search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • உணவு பாதுகாப்பு விதிமுறையின்படி விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் எடை, விற்பனை விலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.
    • அதிகாரிகளின் சுணக்கம் காரணமாக தரமற்ற உணவு பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது

    திருப்பூர் :

    உணவு பாதுகாப்பு விதிமுறையின்படி விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் எடை, விற்பனை விலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான உணவுப் பொருட்களில் மேற்கூறிய விவரங்கள் எதுவும் இன்றி வெளிப்படையாக வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

    இதுபோன்று தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் விற்கப்படும் உணவுப் பொருட்களால் பொது மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் சுணக்கம் காரணமாக, தரமற்ற உணவு பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது.இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை வட்டார அலுவலர் கேசவராஜ் கூறுகையில், இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • புதிய மின்சார இணைப்பு தொடர்பு கிடைக்காமல் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஷ்டப்படுகின்றனர்.
    • இரவில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதோடு போர்வெல் அமைத்தும் குடிநீருக்காக கஷ்டபடுகின்றனர் .

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் தஞ்சை கோர்ட் சாலையில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த முத்துக்குமரன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் தாலுகா நீலகிரி ஊராட்சியில் உள்ள கலைஞர் நகரில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

    ஏராளமானோர் பல மாதங்களாக வீடுகள் மற்றும் கடைகளுக்கு புதிதாக மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்து மனு அளித்து காத்திருக்கின்றனர்.

    புதிய மின்சார இணைப்பு தொடர்பு கிடைக்காமல் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயில்வதற்கு இரவில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதோடு போர்வெல் அமைத்தும் குடிநீருக்காக கஷ்டபடுகின்றனர் .

    எனவே உடனடியாக மின் இணைப்பு வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கவுரை.
    • சுகாதார துறையினர் கொரோனா காலங்களில் ஆற்றிய பணி மகத்தானது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக வட்டார சுகாதார மன்ற கூட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் வரவேற்று பேசினார்.

    அம்மாபேட்டை வட்டார மருத்துவ அலுவலர் அஜந்தன் மருத்துவம் மற்றும் சுகாதாரதுறையின் சார்பில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும்மருத்துவ சிகிச்சைகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.

    இந்த கூட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், கலந்து கொண்டு தலைமையுரை நிகழ்த்தினார்.

    அப்போது சுகாதார துறையினர் கொரோனா காலங்களில் ஆற்றிய பணி மகத்தானது தொடர்ந்து சுகாதார துறையினர் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என பேசினார்.

    கூட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றியத்தைசேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள்.

    அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    இறுதியில் சுகாதார ஆய்வாளர் பெரியண்ணன் நன்றி கூறினார்.

    • 2019ம் ஆண்டு இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது 97 சதவீத பணிகள் முடிந்தும் கடந்த சில மாதங்களாக பணி மந்தநிலையில் உள்ளது.
    • மழைநீர் வீணாகி கடலில் கலக்கிறது.

    அவினாசி :

    திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்டத்தில் உள்ள 50 லட்சம் மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடந்தது.இறுதியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அவினாசி புதிய பஸ் நிலையில் அருகில் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டதன் பலனாக கடந்த 2019ம்ஆண்டு இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது 97 சதவீத பணிகள் முடிந்தும் கடந்த சில மாதங்களாக பணி மந்தநிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

    எம்.வேலுசாமி:

    கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசி திட்டம் என்றும் பின்னர் குந்தா கழிவுநீர் திட்டம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த அத்திக்கடவு அவினாசி திட்டம் 1963 ஆம் ஆண்டு காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது நிறைவேறும் என நம்பிக்கை இருந்தது. அதன்பிறகு பக்தவச்சலம் ஆட்சிக்கு வந்த போது திட்டம் நிறைவேறாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு வந்த ஆட்சியாளர்களும் இது பற்றி பெரிய அளவில் எந்த தீவிர முயற்சி எடுக்கவில்லை .கண்துடைப்பாகஇருந்து வந்தது.

