என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rail"

    • பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர் திரிலோக் கோத்தாரி தலைமையில் வாடிக்கையாளர்களுடனான சந்திப்பு நடந்தது.
    • 7சி கூரியர் சேவையை, அரசு பஸ்களிலும் நடைமுறைக்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    பாலக்காடு கோட்ட ெரயில்வே மேலாளர் திரிலோக் கோத்தாரி தலைமையில் வாடிக்கையாளர்களுடனான சந்திப்பு பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் விவசாயிகள், தொழில்துறையினர், வணிகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தென்னை மற்றும் தென்னை உற்பத்தி பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வது குறித்து சிறப்பு கவனம் செலுத்த விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.அதற்கு தென்னை பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ெரயில்வேயில் உள்ள வசதிகள் குறித்து கோட்ட மேலாளர் விரிவாக தெரிவித்தார்.

    பாலக்காடு - சென்னை சென்ட்ரல் விரைவு ெரயிலில் 16 டன் அளவுக்கு பார்சல்கள் கையாளும் வசதி உள்ளதாகவும், அதை பயன்படுத்தி தென்னை விவசாயிகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் தங்கள் பொருட்களை கொண்டு செல்லலாம் என கூறினார்.

    மேலும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பண்ணை விளைபொருட்களை கொண்டு செல்ல சரக்கு ரேக்குகள் கொள்கலன்களையும், சிறப்பு ெரயில்களையும் ெரயில்வே ஏற்பாடு செய்யும் எனவும் தெரிவித்தார்.

    அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி.,) பஸ்களில் உள்ள 7சி கூரியர் சேவையை, அரசு பஸ்களிலும் நடைமுறைக்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. எஸ்.இ.டி.சி., பஸ்கள் வாயிலாக பார்சல்களை அனுப்பி வைக்கும் 7சி கூரியர் சேவை திட்டம் அமலில் உள்ளது. சென்னை, கோவை, நாகர்கோவில், திருச்சி, சேலம், விழுப்புரம், கும்பகோணம், மதுரை உள்ளிட்ட எஸ்.இ.டி.சி., பணிமனைகளில் இருந்து 5 முதல் 80 கிலோ வரை பார்சல், கி.மீ.,க்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.

    மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் 300 கி.மீ.,க்கு அதிகமாக பயணிக்கும் எஸ்.இ.டி.சி., பஸ்களில் மட்டுமே உள்ள இந்த திட்டத்தை அரசு பஸ்களிலும்(டி.என்.எஸ்.டி.சி.,) நடைமுறைப்படுத்த போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது.

    இது குறித்து திருப்பூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், எஸ்.இ.டி.சி., பஸ்கள் நீண்ட தூரம் பயணம் என்பதால், பார்சல் முன்பதிவு சற்று குறைவாகவே உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் 150 கி.மீ., வரையிலான பயணத்துக்கு பார்சல்களை அனுப்ப வசதியுள்ளதா என்று வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர்.ஒவ்வொரு கோட்டத்திலும், 150 முதல் 250 கி.மீ., சென்று திரும்பும் தொலைதூர பஸ்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. டி.என்.எஸ்.டி.சி., பஸ்களில் பார்சல் சேவை அடுத்தாண்டு துவங்கப்பட உள்ளது என்றனர்.

    • தண்டவாளத்தின் பகுதியில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த பூதலூர் ரெயில் நிலையம் அருகே இன்று 35 வயது மதிக்க ஆண் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் உத்தரவுப்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், தலைமை காவலர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    ஆனால் இறந்தவர் யார் ? எந்த ஊர் ? என்ற விவரம் தெரியவில்லை.

    மேலும் இறந்து கிடந்தவரின் அருகில் திருச்சி- மயிலாடுதுறை ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கிடந்ததை போலீசார் கைப்பற்றினர்.

    இதனை தொடர்ந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா ? அல்லது தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புத்தாண்டு கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார்.
    • ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திருவாரூர்:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்து கொள்வர்.மேலும் தேவாலயங்கள் போன்றவற்றில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருவாரூர் அருகிலுள்ள ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் விக்கி என்கிற கணேசன் வயது 20.

    ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் திருவாரூர் ெரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடந்து ெரயில்வே காலணி பகுதிக்கு செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ெரயில் மோதியதில் சிறிதுரம் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கணேசன் உடல் சிதறி தண்டவாளத்திலேயே உயிரிழந்து கடந்துள்ளார்.

    அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ெரயிலின் டிரைவர் ெரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இளைஞர் எந்த ெரயில் மோதி உயிரிழந்தார் விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புத்தாண்டு தினத்தன்று ெரயில் மோதி இளைஞர் உடல் சிதறி பலியான சம்பவம் என்பது ெரயில்வே காலணி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சேலம் ரெயில்வே கோட்ட பகுதியில் டிக்கெட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.12.2 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.
    • கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.5.1 கோடி மட்டுமே அபராதம் வசூலானது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் தீவிரமாக டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோர், முறைகேடாக பயணிப்போர், லக்கேஜ் எடுக்காமல் இருத்தல் போன்றவற்றை கண்டறிந்து டிக்கெட் பரிசோதகர்கள் அபராதத்துடன் கூடிய கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் 9 மாத காலத்தில் டிக்கெட் பரிசோதனை மூலம் ரூ.12 கோடியே 26 லட்சத்து 23 ஆயிரத்து 832 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.5 கோடியே 1 லட்சத்து 90 ஆயிரத்து 508 மட்டுமே அபராதம் வசூல் ஆகி இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது 69 சதவீதமாக அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • திருச்சியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்படுகிறது.
    • அகஸ்தியம்பள்ளியில் இருந்து விழுப்புரம், காரைக்குடி ஆகிய நகரங்களுக்கு நேரடி சேவைகளை பெற்றிடலாம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே பயணிகள் ரெயில் சேவைகள் வருகிற 29-ந்தேதி இயக்கப்படுகிறது.

    இந்தியாவின் தென்கிழக்கு முனையாக இருந்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் அகஸ்தியம்பள்ளி.

    இங்கிருந்து அண்டை நாடான இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள கடல் பாதை வழியாகும். மேலும் பாக் ஜலச்சந்தி என்று சொல்லக்கூடிய பாக் நீர் இணையும் இடம் இங்கு தான் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அகத்தியன் பள்ளிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 6.45 மணிக்கும் பிற்பகல் 3.30 மணிக்கும் திருத்துறைப்பூண்டியில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும்.

    மறுமார்க்கத்தில் அகஸ்தியம்பள்ளியில் இருந்து காலை 7.55 மணிக்கும் மாலை 4.40 மணிக்கும் புறப்படும்.

    வெள்ளிக்கிழமை அன்று திருத்துறைப்பூண்டியில் இருந்து திருச்சிக்கும் மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் சேவைகள் திருவாரூர்-காரைக்குடி ரெயில் சேவைக்கு திருத்–துறைப்பூண்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் இணைப்பாக அமையும். எனவே பொதுமக்கள் இந்த ரெயில் சேவை–களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் அகஸ்தியம்பள்ளியில் இருந்து விழுப்புரம், காரைக்குடி ஆகிய நகரங்களுக்கு நேரடி சேவைகளை பெற்றிடலாம்.

    குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.120 கோடி செலவில் புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
    • வருகிற மார்ச் 8-ந் தேதி முதல் நிரந்தர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    திருத்துறைப்பூண்டி:

    சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவை வருகிற 29-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.

    இந்த வழித்தடத்தில் ரூ.120 கோடி செலவில் புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    புதிய அகல ரெயில் பாதை பணிகளை கூடுதல் ரெயில்வே கோட்ட மேலாளர் ராமலிங்கம், முதுநிலை இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார், கோட்ட பொறியாளர் ரவிக்குமார், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார், துணை தலைமை பொறியாளர் (கட்டுமானம்) வினோத் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில்,

    வருகிற மார்ச் 8-ந் தேதி முதல் நிரந்தர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அதற்கு பின் கம்பன் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களும் திருத்துறைப்பூண்டி வழியாக இயக்குவதற்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

    முன்னதாக, ரெயில் உபயோக சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், செயலாளர் எடையூர் மணிமாறன், துணை தலைவர் துரை ராயப்பன், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அனைவரையும் வரவேற்றனர்.

    • சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக வருகிற பிப்ரவரி 4,11,18 மற்றும் 25-ந் தேதிகளில் இயக்கப்படும்.
    • மறுமார்க்கமாக வருகிற பிப்ரவரி 5,12,19 மற்றும் 26-ந் தேதிகளில் இயக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    எர்ணாகுளம் -வேளாங்கண்ணி (வண்டி எண்:06035) இடையே மதியம் 1.10 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக (4 சேவைகள்) வருகிற பிப்ரவரி 4,11,18 மற்றும் 25-ந் தேதிகளில் (சனிக்கிழமைகள்) இயக்கப்படும்.மறுமார்க்கமாக வேளாங்கண்ணி-எர்ணாகுளம் (06036) இடையே மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக (4 சேவைகள்) வருகிற பிப்ரவரி 5,12,19 மற்றும் 26-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகள்) இயக்கப்படும்.

