என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » puducherry all party meeting
நீங்கள் தேடியது "Puducherry All party Meeting"
நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தின் நிதிநிலை குறித்து அனைத்து கட்சிகளுடன் விவாதிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
தலைமை செயலகத்தில் 3-வது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் நாளை (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அ.தி.மு.க. ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில் என்.ஆர். காங்கிரசும் இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறும் போது, சட்டமன்ற கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிதிநிலை குறித்து சட்டமன்றத்திலேயே விவாதிக்கலாம். அதை விடுத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது கண் துடைப்பு நாடகம் ஆகும். எனவேதான் நாளை நடைபெறும் இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
இதே போல் அனைத்து கட்சி கூட்டத்தை பா.ஜனதா கட்சியும் புறக்கணிக்க போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப்போவதாக அறிவித்து இருப்பதால் நாளைய கூட்டத்தில் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

×

X