என் மலர்
நீங்கள் தேடியது "Puja"
- திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான் கோவில் அமைந்துள்ளது.
- கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை பூசாரி சிவ்பால் அணைத்துள்ளார்.
ராஜஸ்தானில் கோவில் பூசாரி பூஜை செய்வது தொடர்பான தகராறில் சக பூசாரியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா (Dausa) மாவட்டத்தில் லால்சோட் எல்லைக்கு உட்பட திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான்கோவில் அமைந்துள்ளது. இங்கு பரசுராம் தாஸ் மகாராஜ் (60 வயது).மற்றும் சிவ்பால் தாஸ் ஆகியோர் பூசாரிகளாக உள்ளனர்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவிலில் சாமி சிலைக்கு ஆரத்தி காட்டுவது தொடர்பாக இருவரும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிவ்பாலை பரசுராம் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி சிவ்பால் தாஸ், பரசுராமை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
கோவிலுக்குள் பூசாரி உடல் கிடப்பதை அறிந்து உள்ளூர் மக்கள் திரண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தப்பியோடிய பூசாரி சிவ்பால் கோவிலுக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் காயமுற்ற நிலையில் போலீசிடம் பிடிபட்டார். அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை சிவ்பால் அணைத்துவிட்டு அதன் பின் கொலை செய்ததும் தெரியவந்தது. கோவில் பூசாரி சக பூசாரியால் கோவிலில் வைத்தே கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரச மரத்தின் கீழ் தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்களை இயற்றினார்.
- திருமூல நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
குத்தாலம்:
திருமந்திரத்தை இயற்றிய திருமூலருக்கு அவர் சமாதியடைந்த திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் குருபூஜை விழா நடைபெற்றது.
திருமூலர் ஞானசமாதி அடைந்த தலம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ளது.
திருமூலர் சமாதி அடைந்த இடத்தில் இக்கோயிலில் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
திருமூலர் கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள படர்அரச மரத்தின்கீழ் தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்களை இயற்றினார்.
இந்த 3000 பாடல்களே திருமந்திரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், திருமூலரின் குருபூஜை விழாவை முன்னிட்டு கோயிலின் தென்மூலையில் உள்ள திருமூல நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, சிறப்பு பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து, பசுக்களுக்கு பூஜை நடத்தப்பட்டது. விழாவில், 'அருள் அரசர்களும் அடியார்களும்" என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டருள அதனை திருவாவடுதுறை ஆதீனக் கோயில்களின் கண்காணிப்பாளர்கள், ஆதீன பள்ளிகளின் ஆசிரியர் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக, ஆரவாய் அண்ணல் அறக்கட்டளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து திருமுறை விண்ணப்பம் செய்தனர், சென்னை சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி அமைப்பாளர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.
புதுச்சேரி அக்ஸி எழிலன் சிறப்புரையாற்றினார்.
கோவில்பட்டி சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி பேராசிரியர் விமலா சுப்பிரமணியம் 'திருமந்திரத்தில் சைவ சித்தாந்தம்' எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.
- பூமிநாதர் கோயிலில் வாஸ்து பூஜை நடைபெற்றது
- திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் ஆரணவள்ளி சமேத பூமிநாதர் கோயிலில் வாஸ்து நாளையொட்டி ராஜப்பா குருக்கள் தலைமையில் சிறப்பு யாகபூஜைகள் மற்றும் பூமிநாதர் ஆரணவள்ளி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூஜையில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செவலூர் பூமிநாகர் ஆரணவள்ளி வாஸ்து பூஜை நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக வாஸ்துநாள்களில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- சிவன் கோவிலில் அய்யப்பன் சுவாமிக்கு ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜை நடை பெற்று வருகிறது.
- இதில் 108 திருவிளக்குகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு குங்கு மாட்சனை, மலராட்சனை செய்யப்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை காய நிர்மலேஈஸ்வரர் சிவன் கோவிலில் அய்யப்பன் சுவாமிக்கு ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜை நடை பெற்று வருகிறது. அதன் படி 34 -ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 திருவிளக்குகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு குங்கு மாட்சனை, மலராட்சனை செய்யப்பட்டது.முன்னதாக அய்யப்பன்
சுவாமி பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் பஜனைப்பாடியும், 18 படிக்கட்டுகளை கற்பூர தீபம் ஏற்றியும் வழிபாடுகளை நடத்தியும் வழிப்பட்டனர்.
- வேதபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது
- 108 வட மாலை சாத்தி தீபாதாரணை காண்பிக்கப்பட்டது
பெரம்பலூர் :வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் வேத நாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, 108 வட மாலை சாத்தி தீபாதாரணை காண்பிக்கப்பட்டது. மேலும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை பக்தர்கள் 10 கிலோ எடையில் பெரிய அளவிளான கேக் வெட்டி அதனை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டது.
- கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
கும்பகோணம்:
108 வைணவ தலங்களில் 3-வது தலமாக கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவில் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழங்க கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா நாட்களான தினமும் சாமி விதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது.
- கரூர் வள்ளுவர் கல்லூரியில் திருவடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
- அகத்தியர் சன்மார்க்க சங்க நிர்வாகிகள், சித்தர்களின் 108 போற்றிகளை பாட மாணவிகள், விரலி மஞ்சளில் குங்குமத்தை இட்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்
கரூர்:
கரூர் வள்ளுவர் அறிவி–யல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் தமிழ்த்துறை மன்றமும், அகத்தி–யர் சன் மார்க்க சங்கம் ஓங்காரக் குடில் (கரூர் கிளை) இணைந்து நடத்திய சித்தர்க–ளின் திரு–வடி திருவிளக்கு பூஜை புத்தாண்டில் புதுமை–யாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இரண்டா–மாண்டு மாணவிகள் அனை–வரும், தமிழ் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர்.
