search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab CM Amarinder Singh"

    பஞ்சாபில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வரும் ஆன அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
    பஞ்சாப் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19-ந்தேதி நடக்க இருக்கிறது. அம்மாநிலத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. 13 தொகுதிகளை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையில் மும்முனை போட்டி நடைபெறுகிறது.

    காங்கிரஸ் கட்சிக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு பிரசார பீரங்கியாக இருக்கிறார். சில தினங்களாக சித்து மனைவி அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வரும் ஆன அமரிந்தர் சிங் எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.



    இதனால் காங்கிரஸ் கட்சிக்கு தொய்வு ஏற்படுமோ? என்று தலைவர்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், ‘‘சித்து மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்’’ என அமரிந்தர் தெரிவித்துள்ளார்.
    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக பஞ்சாப் மாநில அரசு இன்று 10 கோடி ரூபாய் வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது. #KeralalRain #Keralafloods #AmarinderSingh
    சண்டிகர்:

    கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்படட் வெள்ளத்தில் சிக்கி 164 பேர் பலியாகி உள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    வெள்ளம் பாதிப்பு அடைந்த கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்கள் நிவாரண தொகை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக பஞ்சாப் மாநில முதல் மந்திரி அமரிந்தர் சிங் 10 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக, கேரள முதல் மந்திரி நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உணவு பொருள்கள் உள்ளிட்ட பிற பொருள்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் உதவியுடன் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர். #KeralalRain #Keralafloods #AmarinderSingh
    ×