ச்சையானது.

    இந்நிலையில், தஞ்சை நகர பகுதிகளில் வாழும் சுமார் 55 நரிக்குறவர்கள் நேற்று வெளியான புதிய படத்தை திரையரங்கத்தில் கட்டண முதல் வகுப்பில் அமர்ந்து பார்க்க ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்:-

    உரிய நுழைவுச்சீட்டு இருந்தும் நரிக்குறவர் இன மக்கள் சென்னை திரையரங்க வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டது வருத்தத்துக்குரியது.

    அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நரிக்குறவர் இன மக்களுடன் ஒன்றாக அமர்ந்து தஞ்சை நகர பொதுமக்கள் திரையங்கத்தில் திரைப்படம் பார்க்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    சென்னை திரையரங்கத்தில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்பதே அனைவரின் விருப்பம் என்றனர்.

    ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • திருவாரூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி வருகிற (ஏப்ரல்) 2-ந்தேதி உடன் முடிவடைகிறது.
    • தினமும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள், பொதுமக்ககள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி வருகிற (ஏப்ரல்) 2-ந்தேதி உடன் முடிவடைகிறது.

    இதில் சுமார் 60 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் புத்தக வெளியீட்டாளர்களின் படைப்புகள் காட்சி படுத்தப்பட்டு சலுகை விலையில் விற்பனை நடைபெற்று வருகிறது.

    மேலும், மகளிர் சுயஉதவி குழுக்களின் தயாரிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    தினமும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்ககள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், இதில் மக்கள் பங்கேற்கும் விதமாக திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளரும், சமூக சேவகருமான செந்தில்குமார் கடந்த ஒரு வாரமாக திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மைக் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

    இவரது விழிப்புணர்வு மூலம் இதுவரை 2 ஆயிரத்து 542 இளைஞர்கள் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு சுமார் ரூ.30 ஆயிரம்-க்கு புத்தகம் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும், ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை சிறை துறைக்கு தானமாக வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

    இவரது இந்த பணியை பாராட்டி பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • வேளாங்கண்ணி பேரூராட்சியில் பொது மக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
    • எதிர்வரும் ஆண்டுகளில் வளர்ச்சி பணிகள் குறித்து ஒளித்தோற்றம் மூலம் விவரிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் கூட்டு உள்ளுர் திட்டக்குழும பகுதிக்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து வேளாங்கண்ணி பேரூராட்சியில் அண்ணா பல்கலைகழக தொழிற்நுட்ப வல்லுனர்களுடன், நாகப்பட்டினம் நகர் ஊரமைப்பு துறை துணை இயக்குநர் முன்னிலையில் பொது மக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

    கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் டயானா ஷர்மிளா மற்றும் துணைத்தலைவர் தாமல் ஆல்வா எடிசன் தலைமையில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் அதிபர் மற்றும் நிர்வாக தந்தையர்கள், பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக சங்க பிரநிதிநிதிகள், தங்கும் விடுதி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், அனைத்து சமுதாய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் எதிர்வரும் ஆண்டுகளில் நில வகைப்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஒளித்தோற்றம் மூலம் விவரிக்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி மற்றும் அலுவல பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • கழிவுநீர் சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள நீரோடையில் விடப்படுவதாக புகார்எழுந்துள்ளது.
    • பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சியிடம் மனு கொடுத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம்அருகே மாதப்பூரில் கோவை- திருச்சி தேசிய நெடு ஞ்சாலை, சிங்கனூர் பிரிவு அருகே தனியார் ஓட்டல் ஒன்றுசெயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள நீரோ டையில் விடப்படுவதாக புகார்எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அருகில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள் கழிவு நீரை ஓடையில் விடும் ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சியிடம்மனு கொடுத்தனர்.அந்த மனுவில்அவர்கள் கூறியிருப்பதாவது:- ஓட்டலில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு குழாய்அமைத்து நீரோடையில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இந்தகழிவுநீரானது நீரோடையில் கட்டப்ப ட்டுள்ள தடுப்பணைகளில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர்ம ட்டமும் பாதிக்கப்படுகிறது. அருகில் உள்ள விவசாய நிலங்களில்உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்ஆழ்துளை குழாயில் இருந்து வரும் குடிநீரை மக்கள் குடிக்க முடியவில்லை. துர்நாற்றத்தை கட்டுப்படுத்த ஓட்டல் நிர்வாகம் ஒருவித ரசாயனத்தை பயன்படு த்துவதாக தெரிகிறது. இந்த ரசாயனம் கலந்த நீர் அருகில் உள்ள கிணறுகளில் கலந்து அந்த நீரை குடிக்கும் மாடுகள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வளர்த்து வந்த மீன்களும் இறந்து விட்டது. ஓட்டல் நிர்வாகம் ஏற்கனவே அந்த பகுதியில் உள்ளஆழ்துளை கிணறுகளிலும் கழிவுநீரை கலந்து விடுவதாக தெரி கிறது. சுத்தகரிக்கப்படாத இந்த கழிவுநீரை அப்படியே நீரோடையில் விடுவதால் பெரும்சுற்றுச்சூழல் மாசுபாடுஏற்பட்டு வருகிறது.

