search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puffed Rice upma"

    இந்த பொரி உப்புமாவை காலை உணவாகவோ, மாலையில் சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம். எளிதில் செய்யக்கூடிய இந்த பொரி உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    பொரி - 2 கப்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    கேரட் - 3 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
    மஞ்சள் - ¼ டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    கடுகு - ½ தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
    வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பொரியை நன்கு அலசி ஒரு வடிகட்டியில் தண்ணீரை முற்றிலுமாக வடியும்படி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கறிவேப்பிலை சேர்த்து, வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.

    கடைசியாக தண்ணீர் இல்லாமல் வடிந்த பொரியை சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி, இறக்கவும்.

    எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்..

    சூப்பரான எளிதில் செய்யக்கூடிய பொரி உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×