    2000-மாவது ஆண்டில்ராஜ சேனாதிபதி இத்திட்டத்திற்காக பலமுறை உண்ணாவிரதம் இருந்தார்.மேலும் இத்திட்டத்தை முன்வைத்து 2001 ம் ஆண்டில் விவசாயிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அப்போது வெறும் 19000 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போதும் ஆட்சியாளர்கள் இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததால் இத்திட்டம் நிறைவேற வேண்டிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனால் அப்போதைய அரசு ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் திட்டத்திற்கான அரசாணை வெளியிட்டது . அதன் பிறகு உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. 97 சதவீதம் முடிவடைந்த இத் திட்டம் ஏனோ காலதாமதமாகிறது .இதனால் மழைநீர் வீணாகி கடலில் கலக்கிறது. நீர் ஆதாரம் பெருகவும், நலிவடைந்துவரும் விவசாயம் மீண்டும் புத்துயிர்பெறவும் அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு 50 லட்சம் மக்களின் 50 ஆண்டுகனவை நனவாக்கும் என்று நம்பியுள்ளோம்.

    சுப்பிரமணியம்:

    கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணியானது தற்பொழுது 96 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விரைவில் திட்டம் வரக்கூடிய நிலையில் உள்ளது. இதன் மூலம் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெருந்துறை முதல் காரமடை சர்க்கார் சாமக்குளம் வரை உள்ள குளம் குட்டைகள் எல்லாம் இத்திட்டத்தின் மூலம் இணைக்கப்படுகிறது . அடிப்படையில் இது ஒரு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகும்.திட்டத்தால் பயன்படக்கூடிய நீர் நிலைகள் எல்லாம் தூர்வாரி தேக்குவதற்கு தயாராக உள்ளதா என்று கேட்டால் கேள்விக்குறியே.

    இந்த திட்டமானது 1.5 டிஎம்.சி. பவானி ஆற்று நீரை கொண்டு 32 பொதுப்பணித்துறை ஏரிகளும் 42 ஊராட்சி ஒன்றிய குளங்களும் 971 தடுப்பணை மற்றும் குட்டைகளும் செறிவூட்டப்பட உள்ளது.

    எனவே திட்டப் பணிகள் முடிப்பதற்கு முன்பு பொதுப்பணித்துறை ஏரிகளையும் ஊராட்சி ஒன்றிய குளங்களையும் நீர்வளத்துறை மூலம் தூர்வாரி ஆழப்படுத்தி அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் வருவாய்த்துறை மூலம் கணக்கீடு செய்து அகற்றி தயார்படுத்தி வைக்க வேண்டும்.

    அவ்வாறு செய்தால் மட்டுமே மழைக்காலங்களில் கிடைக்கக்கூடிய நீரை முழுமையாக நமது குளம் குட்டைகளில் சேமித்து நிலத்தடி நீர் செறிவூட்டம் பெற செய்ய முடியும்.

    எனவே நீர்வளத்துறையானதுபோர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமாறு அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்ட குழு சார்பில் கோரிக்கை வைக்கிறோம். மேலும் மீதமுள்ள நான்கு சதவீதம் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்தால்தான் இந்தப் பருவமழை காலத்தில் கிடைக்கக்கூடிய வெள்ள உபரி நீரைக்கொண்டு குளம் குட்டைகளை நிரப்ப முடியும்.மேலும் இத்திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளுக்கான ஆய்வுப்பணிகளுக்காக நிதி ஒதுக்கி விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

    சதீஸ்:

    அவினாசி அத்திக்கடவு திட்டம் எங்கெல்லாம் செயல்பாட்டுக்கு வருகின்றதோ அங்கெல்லாம் உயிர் சூழல் உருவாகும். நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. குளம் குட்டைகளில் நீர் நிரம்பும் போது 3மாவட்டங்களிலும் பசுமை போர்த்தி சீதோஷ்ண நிலை மாறுதல் ஏற்படும். எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவில் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    சம்பத்:

    அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட 1000 குளம் குட்டைகளுக்கு ஒரு திட்டம் தயாரித்து நிதி ஒதுக்கி விரைவில் பணிகளை தொடங்க வேண்டும். அனைத்து கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளின் கரைகளில் அதிகப்படியான பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் .ஊராட்சி நகராட்சி நிர்வாகம் வீடு தோறும் நெகிழி கழிவுகளை பிரித்து வாங்க வேண்டும் .இதனால் மண்ணை நாம் காக்க முடியும் என்றார். 