    நீரோடைகளில் கழிவு நீரை கலக்கக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருந்தும்அதனை மதிக்காமல் செயல்படும் ஓட்டல் நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனால் பாதிக்கப்ப ட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் பெற்று தர வேண்டும். இந்த சட்டவிரோத செயலை உடனடியாக தடுக்க ஒன்றிய நிர்வாகமும்,அரசு அதிகாரிகளும் முன்வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில்தெரிவித்து ள்ளனர்.

    • கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வீடுகள் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
    • சமைக்காத அசைவ கழிவுகளை வீட்டுக்கு அருகில் கொட்ட கூடாது.

    திருப்பூர் :

    மலைக்கிராமங்கள், மற்றும் கிராமப்புற பகுதி களில் கோடைக்காலங்கள் வந்துவிட்டாலே பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து விடும். குளிர், மற்றும் மழைக்காலங்களில் பதுங்கி கிடக்கும் பாம்புகள் வெயில் காலம் அதற்கு ஏற்ற காலம் என்பதால் வசிப்பிடங்களில் எளிதாக வந்து செல்லும். இரவு நேரங்களில் மனிதர்கள் மிதித்துவிட்டாலோ அல்லது அதன் அருகில் சென்று விட்டாலோ அது தனது சுய பாதுகாப்புகாக கடித்து விடுகிறது. வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில் பாம்பு கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து திருப்பூர் மருத்துவர்கள் கூறுகை யில்;- கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வீடுகள், மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். செங்கற்கள், தேங்காய் மட்டைகள் மற்றும் பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறை ஆகியவற்றை அடி க்கடி பராமரித்து வைத்தி ருக்க வேண்டும்.. கூடிய வரைக்கும் செங்கற்கள், தேங்காய் மட்டைகளை வீட்டுக்கு அருகில் வைத்தி ருப்பதை தவிர்ப்பது நல்லது. சமைக்காத அசைவ கழிவுகளை வீட்டுக்கு அருகில் கொட்ட கூடாது. குழித்தோண்டி அதில் புதைத்து விட வேண்டும். இரவு நேரம் மின்விளக்குகள் எரிய வேண்டும்.

    பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து உடனடியாக ரத்த த்தை உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்று கூட ஒரு மூட நம்பிக்கை உண்டு. அதனை செய்ய கூடாது. காலம் பொன் போன்றது என்பது பாம்பு கடித்தவருக்கு தான் பொருந்தும். பாம்பு கடிப்ப ட்டவரை விரைவாக அரசு மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வது தான் நல்லது. பெரும்பாலான தனியார் மருத்துவமனை களில் பாம்பு கடி மருந்துகள் இருப்பதில்லை.

    இயற்கை மருத்துவம் எனும் பெயரில் பாம்பு கடித்த இடத்தின் அருகே கிடைக்கும் பச்சை இலை சாறை ஊற்ற வேண்டும் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இதுவரை இதற்கு அறிவியல்பூர்வமான நிரூபணம் எதுவும் இல்லை. ஆனால் இவை யாவும் அறிவியலுக்குப் பொருந்தா தவை மட்டு மல்ல, உண்மை யும் அல்ல. இவற்றால் நேரம் வீணாகி பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட வருக்கு உயிர் போகும் ஆபத்துதான் அதிகமாகும்.

