என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Punjab Government"
- ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு சான்றிதழ் சேவைகள் இனி பஞ்சாப்வாசிகளின் வீடு தேடிவர உள்ளது.
- இத்திட்டம் தலைநகர் டெல்லியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.
சண்டிகர்:
அரசு சான்றிதழ் பெறவேண்டி நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் அதன் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பலமணி நேரம் வீணாவதுடன், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டி இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு சான்றிதழ் சேவைகள் இனி பஞ்சாப்வாசிகளின் வீடு தேடிவர உள்ளது.
லூதியானா நகரில் நாளை அறிமுகமாகும் இத்திட்டத்தை பஞ்சாப் முதல் மந்திரி பகவத் மான், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
இதன்படி, ஆதார், வாக்காளர் அட்டை, சாதிச் சான்றிதழ் அனைத்து வகையான அரசு சான்றிதழ்கள், மின்சாரக் கட்டணம், குடிநீர் மற்றும் வீட்டுவரி உள்பட 43 வகையான அரசு சேவைகள் செய்துதரப்படும். இத்திட்டத்தில் அரசு வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம் தேவைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். பிறகு அவர்களுடன் பேசி நேரம் குறித்த பின் பொதுமக்கள் வீட்டிற்கு அரசு சார்பில் அலுவலர் வருவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கோடை காலத்தில் அலுவலக நேர மாற்றம், மின் தேவையின் சுமையை குறைக்கும் என்றார்.
- புதிய அலுவலக நேரம் ஜூலை 15ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் வரும் மே மாதம் 2ம் தேதி முதல் அலுவலக நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
தற்போது மாநில அரசுத் துறைகளின் அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. இந்நிலையில், வரும் மே மாதம் 2ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு மூடப்படும் என்று பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த புதிய அலுவலக நேரம் ஜூலை 15ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு மாநில அரசு ஊழியர்கள் உள்பட பலருடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.
மேலும், கோடை காலத்தில் அலுவலக நேர மாற்றம், மின் தேவையின் சுமையை குறைக்கும் என்றார்.
பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், மதியம் 1.30 மணிக்கு மேல் பீக் லோட் (மின்சாரம்) தொடங்கும் என்றும், மதியம் 2 மணிக்கு அரசு அலுவலகங்கள் மூடப்பட்டால், பீக் லோட் 300 முதல் 350 மெகாவாட் வரை குறைக்க உதவும் என்றும் முதல்வர் கூறினார்.
பகலில் வெப்பமான காலநிலையின் உச்ச நேரம் தொடங்கும் முன், அரசு அலுவலகங்களில் தங்கள் வேலையைச் செய்து முடிப்பதால், இந்த முடிவு சாமானிய மக்களுக்கும் பயனளிக்கும் என்றும் முதல்வர் கூறினார்.
இதைதவிர, ஊழியர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும், தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடியும் என்பதால் இது அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்