search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • சரணாலயம் அமைத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என கருத்தைக் கூறி கடும் எதிர்ப்பை விவசாயிகள் பதிவு செய்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் ஜெய்னுலாப்தீன், மாவட்ட வன அலுவலர் முருகன், தென்காசி வட்டாச்சியர் அருணாசலம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர்(மத்திய மற்றும் மாநில திட்டங்கள்) நல்லமுத்துராஜா, கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன், வேளாண்மை அலுவலர் அபிராமி, துணை வேளாண்மை அலுவலர் சுப்ராம், தோட்டக்கலை அலுவலர் சபா பாத்திமா, வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன், தோட்டக்கலை உதவி அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பஞ்சாயத்து தலைவர்கள் ரவணசமுத்திரம் முகமது உசேன் வீராசமுத்திரம் ஜீனத் பர்வீன் யாகூப்,மந்தியூர் கல்யாண சுந்தரம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வின்சென்ட் மற்றும் வாகைக்குளம், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் பறவைகள் சரணாலயம் அமைக்ககூடாது என்றும் , சரணாலயம் அமைத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என கருத்தைக் கூறி கடும் எதிர்ப்பை விவசாயிகள் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • மழை, வெள்ளம் ஏற்படும்போது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும்.
    • நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி அளிப்பது குறித்து விளக்கம் பொதுமக்களிடையே செய்து காண்பிக்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆலங்குடியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் அவசரகால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மழை, வெள்ளம் ஏற்படும்போது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடையே செய்து காண்பிக்கப்பட்டது. நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி அளிப்பது குறித்து விளக்கம் பொதுமக்களிடையே செய்து காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் தமிழ்நாடு பார்வையாளர் உமா மகேஸ்வரராவ், திருவாரூர் மாவட்ட டி.ஆர்.ஓ. சங்கீதா, வலங்கைமான் பேரிடர் மீட்பு பார்வையாளர் விஜயன், வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் ஆனந்தன், ரெட் கிராஸ் அமைப்பின் தேசிய பேரிடர் மீட்பு குழு பயிற்றுனர் பெஞ்சமின், ரெட் கிராஸ் திருவாரூர் மாவட்ட அலுவலர் ஏழுமலை, வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வடிவேல், வலங்கைமான் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன், எழுத்தர் வெக்காளிஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோவில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டன.
    • குதிரை விநாயகர், எலி விநாயகர், வீர விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 3 முதல் 7 அடி வரை உள்ள பலவண்ண நிறத்தில் பக்தர்களை கவரும் வகையில் இருந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.

    மயிலாடுதுறையில் 41 இடங்களில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் கரைக்கப்பட்டன.

    விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவ ட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பல்வேறு கோயில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபா ட்டிற்காக வைக்கப்பட்டன.

    மயிலாடுதுறையில் செம்மங்குளம் முனீஸ்வரர் ஆலயத்தில் எழுச்சி விநாயகர், மாயூரநாதர் கீழவீதி;

    பரிவார விநாயகர் மற்றும் காமதேனு விநாயகர், குதிரை விநாயகர், எலி விநாயகர், வீர விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 7 அடிவரை உள்ள பலவண்ண நிறத்தில் பக்தர்களை கவரும் வகையில்;

    விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் சரன்ராஜ் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்க ப்பட்டு வருகின்றன.

    மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் 3-ஆம் நாளான நேற்று ஊர்வமாக முக்கிய நகர சாலை வழியாக துலா கட்டம் வந்தடைந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளர் பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், இந்து முன்னணி பொதுச் செயலாளர் சுவாமிநாதன், முத்துக்குமார், பாஜக ஒருங்கிணைப்பாளர் நாஞ்சில் பாலு, நகர தலைவர் வினோத் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திர பதிவு தொடர்பான பல்வேறு பணிகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
    • தினமும் 100க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

    பல்லடம் :

    பல்லடம் மங்கலம் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பத்திரம் பதிவு செய்வதற்காக பல்லடம், பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திர பதிவு தொடர்பான பல்வேறு பணிகளுக்கு தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் தினமும் 100க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

    இந்தநிலையில் நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில், முகூர்த்த நாள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். பத்திரப்பதிவுஅலுவலகத்தினுள், மற்றும் முன்புற வாயில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டனர்.மேலும் அலுவலகத்திற்குள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இணையத்தள சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு செய்வது தாமதமானது. இதனால் இரவு 8 மணிக்கு மேலும் பத்திரப்பதிவு நடந்தது. பத்திரப்பதிவுக்கு வந்திருந்த ஒருவர் கூறுகையில் :- பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த சில நாட்களாகவே மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் இணையதள சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு தாமதமாகிறது.