    • கூட்டத்துக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • கடந்த ஒரு வருடமாக குடிநீர் வினியோகம் சரிவர வழங்கப்படுவதில்லை என மனுவில் கூறியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்துக்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாளை சாந்தி நகர் பொதுநல அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தங்கையா மற்றும் 6-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் பவுல்ராஜ் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மேயரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சாந்தி நகர் பகுதிகளில் வீடுகளுக்கு கடந்த ஆண்டு வரை குடிநீர் விநியோகம் மிகச் சிறப்பாக வழங்கப்பட்டு வந்தது . ஆனால் கடந்த ஒரு வருடமாக குடிநீர் வினியோகம் சரிவர வழங்கப்படுவதில்லை. எனவே உடனடியாக பழையபடி சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சாந்தி நகர் 24, 25, 26, 29-வது குறுக்குத் தெருக்களில் பழுதான சாலைகளை சரி செய்வதற்காக சாலை முழுவதும் ஜல்லியை நிரப்பி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. ஆனால் இதுவரை சாலை போடப்படவில்லை. இதேபோல் சாந்தி நகர் 6-வது பிரதான சாலையில் தார் சாலை அமைக்கும் போது விநாயகர் கோவில் அருகில் இருந்த வேகத்தடையை அகற்றி விட்டனர்.

    அந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் உடனடியாக அதனை மீண்டும் அமைத்து தர வேண்டும். இதே போல் சாந்தி நகர் 30-வது தெருவில் மேற்கு பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். பாளை மண்டலம் 5, 6 மற்றும் 7- வது வார்டுகளில் உள்ள பிரதான சாலைகள் 50 அடி அகலம் கொண்ட சாலைகளாகும். தூத்துக்குடி மற்றும் சீவலப்பேரி சாலைகளை இணைக்க கூடிய இந்த சாலைகளில் பெரிய அளவிலான எல்.இ.டி. விளக்குகள் அமைத்துள்ளனர். அதே போல் 2-வது மற்றும் 7-வது பிரதான சாலைகளிலும் பெரிய எல்.இ.டி. விளக்குகள் அமைக்க வேண்டும்.

    மேலும் சாந்தி நகர் மணிக்கூண்டு பகுதியில் மழைக்காலங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் செல்ல வழி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது அவர்களுடன் சங்கத்தின் செயலாளர் அசுவதி, பொருளாளர் தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் அசரப் அலி, அலெக்சாண்டர், பாலசுப்ர மணியன், அப்பாத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    எஸ் என் ஹைரோடு வியாபாரிகள்

    சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் சிலுவைப் பிச்சை தலைமையில் வியாபாரிகள் சங்கத்தினர் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆண்டு கணக்கில் பாதாள சாக்கடை திட்டத்தின் காரணமாக பாதிப்படைந்து கிடக்கும் தச்சநல்லூர் ஊருடையார்புரம் சாலை பணியை தீவிரப்படுத்த வேண்டும். சமீபத்தில் மேயர் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அதன் தொடர்ச்சியாக அந்த சாலையில் ஒரு பகுதி சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த சாலை பணியை முழுவதுமாக முடிப்பதற்கு ஒப்பந்ததாரர்களை முடுக்கி விட வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    டவுன் பூதத்தார் மூக்கு வியாபாரிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், டவுன் கீழரத வீதி மார்க்கெட் பகுதியில் பூதத்தார் சன்னதி தெருவில் 40 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கழிப்பிடம் தற்போது சேதம் அடைந்து கிடக்கிறது. அதனை உடனடியாக சீரமைத்து அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வந்து செல்பவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என கூறியிருந்தனர்.

