search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pulsar 150 ABS"

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பலச்ர் 150 ஏ.பி.எஸ். வேரியன்ட் ஸ்பை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Motorcycle



    பஜாஜ் பல்சர் 150 ஏ.பி.எஸ். ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புது ஏ.பி.எஸ். வெர்ஷன் தற்போதைய பல்சர் டூயல்-டிஸ்க் வேரியன்ட்டை தழுவி உருவாகி இருக்கிறது. இந்தியாவில் பல்சர் 150 டூயல் டிஸ்க் வேரியன்ட் விலை ரூ.78,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புது பல்சர் 150 ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை இந்தியாவில் 2019 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புது பல்சர் 150 ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை டூயல்-டிஸ்க் மாடலின் விலையை விட ரூ.7000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் புதிய பல்சர் 150 ஏ.பி.எஸ். விலை ரூ.85,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம். ஏப்ரல் 2018 முதல் இந்தியாவில் விற்பனையாகும் 125சிசி மற்றும் அதற்கும் அதிக மோட்டார்சைக்கிள்களில் ஏ.பி.எஸ். வசதி கட்டாயமாகிறது.


    புகைப்படம் நன்றி: Rushlane

    பஜாஜ் பல்சர் 150 ஏ.பி.எஸ். மாடலில் பி.எஸ்.-VI ரக 149சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 13.8 பி.ஹெச்.பி. பவர் 13.4 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை டூயல்-டோன் பெயின்ட், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டியூப்லெஸ் டையர்கள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இதுதவிர இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் பல்வேறு புது மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு 650சிசி ட்வின் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    இதேபோன்று ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் மூன்று புது மாடல்கள்: 42, ஜாவா மற்றும் பெராக் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது. ஜாவா மோட்டார்சைக்கிள் விலை ரூ.1.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Motorcycle
    ×