    எந்த வகை பாம்பு கடித்தது என்பதை மருத்து வர்களுக்கு தெரியப்படுத்து வதற்காக அந்தப்பாம்பின் வகையை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

    பாம்பு கடித்த இடத்தின் அருகே இறுக்கமான கயிறு உள்ளிட்டவற்றை கொண்டு கட்டுவதால் எந்த ஒரு பயனும் இருக்காது. ஒரு வேளை அப்படி கட்டப்ப ட்டால் ,அந்தக்கட்டு அக ற்றப்படுவதை நல்ல மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடைய பெரிய மருத்துவ மனைகள், மருத்துவக்க ல்லூரி மருத்துவமனை கள் உள்ளிட்டவற்றில் செய்வதே நல்லது. ஏனென்றால், இறுக்கமாக கட்டப்பட்டி ருந்த கட்டு பிரிக்கப்படும் பொழுது அந்த இடத்தில் இருந்து ரத்த ஓட்டம் அதிக மாகும். இதன் காரணமாக உடலின் பிற பாகங்களுக்கும் விஷம் சென்றடைந்து பாதிப்பும் அதிகமாகும். நல்ல வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் இந்த பாதிப்பை குறைப்பதற்கான சிகிச்சைகளை எளிதில் செய்ய முடியும்.

    கடித்தது எந்த வகை பாம்பு என்று ஆராய்ச்சி செய்து நேரத்தை கடத்து வதை விட, விரைவில் பாதிக்கப்பட்டவரை மருத்து வமனைக்கு கொண்டு செல்வதில்தான் கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெ ன்றால், எந்த வகைப் பாம்பு கடித்து இருந்தாலும் பாம்பு கடிக்கு எதிராக வழங்க ப்படும் மருந்து ஒன்றுதான் கடிப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பாம்புக்கடி பட்ட பின்பு கயிறு கட்டுவதால் பலனி ல்லை என்பதையும் தாண்டி அந்த நச்சு கடிபட்ட இடத்திலேயே அதிகமாக தேங்கி இருப்பத ற்கும் கயிறு கட்டப்படுவது வழி வகுக்கும். இதன் காரணமாக கடிபட்ட இடத்தில் அணு க்கள் பாதிக்கப்பட்டு, சீழ் பிடிக்கும் நிலை கூட உண்டாகலாம் என்கிறார் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் கோபால கிருஷ்ணன். மேலும் அவர் கூறுகையில், நாக பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன். இந்த நான்கு வகைப் பாம்புகளே இந்தியாவில் அதிக பாம்பு க்கடி மரணத்துக்கு காரண மாக உள்ளன.

    ஒருவருக்கு பாம்பு கடித்தது தெரியவந்தாலோ அது கடித்து இருப்பது போல உணர்ந்தாலோ என்ன செய்ய வேண்டும் என்ற சில வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ளது. உடனடியாக கடி பட்ட இடத்தில் இறுக்க மான ஆடை அணிந்து இருந்தால் அதை அகற்ற வேண்டும். ஏனென்றால் கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றின் காரணமாக அபாயம் ஏற்படலாம். பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்க மாகக் கட்டக் கூடாது. அப்படி இறுக்க மாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும். பாம்பு கடித்த இடத்தில் வீக்கத்தை உண்டாக்காமல் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மையுள்ள பாம்புகளின் கடிகளுக்கு மட்டும் கை அல்லது கால் விரல்களில் இருந்து கடிபட்ட இடம் மற்றும் அதற்கும் மேல் பேண்டேஜ் அல்லது எலாஸ்டிக் சுற்றி நச்சு உடலின் பிற பாகங்களுக்கு பரவாமல் தடுக்கலாம். ஆனால், ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது. தசைப் பிடிப்புக்கு ஒட்டப்படும் பேண்டேஜின் இறுக்கமே போதுமானது. எலாஸ்டிக் அல்லது பேண்டேஜ் இல்லாதபோது துணி, துண்டு ஆகியவற்றை கிழித்து பயன்படுத்தலாம். கடிபட்டவர் இயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும். பார ம்பரிய மருத்துவ முறை எனும் பெயரில் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கக்கப்படாத அல்லது ஆபத்தை விளை விக்க கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையையும் செய்யக்கூ டாது. மருத்துவ வசதி கிடைக்கும் வரை பாதிக்க ப்பட்டவரை இடது பக்க மாக ரெக்கவரி பொசி ஷனில் படுக்க வைக்கவும். மேலும் பாம்பு கடிப்பட்ட வரிடம் நம்பிக்கையூட்டும் வகையில் பேசி அவர் மனப்பயத்தை போக்க வேண்டும். வாகன வசதிகள் இல்லாத கிராமப்புறங்கள் என்றால் அரசு ஆம்புலன்ஸ் வசதியை பயன்படுத்தி பாம்பு கடித்து 1 மணி நேரத்துக்குள் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சையை மேற்கொ ண்டால் பாம்பு கடிப்பட்ட வர் உயிரை காப்பாற்றி விடலாம். இவ்வாறு அவர் கூறினார். 

    • பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் கிடைக்கும்.
    • மேயரின் செயலால் சிறுமி நன்றாக படித்து தலைமை பண்பு உயரும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி 43-வது வார்டு சோழன் நகரில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 15-வது நிதிக்குழு சார்பில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதியதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

    இன்று அதன் தொடக்க விழா நடைபெற்றது.

    திறப்பு விழாவிற்கு வந்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தான் ஆள்துளை கிணறை தொடங்கி வைக்காமல் அந்தப் பகுதியை சேர்ந்த பள்ளி சிறுமி ஐஸ்வர்யா என்பவரை ஆழ்துளை கிணறை தொடங்கி வைக்க செய்தார்.

    தொடர்ந்து அந்த சிறுமியை ஊக்கப்படுத்தி நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேயர் சண். ராமநாதனின் இந்த செயலை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வரவேற்று பாராட்டினர்.

    மேலும் மேயரின் செயலால் சிறுமி நன்றாக படித்து தலைமை பண்பு உயரும் என்றனர்.

    தொடர்ந்து சிறுமிக்கு ஐஸ்வர்யா என்று தமிழில் பெயர் வைத்ததற்காக அவரது பெற்றோரை மேயர் சண் ராமநாதன் பாராட்டினார்.

    இந்த புதிய ஆழ்துளை கிணறு மூலம் சோழன் நகர், பாலாஜி நகர் பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் கிடைக்கும்.

    இதையடுத்து அந்தப் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்து உடனே நிறைவேற்றுவதாக மேயர் சண். ராமநாதன் உறுதியளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ், கவுன்சிலர் ஹைஜாகனி, ஒப்பந்ததாரர் பாரி, குழாய் பொருத்துனர் பிரபாகர், 43- வது வார்டு செயலாளர் ராஜரத்தினம் என்ற ஜித்து, பகுதி பிரதிநிதி வாசிம்ராஜா, 45-வது வார்டு செயலாளர் சுரேஷ் ரோச் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வெயில் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் வெளியில் சென்று வருகின்றனர்.
    • நீர்மோர் பந்தலை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

    வெப்ப சலனம் அதிகம் உள்ள காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் வெளியில் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், வெயிலை சமாளிக்க பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற நகரின் முக்கிய இடங்களில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல், மயிலாடுதுறை ஆஞ்சநேயர் கோவில் அருகே தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

    பின்னர், பொதுமக்களுக்கு நீர்மோர், தர்ப்பூசணி பழங்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர் சதீஷ்குமார், தன்னார்வலர் ஆனந்தன் மற்றும் கலந்து கொண்டனர்.

    • இணையதள சேவைகளை மக்களுக்கான பொது இணையதளம் வழியாக வழங்கி வருகிறது.
    • மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்குவதாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்க ளையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் ஏற்படுத்திடும் வகையில் தொடங்கப்ப ட்டுள்ளது.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி. நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கி வருகிறது.

    மேலும் அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவரவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் நோக்கமானது அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்தவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து இ-சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பி டத்திற்கு அருகிலேயே வழங்குவதாகும்.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண்ண ப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இந்த திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க www.tnesevai.tn.gov.in, tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தவும். அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதி வரை விண்ணப்பங்களை காலை 11.30 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆகும். நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும். இந்த விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு உரிய பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மது ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • சமூக ஆர்வலர்கள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே 10 வது வார்டு மௌலானாதோப்பு பகுதியில் இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் மற்றும் மது ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், தஞ்சாவூர் தொழிலாளர் துறை செயல் அலுவலர், பட்டுக்கோட்டை கலால் பிரிவு தனி வட்டாட்சியர், மதுக்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் வகிதா பேகம் ஹாஜா மைதீன், பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலைவர் வீரமணி, மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள், மதுக்கூர் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் நாட்டுப்புற கலைஞர்கள்மூலம் இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் மற்றும் மது ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவுன்சிலர் கோமதி சின்னத்தம்பி செய்திருந்தார்.

    ×