மொத்தம் 200 மாணவிகள் கையில் அகல் விளக்கும், செவ்வந்தி பூக்களோடும், விரலி மஞ்சள், குங்குமத்தோடும் மங்களகரமாக அமர்ந்து பூஜையில் பங்கேற்றனர். அகத்தியர் சன்மார்க்க சங்க நிர்வாகிகள், சித்தர்களின் 108 போற்றிகளை பாட மாணவிகள், விரலி மஞ்சளில் குங்குமத்தை இட்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் வள்ளுவர் கல்லூரியின் செயலர் ஹேம–லதா செங்குட்டுவன் முன்னிலை வகித்தார்.
இணைச்செயலர் ராகவி நிகில்கண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் இரு–ளப்பன் ஆகியோர் பங்கேற்றனர். மார்கழி மாதம் என்பதால் ஆண்டாள் பாடிய திருப் பாவை பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜையின் நன்மைகள் குறித்தும், சித்தர்களின் பெருமை மற்றும் திருவிளக்கு வழி–பாடு நோக்கங்கள் குறித்தும் மாணவிகளோடு பகி–ரப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
- கால பைரவருக்கு முளைப்பாரி பூஜை
- கால பைரவருக்கு முளைப்பாரிகை பூஜை நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள செங்குந்தபுரம் ஸ்ரீகாலபைரவருக்கு முளைப்பாரிகை பூஜை நடைபெற்றது. இந்த கோயில் கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்டு, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்று வருகிறது. சிவனின் பருவத்திலிருந்து தோன்றிய ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் முன்வினை நீ்ங்கி, திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, குடும்ப ஒற்றுமை, கடன் பிரச்சினை, கல்வியில் மேன்மை, பெருவாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். இதனை முன்னிட்டு கடந்த மாதம், பக்தர்கள் டோக்கன் பெற்று முளைப்பாரி பூச்சட்டிகளை உருவாக்கி வளர்த்து வந்தனர். இந்நிலையில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக முளைப்பாரிகளை எடுத்துவந்தனர். தொடர்ந்து காலப்பைரவருக்கு பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் கோயில் அருகேயுள்ள திருக்குளத்தில் முளைப்பாரிகையை மக்கள் விட்டு வழிபாடு செய்தனர். வழிபாட்டிற்கான ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு காலபைரவரை வணங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
- பெரம்பலூர் பிரம்மபுரீசுவரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
- பெண்கள் குத்து விளக்குக்கு மலர் சாற்றி, தீபம் ஏற்றி குங்கும அர்ச்சனை செய்து கூட்டுவழிபாடு நடத்தினர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீசுவரர் கோவிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நேற்று இரவு நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு குத்து விளக்குக்கு மலர் சாற்றி, தீபம் ஏற்றி குங்கும அர்ச்சனை செய்து கூட்டுவழிபாடு நடத்தினர். அதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் நந்தியம் பெருமானை வழிபட்டனர். பூஜை ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்ளிட்ட பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
- அஷ்ட புஜங்க வன பத்ரகாளிக்கு தீச்சட்டி எடுக்கும் பூஜைகளுடன் வழிபாடு.
- உலக நன்மைக்காக நடனமாடி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு செல்வநாக முத்து மாரியம்மன் கோவிலில் தை வெள்ளியை ஒட்டி உலக ஷேமத்திற்கு அஷ்ட புஜங்க வன பத்ரகாளிக்கு தீச்சட்டி எடுக்கும் பூஜைகளுடன் வழிபாடு நடந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பின்னர் கோயிலின் பூஜகர் அம்மன் வேடமடைந்து தீச்சட்டி எடுத்து உலக ஷேமத்திற்காக நடனமாடி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தார்.விழா மற்றும் பூஜைகளில் ஏராளமான பக்தர்களும், கோவில் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
- மகா மண்டல பூஜை
- அனைத்து மும்மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் மற்றும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை ஆகிய தெய்வங்களுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 12ம்தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நேற்று மகா மண்டல பூஜை 48 நாள் சிறப்பு நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் மஹா யாகமும், அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூர்ணகதி முடித்து மகாததீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- கோபுரங்களில் செடி, கொடிகள் மண்டியும், சுற்றுச்சுவர்கள் சேத–மடைந்த நிலையிலும் காணப்படுகிறது.
- ஒரு காலத்தில் நான்கு கால பூஜை ராஜமரியாதையுடன் நடந்த கோவில்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, ஆலத்தம்பாடி அருகே பழையங்குடி எனும் கிராமத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் கரிகால சோழன் காலத்துக்கு முற்பட்டு அரசியார் வேண்டு–கோள்படி சிவனுக்கு தோஷ பரிகாரத்துக்காக கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் வருமானம் ஏதும் இல்லாததால் முறையாக பராமரிக்கப்–படாமல் கோபுரங்களில் செடி, கொடிகள் மண்டியும், சுற்றுச்சுவர்கள் சேத–மடைந்த நிலையிலும் காணப்படுகிறது.
மேலும், இங்கு பணி செய்யும் அர்ச்சகருக்கு கூட பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.
கோவிலை சுத்தம் செய்வதற்கு என யாரையும் நியமிக்கவில்லை என்ற விஷயம் பக்தர்கள் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு காலத்தில் நான்கு கால பூஜை ராஜமரியாதையுடன் நடந்த கோவிலில் தற்போது, ஒரு கால பூஜை நடைபெறுவதற்கே தடுமாறுகிறது.
இக்கோவிலுக்கு என அறநிலையத்துறையால் தனியாக செயல் அலுவலர் யாரும் நியமிக்கப்படவில்லை.
எனவே, இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலரும், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவருமான வக்கீல் நாகராஜன் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.