    இருந்தபோதிலும் பத்திரப்பதிவு அலுவலர்கள் பணி நேரம் முடிந்தும் கூட பொதுமக்களுக்காக பணியாற்றி பத்திரங்களை பதிவு செய்து தந்தனர். அரசு இணையதள சர்வர் பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் காலதாமதம் குறையும் என்றார்.  

    • ரூ.96.11கோடியில் 1280 அடுக்குமாடி குடியிருப்புகள் பலவஞ்சிபாளையம் பகுதியில் கட்டிதரப்பட்டது.
    • அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலரும் மாநாகராட்சி மேயரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் நொய்யல் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.96.11கோடியில் 1280 அடுக்குமாடி குடியிருப்புகள் பலவஞ்சிபாளையம் பகுதியில் கட்டிதரப்பட்டது. தற்பொழுது நொய்யல் கரையோரம் வசித்து வந்த பலரும் இப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடிசை மாற்று வாரியம் கொடுத்த குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலரும் நேற்று திருப்பூர் மாநாகராட்சி மேயரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட மேயர் உடனடியாக அப்பகுதிக்கு ஆய்வுக்கு வருவதாக தெரிவித்தார்.அதன்படி அப்பகுதிக்கு சென்ற மேயர் தினேஷ்குமார் குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி,மின்சாரவிளக்கு ,தார்சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது அப்பகுதி மக்கள் கூறுகையில் ,போதிய அடிப்படை வசதிகள் இல்லை .பல நாட்களாக குடிநீரின்றி இருப்பதாகவும் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வருவதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். குடியிருப்பில் பல வீடுகளின் ஐன்னல் கதவுகள் உடைந்து உள்ளது. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் இப்பகுதிக்கு குறித்த நேரத்திற்கு பேருந்துகள் வருவதில்லை . இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள்,வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் அவதிப்படுகிறார்கள் என்று தெரிவித்தனர்.

    இது குறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆகியோருடன் பிரச்சனைகள் பற்றி மேயர் கேட்டறிந்தார்.பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

    • 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • டைட்டல் பார்க் அமைப்பதற்காக பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி 3-வது வார்டில் குடியிருப்புகள் நடுவில் சாக்கடை கழிவுநீரை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலுக்கு முயற்சி செய்த பொதுமக்களிடம் நகராட்சி தலைவர் குமார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட வி.ஜி.வி. ஸ்ரீ கார்டனில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வகையில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் அதே பகுதியில் டைட்டல் பார்க் அமைப்பதற்காக பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

    இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் டைட்டல் பார்க் கட்டுமான பணியின் போது வெளியேறும் கழிவுநீர் அனைத்தையும் வி.ஜி.வி. ஸ்ரீகார்டன் வழியாக செல்லும் வகையில் புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அணைபுதூர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புதிய அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள பாறைக்குழியில் தேங்கி வருகிறது. தற்போது ஒட்டு மொத்த கழிவுநீரும் வி.ஜி.வி. ஸ்ரீகார்டன் வழியாக செல்வதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று கூறியும், குடியிருப்புகள் வழியாக கழிவுநீரை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வி.ஜி.வி. ஸ்ரீ கார்டன் குடியிருப்போர் சங்க தலைவர் கிறிஸ்டோபர், செயலாளர் பத்மநாபன், மத்திய அரசின் நலஉதவி பிரிவின் பா.ஜ.க. திருமுருகன்பூண்டி மண்டல் தலைவர் தரணிபதி ஆகியோர் தலைமையில் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலைமறியல் செய்வதற்காக அந்த பகுதியில் திரண்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணலாம் என்றும், மறியலில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறினார். இதனால் மறியல் முயற்சியை பொதுமக்கள் கைவிட்டனர். மேலும் உடடினயாக அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து நகராட்சி தலைவர் குமார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது குடியிருப்புகள் மத்தியில் சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீரை கொண்டு சென்றால் சுகாதார சீர்கேடு ஏற்படும் , பாதாள சாக்கடை அமைத்து அதன் வழியாக கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நகராட்சி தலைவர் குமார், சாக்கடை கால்வாயை விரிவுப்படுத்தி கழிவுநீர் எளிதாக செல்லும் வகையிலும், கால்வாயின் மேற்பகுதியை முற்றிலுமாக மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். பின்னர் கால்வாயை அகலப்படுத்துவதற்காக அளவெடுக்கும் பணியும் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்களை மிரட்டிய 4 ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பெண்களை கேலிக்கிண்டல் செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்றவை அதிகரித்துள்ளன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அம்பலப்புளி பஜார் முருகன் கோவில் தெரு குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இங்கு சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ், கார்த்தி, சக்திவேல் உள்பட 4 பேர் பட்டாக்கத்தியை காட்டி அந்த வழியாக வந்த பொதுமக்களை மிரட்டி தகாத வார்த்தைகளில் பேசினர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் வந்த வாலிபரை கும்பல் மறித்தது. தொடர்ந்து அந்த பெண்ணை பொது இடத்தில் கேலி கிண்டல் செய்து அவதூறாக பேசினர். 4 பேரும் ஆயுதங்களை வைத்திருந்ததால் அப்பகுதி மக்கள் அவர்களை தட்டி கேட்க வில்லை.

