என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » rafale verdict
நீங்கள் தேடியது "Rafale verdict"
ரபேல் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #RahulGandhi #ContemptNotice #Rafale
புதுடெல்லி:
ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், எந்த முறைகேடும் நடந்து இருப்பதாக தெரியவில்லை என்று கூறியது. அதன்பின்னர், ஆங்கில நாளிதழில் வெளியான ரகசிய ஆவணங்களை சுட்டிக்காட்டி, ரபேல் விவகாரம் குறித்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இதற்கிடையே தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடியை ராகுல்காந்தி தரம் தாழ்ந்த வகையில் பேசினார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டார் என்று அவர் பேசினார். இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நேற்றைய விசாரணையின்போது, தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கவேண்டும் என ராகுல் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். அத்துடன், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சீராய்வு மனு மீதான விசாரணை ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர். #RahulGandhi #ContemptNotice #Rafale
ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், எந்த முறைகேடும் நடந்து இருப்பதாக தெரியவில்லை என்று கூறியது. அதன்பின்னர், ஆங்கில நாளிதழில் வெளியான ரகசிய ஆவணங்களை சுட்டிக்காட்டி, ரபேல் விவகாரம் குறித்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கவேண்டும் என ராகுல் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். அத்துடன், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சீராய்வு மனு மீதான விசாரணை ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர். #RahulGandhi #ContemptNotice #Rafale
ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னர் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். #AAP #Rafaleverdict #AAPMP #Rafaleverdictreview
புதுடெல்லி:
ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு அளித்த விளக்கம் திருப்தியளிப்பதாகவும், போர் விமானங்களின் விலை நிர்ணயம் தொடர்பான மத்திய அரசின் முடிவு தொடர்பாக விசாரிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்று கூறியும் மேற்படி பேரம் தொடர்பாக தொடரப்பட்ட 4 வழக்குகளை கடந்த 14-12-2018 அன்று சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னர் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவரது சார்பில் வழக்கறிஞர்கள் தீரஜ் குமார் சிங், மிருனாள் குமார் ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்தனர். #AAP #Rafaleverdict #AAPMP #Rafaleverdictreview
×

X