    • அரசுக்கு சொந்தமான ஓடை நீர்வழி மற்றும் மந்தை புறம்போக்கு நிலம் சுமார் 10 ஏக்கர் உள்ளது.
    • பலவகை மரம், செடி,கொடிகள் நடப்பட்டு வனம் உருவாக்கி வைத்துள்ளனர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டி கொத்துமுட்டி பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஓடை நீர்வழி மற்றும் மந்தை புறம்போக்கு நிலம் சுமார் 10 ஏக்கர் உள்ளது. இந்த பகுதி பொதுமக்கள் அந்த நிலத்தில் முல்லைவனம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பலவகை மரம், செடி,கொடிகள் நடப்பட்டு வனம் உருவாக்கி வைத்துள்ளனர். இதனிடையே இந்த அரசு நிலத்தில் சுமார் 5 ஏக்கர் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கி தர அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதனிடையே அவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து கொத்துமுட்டி பாளையத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வனத்தை அளித்து பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட்டு மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து தாசில்தார் நந்தகோபாலிடம் மனு அளித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு நிலத்தில் பல ஆயிரக்கணக்கான நிழல் தரும் கனி தரும் மரம்,செடி,கொடிகளை நட்டு பொதுமக்கள் பராமரித்து வரும் நிலையில் அதனை அழித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கூட்டத்திற்கு கிராமமக்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண உடனடியாக சம்பந்தபட்ட துறைக்கு அனுப்பி வைக்கபட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் சமூக நல திட்ட தாசில்தார் ரமேஷ், மீன் துறை ஆய்வாளர் நடேசராஜா, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி ஆனந்தராஜ், தோட்ட கலை துறை உதவி அலுவலர் கார்த்திக், கூட்டுறவுத்துறை சார்பாதிவாளர் முத்துராஜா, வறுமை கோட்டு திட்ட அலுவலர் சியாமளா, மகளிர் சுய உதவி குழுவினர், கிராம மக்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் 6 மனுக்கள் மட்டுமே அளித்தனர். அதற்கு தீர்வுகாண உடனடியாக சம்பந்தபட்ட துறைக்கு அனுப்பி வைக்கபட்டது. கூட்டத்தில் மாற்று திறனாளிக்கு சான்றிதழை ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் வழங்கினார். முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் அழகேசன் நன்றி கூறினார். 

    • சமையல் உணவு வங்கி சார்பில் பசி என்று வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்வு.
    • பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

    திருத்துறைப்பூண்டி:

    பாரத மாதா சேவை நிறுவனங்களின் சார்பில் "சமுதாய சமையல் உணவு வங்கி பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு ஏழை,எளிய, நலிவுற்ற புலம்பெயர்ந்த விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பசியாற இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    திருவாரூரில் பாரதமாதா சமுதாய சமையல் உணவு வங்கி சார்பில் பசி என்று வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்வை திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

    பாரதமாதா சேவை நிறுவன ஆற்றுப்படுத்துனர் சங்கீதா மணிமாறன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, திருவாரூர் நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், நகர் மன்ற உறுப்பினரும் திமுக நகர செயலாளருமான வாரை பிரகாஷ், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், சமூக பாதுகாப்புத்துறை நன்னடத்தை அலுவலர் புஷ்பராஜ், குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் தமிழரசன், தமிழக இயற்கை உழவர் இயக்க நிறுவனர் வரதராஜன், நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் அண்ணாதுரை, முத்தமிழ் பண்பாட்டு பேரவை தலைவர் கவிஞர் ஆரூர் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தர்மலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் நன்றி கூறினார்.

    உணவு வங்கி தொடர்பான பணிகளை பாரதமாதா சேவை நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துர்கா தேவி அருண் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து பாதுகாப்பாக அகற்றும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது
    • சிதம்பராபுரம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த 620 குடும்பத்தினருக்கு மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து அகற்றும் விதமாக தலா 2 வீதம் 1,240 கூடைகள் வழங்கினார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து பாதுகாப்பாக அகற்றும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராதாபுரம் யூனியன் சிதம்பரபுரம் ஊராட்சி பிரகாசபுரம் கிராமத்தில் குப்பைகளை சேகரித்து அகற்றும் நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கூடைகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாவட்ட திட்ட அலுவலர் பழனி பிரகாசபுரம், ஆத்துகுறிச்சி , சிதம்பராபுரம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த 620 குடும்பத்தினருக்கு மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து அகற்றும் விதமாக தலா 2 வீதம் 1,240 கூடைகள் வழங்கினார். இதில் ராதாபுரம் பங்குத்தந்தை ராபின் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மரக்கன்றுகள் நடுவதன் பலன் குறித்தும், பொதுமக்களிடம் விளக்கம் அளித்தார். வீடுகள் தோறும் துண்டு பிரசுரம் அளித்தும் வீடுகளில் ஒட்டியும் பிரசார பேரணி நடத்தப்பட்டது. பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் நடவடிக்கையாக அனைத்து பொதுமக்களுக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டு பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது. இதையொட்டி 200 மரக்கன்றுகள் நடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் சுகாதார குறித்த பணிகளை மேற்கொள்வது சம்பந்தமாக அனைத்து பொதுமக்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    • எம்.பி.ஆர்.லேஅவுட் பகுதியில் அதிக அளவில் வீடுகள் உள்ளது.
    • வீடுகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் வெளியேறுவதற்கு போதுமான கட்டமைப்பு வசதி இல்லலை.

