search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudhuvai Kalatheeshwarar"

    • கதையை ஊன்றிய மகாவிஷ்ணு, கருட சேவை காட்சி ஆகியன தோற்றம் அளிக்கின்றன.
    • 24 கால் மண்டபத்தின் கிழக்கே 2 வது வரிசை தூண்களில் 5 வது தூணில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    24 கால் மண்டபத்தில் சிவன் சன்னதி பக்கம் உள்ள முதல் தூணில், விநாயகர், வேல் தாங்கிய கந்தன் உருவங்களும், பெருமாள் பக்கம் உள்ள முதல் தூணில் ஆனந்த கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனம், நரசிம்மம் செதுக்கப்பட்டுள்ளன.

    இத்தூண்களின் அடியிலும், கடைசி 2 எதிர் தூண்களின் அடியிலும் ருத்திராட்சம், சிவச்சின்னம் அணிந்த முத்திய நாராயண செட்டியார் என்னும் திருவுருவம் பெயருடன் காணப்படுகின்றது.

    இம்மண்டபம், சிவன் சன்னதிக்கு இடப்பக்கமும், வரதராச பெருமாளுக்கு வலப்பக்கமுமாக 2 சன்னதிகளையும் இணைத்தவாறு மிகப்பெரிதாக கட்டப்பட்டுள்ளது.

    இதனை கட்டியவரின் உருவங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.

    அதில் அவர்களின் (கைங்கர்யம்) நற்செயல் குறித்த கல்வெட்டும் செதுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கில் உள்ள முதல் தூண் கல்வெட்டில் (1886ம் ஆண்டு விபஸ்ரீ சித்திரை மாதம் புதுவை, வைசிய குல முத்திய செட்டியார் குமாரன் நாராயண செட்டியார் மண்டபம் தருமம்) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

    கோவிலின் தென் வாயிலையொட்டிய 16 கால் மண்டபம் அமைத்தவர்கள் ஆயிர வைசிய சைவ செட்டியாரில் ஒரு வகுப்பார் என்றும், வரதராச பெருமாளுக்கு வடக்கு பாகத்தில் உள்ள 24 கால் மண்டபம் அமைத்தவர்கள் ஆயிர வைசிய செட்டியாரில் மற்றொரு வகுப்பார் என்பதும் சிற்பங்களாலும், கல்வெட்டாலும் புலப்படுகின்றன.

    கிழக்கு நோக்கிய முதலாவது தூணில் சிவன் சன்னதி பக்கம், பார்வதி பரமேசுவரர், நடராசர், 5 தலை நாகம் குடைபிடிக்கும் சிவலிங்கம் தூணில் பொறிக்கப்பட்டுள்ளன.

    எதிரில் கதையை ஊன்றிய மகாவிஷ்ணு, கருட சேவை காட்சி ஆகியன தோற்றம் அளிக்கின்றன.

    24 கால் மண்டபத்தின் கிழக்கே 2 வது வரிசை தூண்களில் 5 வது தூணில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஆஞ்சநேயருக்கு ஒரு சிறிய மண்டபம் பித்தளை பிரபையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆஞ்சநேயர் வழிபாடு சனிக்கிழமைகளில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.

    ஆஞ்சநேயரின் பின்னால் சேதுவை கடக்கும் போது ராம, லட்சுமணரை தம் தோளில் தாங்கிய அனுமனின் அற்புத காட்சி சுதையால் வண்ணப் பொலிவோடு காட்சி அளிக்கின்றது.

    24 கால் மண்டப மேற்கூரையின் பக்கச் சுவர்களில் சிவன் சன்னதியை ஒட்டியுள்ள பகுதியில் விநாயகர் காட்சி ஓவியங்கள், நடராசரின் பல்வேறு தாண்டவங்கள் வண்ண ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன.

    வலப்பக்கத்தில் தசாவதார காட்சிகள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.

    ஆஞ்சநேயருக்கு ஒரு சிறிய மண்டபம் பித்தளை பிரபையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    ×