search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Purity India Project"

    பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் வெற்றி அடையவில்லை. அது பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது என முன்னாள் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். #SwachhBharat #PMModi #JairamRamesh
    புதுடெல்லி:

    நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் தூய்மை இந்தியா திட்டத்தை முதன்மை திட்டமாக அறிவித்தார். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் திட்டம் வெற்றி பெற்று இருப்பதாக மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

    ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு பணிகள்துறை மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

    பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் வெற்றி அடையவில்லை. அது பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது.

    ஆனால், வெற்றி பெற்று விட்டது போல் பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். உண்மையான நிலவரத்தை வெளியிடாமல் திரும்பத் திரும்ப பொய் தகவல்களை வெளியிடுகிறார்கள்.

    கழிவறை கட்டுமானம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. மத்திய தணிக்கை துறையே இந்த திட்டம் பற்றி பல்வேறு குறைகளை கூறி இருக்கிறது.

    வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு கொடுக்காத நிலையில் கழிவறைகளை கட்டி கொடுத்திருக்கிறார்கள். இதனால் எந்த பயனும் இல்லை என்று தணிக்கை துறை கூறி இருக்கிறது.

    இந்த திட்டத்துக்கு நிதி உதவி செய்துள்ள உலக வங்கி திட்டத்தில் திருப்தி இல்லை என்று கூறி இருக்கிறது.

    மேலும் இதற்காக தரவேண்டிய தவணை தொகையை திட்டம் சரி இல்லை என்ற காரணத்தினால் நிறுத்தி வைத்துள்ளது.


    கழிவறை கட்டி கொடுத்துவிட்டு தண்ணீர் இல்லை என்றால் என்ன பயன்? அதைகூட செய்யாமல் பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

    மோடி அரசு பதவி ஏற்ற பிறகு மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதில் எந்த அக்கறையும் காட்டவில்லை. அந்த திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

    பல மாநிலங்களை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக அறிவிக்க செய்துள்ளனர். ஆனால், அங்கு பழைய நிலைமையே நிலவுகிறது.

    குஜராத்தில் கூட இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அங்கும் அதே நிலைதான் நிலவுகிறது.

    இது போன்ற அறிவிப்புகள் மூலம் கலப்பட மற்ற பொய்களை பரப்புகிறார்கள். சாக்கடை கழிவுகளை மனிதனே நேரடியாக அகற்றும் முறை தொடர்ந்து நீடிக்கிறது. இந்த பணியில் ஈடுபடுபவர்களில் 5 நாட்களுக்கு ஒரு ஊழியர் பலியாகிறார்.

    2017-ம் ஆண்டு இத்தகைய ஊழியர்கள் 13 ஆயிரம் பேர் இறப்பதாக கூறப்பட்டது. ஆனால், 2018 கணக்கெடுப்பில் 53 ஆயிரத்து 236 பேர் இறப்பதாக கூறப்பட்டுள்ளது.

    தூய்மை இந்தியா திட் டத்தை பொறுத்த வரை மோடி அரசு திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிறது. கடந்த கால அரசு செய்த சாதனைகளையும் தங்கள் சாதனையாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார். #SwachhBharat #PMModi #JairamRamesh
    ×