    பொது இடத்தில் ஆயுதங்களை வைத்து பொதுமக்களை மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டிய 4 ரவுடிகளை தேடி வருகிறார்.

    ராஜபாளையம் அம்பலப்புலி பஜார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக விரோதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தனியாக செல்லும் பெண்களை கேலிக்கிண்டல் செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்றவை அதிகரித்துள்ளன. எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 1 1/2 சென்ட் இடம் வழங்கப்பட்டது.
    • ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில், திருப்பூர் ஜம்மனை பள்ளம், சங்கிலிப் பள்ளம் ஆகிய பகுதிகளில் ஓடைப் புறம்போக்கில் வசித்த சுமார் 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 1 1/2 சென்ட் இடம் வழங்கப்பட்டது. இதில் அவர்களது பொருளாதாரத்திற்கு ஏற்ப வீடுகள் அமைத்துக் கொண்டனர். இதில் ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மீதமுள்ள 200 வீடுகளுக்கு, மின் இணைப்பு தர, மின் வாரியத்தினர் தடையில்லாச் சான்று வேண்டும் என்று கேட்பதாகவும் இது குறித்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும், இதுவரை தடையில்லாச் சான்று வழங்கப்படவில்லை.

    இதனால் உடனடியாக தடையில்லா சான்று வழங்க கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.இதன்படி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்காக வந்த, அறிவொளி நகர் வார்டு உறுப்பினர் சையது ஒளி பானு மற்றும் பொதுமக்களிடம்,பல்லடம் தாசில்தார் நந்தகோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கு உள்ள குடிசை மாற்று வாரிய பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், மந்தை புறம்போக்கு நிலம் என்று ஆவணங்களில் உள்ள வீடுகளுக்கு கால்நடை துறை அதிகாரிகளுடன் வரும் 2-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தாசில்தார் தெரிவித்ததை அடுத்து சமாதானமடைந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த பேச்சுவார்த்தையின்போது பல்லடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், தண்ணீர்பந்தல் நடராஜன், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிமன்ற துணை தலைவர் செல்லத்துரை, முன்னாள் ஊராட்சி தலைவர் சின்னப்பன்,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மழையால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் ரோட்டில் சென்றது.
    • வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டனர்.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடையில் நேற்று மாலை பெய்த மழையால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் ரோட்டில் சென்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றதோடு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டனர்.மேலும் அப்பகுதி வீடுகளிலும் மழைநீர் சூழ்ந்தது.சாலையோரம் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளின் கடைகளின் முன்பு சாக்கடை நீர் தேங்கியது.

    சாக்கடை அடைப்பை நீக்க கோரி பலமுறை அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    • திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் துணிகளை துவைக்க அனுமதிக்ககோரி பொதுமக்கள் உண்ணாவிரதம் நடந்தது.
    • இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உட்பட்டது சரவணப் பொய்கை. புனித தீர்த்தமான இங்கு பொதுமக்கள் துணிகளை துவைக்கவும், குளிக்கவும், ரசாயன கலவைகள் உபயோகப்படுத்துவதால் தண்ணீர் மாசடைந்து அசுத்தம் ஏற்பட்டது.