    அவினாசி :

    அவினாசி சூளை பகுதியில் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் சாக்கடை நீர் குட்டைபோல் தேங்குவதால் பொதுமக்கள் பாதிககப்படுகின்றனர்.இதுகுறித்து எம்.பி.ஆர்.லேஅவுட் குடியிருப்புவாசிகள் கூறியதாவது:-

    எம்.பி.ஆர்.லேஅவுட் பகுதியில் அதிக அளவில் வீடுகள் உள்ளது. இதற்கு அருகில் தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அங்கு ள்ள நூற்றுகணக்கான வீடுகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் வெளியேறுவதற்கு போதுமான கட்டமைப்பு வசதி இல்லாததால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் எங்கள் எம்.ஆர்.பி.லேஅவுட் பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு சாக்கடை நீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதில் துர் நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களை தொற்றுநோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிசை மாற்றுவாரியத்தினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • குறிச்சி, குலவணிகர்புரம், கொக்கிரக்குளம் பகுதியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். இங்கு 10,15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.
    • தற்போது அணை மற்றும் ஆற்றில் தண்ணீர் போதிய அளவு உள்ளது. ஆற்றின் அருகே எங்கள் பகுதி அமைந்து இருந்தாலும், 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.

    நெல்லை:

    மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 31-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் அமுதா தலைமையில் வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களை சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து ஒரு மனு கொடுத்தனர்.அதில் கூறியிருப்பதாவது:-

    31-வது வார்டுக்குட்பட்ட குறிச்சி, குலவணிகர்புரம், கொக்கிரக்குளம் பகுதியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். இங்கு 10,15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.

    தற்போது அணை மற்றும் ஆற்றில் தண்ணீர் போதிய அளவு உள்ளது. ஆற்றின் அருகே எங்கள் பகுதி அமைந்து இருந்தாலும், 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மேயர், மேலப்பாளையம் மண்டல அலுவலகம் ஆகியவற்றில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை நடக்கவில்லை.

    மேலும் எங்கள் பகுதியில் சாலை வசதிகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் உள்ளது. அ.தி.மு.க. கவுன்சிலருக்குட்பட்ட பகுதி என்பதால் எங்கள் பகுதியை புறக்கணிப்பதாக சந்தேகம் வந்துள்ளது.

    எனவே எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மூன்று கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
    • எம்.எல்.ஏ. தலைமை வகித்து புதிய மின்மாற்றிகளை இயக்கிவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட கடலோர கிராமங்களான தாழந்தொண்டி, தொடுவாய், தாண்டவன்குளம் ஆகிய மூன்று கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக மின் சாதன பொருட்களும் பழுதடைந்து வந்ததால் தங்கள் பகுதிக்கு புதிய மின்மாற்றி அமைத்து தர கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடலோர கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தொடுவாய் உட்பட 3 கிராமங்களிலும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. இதனை எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை வகித்து புதிய மின்மாற்றிகளை இயக்கிவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    விழாவில் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி, சீர்காழி உதவி செயற்பொறியாளர்கள் விஜயபாரதி, விஸ்வநாதன், உதவி மின்பொறியாளர் சுபத்ரா, உதவி மின்பொறியாளர் முத்துக்குமார், கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் செல்லசேதுரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×