search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukottai fisherman"

    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவருக்கு இலங்கையில் 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #SrilankaNavy #TNFisherman
    கொழும்பு:

    கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்கின்றனர். அவ்வகையில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக கடந்த பிப்ரவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ராவுத்தர் என்பவரும் ஒருவர்.



    கைது செய்யப்பட்டவர்களின் கைரேகை மற்றும் அவர்களின் விவரங்களை சரிபார்த்தபோது, ராவுத்தர் ஏற்கனவே இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, எச்சரித்து விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

    எச்சரிக்கையை மீறி மீண்டும் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார். எனவே, அவருக்கு  வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின்கீழ் தண்டனை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்ற நீதிமன்றம், ராவுத்தருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #SrilankaNavy #TNFisherman
    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேர் மற்றும் அவர்களது இரு படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. #TNFishermen #SriLankanNavy
    புதுக்கோட்டை: 

    இந்தியா - இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. 

    அந்த வகையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேர் மற்றும் அவர்களது இரு படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

    முன்னதாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், இரு வாரங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. #TNFishermen #SriLankanNavy

    ×