    இதனை தடுக்கும் வகையில் இந்த பகுதி மக்கள் சலவை செய்ய ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் சரவணப் பொய்கை அருகில் குளியலறை மற்றும் சலவை கூடம் கட்டப்பட்டது. அதில் பொதுமக்கள் சலவை செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் சலவை கூடத்தில் துவைக்க செல்ல மாட்டோம், பாரம்பரியமாக சரவணப்பொய்கையில் துணிகளை துவைத்து வருகிறோம். மீண்டும் எங்களுக்கு அந்த பகுதியில் துணிகளை துவைக்க அனுமதியளிக்க வேண்டும் என்றுகூறி பொதுமக்கள் சில நாட்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து அேத கோரிக்கையை வலியுறுத்தி இன்று சரவணப் பொய்கை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ெபாதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் புனித தீர்த்தமாக பயன்படுத்தும் சரவணப்பொய்கை பகுதியில் சலவை செய்து அசுத்தம் ஏற்படுத்துவதால் சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் முற்றிலும் மாசடைந்து, அதில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இதையடுத்து மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சரவணப் பொய்கையை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    தற்போது சரவணப் பொய்கை தூய்மையாக இருக்கும் நிலையில் அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் சரவணப் பொய்கை பகுதியில் ரசாயன கலவைகள் கொண்டு துணிகள் துவைப்பதற்கு தடை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயனாளிகள் குறித்த மறு கணக்கெடுப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது.
    • அரசு மானிய திட்டத்துக்காக பொதுமக்கள் காத்திருக்கிறார்கள்.

    குடிமங்கலம்:

    மத்திய, மாநில அரசு சார்பில் கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் சொந்த வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் கலைஞர் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும். மானியம் 2.76 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்துக்காக கடந்த 2010ல் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் பயனாளிகள் குறித்த மறு கணக்கெடுப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது.

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் கணக்கெடுப்பு விபரங்கள் சில மாதங்களுக்கு முன் 'செல்போன் செயலி'யில் பதிவு செய்யப்பட்டது.இப்பணிகள் நிறைவு பெற்றதும் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டு வீடு கட்டும் பணிகளை துவக்கலாம் என ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். கடந்த சுதந்திர தினத்தன்று ஊராட்சிகளில் நடந்த கிராமசபையில் பயனாளிகள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட்டியல் வெளியாகவில்லை.

    இத்திட்டத்துக்காக விண்ணப்பித்த மக்கள் கூறியதாவது:-

    அரசு மானிய திட்டத்துக்காக இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறோம். கட்டுமான பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வீடு கட்டுவதற்கான செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது.அரசு திட்டத்துக்காக விண்ணப்பித்துள்ளதால் கட்டுமான பணிகளையும் துவக்காமல் காத்திருக்கிறோம். கலைஞர் வீட்டு வசதி திட்ட வழிமுறைகள் குறித்து தெளிவாக ஒன்றிய அதிகாரிகள் விளக்கமளித்து உடனடியாக பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும். மானியம் ஒதுக்கீடு செய்தால் கட்டுமான பணிகளை துவக்க உதவியாக இருக்கும் என்றனர்.   

    • ஈரோடுக்கு பஸ் வசதி இல்லாததால் தொழிலாளிகள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது.
    • இதனால் இரவு 9 மணிக்கு மேல் ஈரோட்டிற்கு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் தொழிலாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதி பல்வேறு தொழில் நிறுவனங்களை கொண்ட நகரமாக விளங்குகிறது. இங்கு பணிபுரிய பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர்.இவர்கள் பணி முடிந்து இரவு வீட்டிற்கு திரும்ப இரவு 9 மணிக்கும் மேல் ஆகிறது.

    அந்த நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் தொழிலாளிகள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. குமாரபாளையத்தில் முன்பெல்லாம் இரவு 11 மணி வரைக்கும் ஈரோடுக்கு பஸ் சென்று வந்தது.

    இப்போது இரவு 9 மணிக்கு மேல் பஸ் இல்லை.இரவு 9 மணிக்கு குமாரபாளையம் பஸ் நிலையத்தில் 3 அரசு டவுன் பஸ்கள் ஒரே நேரத்தில் வருகிறது. பயணிகள் ஏற முயற்சித்தால் பஸ்கள் டெப்போவிற்கு போகிறது, யாரும் ஏறாதீர்கள் என்று கூறிவிட்டு பஸ்களை எடுத்து சென்று விடுகிறார்கள்.

    இதனால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள், தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் குமார பாளையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் ஈரோட்டிற்கு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் தொழிலாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×