search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quaid e Millath"

    அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், ஆவடி நாசர், தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    காயிதே மில்லத்தின் 127வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    சென்னை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இவர்களுடன் அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், ஆவடி நாசர், தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    காயிதே மில்லத் 123-வது பிறந்த நாளான நாளை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் மரியாதை செலுத்துகிறார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காயிதே மில்லத் 123-வது பிறந்த நாளான நாளை (5-ந்தேதி) காலை 10 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்துகிறார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVdhinakaran
    காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நாளை மரியாதை செலுத்த உள்ளார்கள்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி அளவில் சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

    இந்த நிகழ்ச்சியில், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞ அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×