    இதுவரை இயக்கப்பட்டு வந்த சிறப்பு கட்டண ரெயில் மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ெரயிலில் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்தார்.
    • ெரயில் பெட்டியிலே தவறவிட்டது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை ரெயில் நகரை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 34). இவர் சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலில் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்தார். ஏ.சி கோச்சில் பயணம் செய்தார்.

    பின்னர் தஞ்சாவூர் வந்து இறங்கி வீட்டுக்கு புறப்பட்டார்.

    அப்போது தான் அணிந்திருந்த ஒன்றரை பவுன் கை செயின் காணாதது கண்டு அதிர்ச்சிடைந்தார். இதுகுறித்த அவர் தஞ்சை ெரயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ெரயில் பெட்டியிலே தவறவிட்டது தெரியவந்தது.

    இந்த கைச்செயினை தஞ்சை பெண் பயணி ஒருவரின் சகோதரர் எடுத்து அதனை போட்டோ பிடித்து வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிட்டார்.

    இதைத் தொடர்ந்து இருப்பு பாதை போலீஸ் டி.எஸ்.பி. பிரபாகரனின் அறிவுறுத்தல் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல்,
    சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் அந்த செயினை மீட்டு ராகேசிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் செயின் கிடைக்க காரணமாக இருந்த நபரையும் பாராட்டினர்.

    • நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
    • சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து அரக்கோணத்துக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

    இதனைத்தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் அரக்கோணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • அனைத்து விரைவு ரெயில்களும் பேராவூரணியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை கூடுதலாக அனுமதிக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம், பேராவூரணி ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால், மூத்த ரயில்வே பாதுகாப்பு அலுவலர் சரவணன், கிழக்கு கோட்ட பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் ரெயில்வே அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேலும் அசோக்குமார் எம்.எல்.ஏ., நகர வர்த்தகர் கழகம், ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம், பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வாலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    அதில் கூறியிரு ப்பதாவது:-

    காரைக்குடியில் இருந்து பேராவூரணி வழியாக இரு முனைகளில் இருந்தும் சென்னைக்கு ரெயில் இயக்க வேண்டும். காரைக்குடி -திருவாரூர் பாசஞ்சர் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். இதே வழித்தடத்தில் இரவு நேர கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே இயங்கி வந்த ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

    இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் பேராவூரணி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை கூடுதலாக அனுமதிக்க வேண்டும்.

    பேராவூரணி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். முன்பதிவு மையத்தை தொடங்க வேண்டும்.

    மூத்த குடிமக்களுக்கு பயண கட்டண சலுகை வழங்க வேண்டும் இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியின் போது பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், முன்னாள் வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், ரயில் பயனாளிகள் சங்க தலைவர் மெய்ஞானமூர்த்தி, பாரதி நடராஜன், வர்த்தகர் கழக கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர் கந்தப்பன், அப்துல் மஜீது, அபிராமி சுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • நெல்லை - திருச்செந்தூர் இடையிலான ரெயில் போக்குவரத்தின் நூற்றாண்டு நிறைவு விழா வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது.
    • அனைத்து ரெயில் நிலைய ங்களிலும் ரெயில்வே கால அட்ட வணை வைப்பது உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறை வேற்றப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    நெல்லை - திருச்செந்தூர் இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டு 1923 -ம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த 10 ஆண்டுக ளுக்கும் மேலாக அயராது முயற்சி எடுத்தவர் அன்றைய காலகட்டத்தில் திருநெல்வேலி ஜில்லா போர்ட் உறுப்பினரான ஆறுமுகநேரி எஸ்.பி. பொன்னையா நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வருகிற 23-ந் தேதி இவரது சாதனையை பாராட்டியும் நெல்லை - திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்து நூற்றாண்டு நிறைவையும் விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழுவின் ஆலோசனை கூட்டம் அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன், ஒருங்கி ணைப்பாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நெல்லை - திருச்செந்தூர் இடையிலான ரெயில் போக்குவரத்தின் நூற்றாண்டு நிறைவு விழா வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது. அன்று இந்த வழித்தடத்தில் இயங்கி வரும் 4 ரெயில்களின் முகப்பில் விழா பதாகைகளுடன் நாங்கள் அமைப்பது தோரண ங்களை ரெயில்வே துறையின் அனுமதியுடன் அமைப்பது, அனைத்து பயணிகளுக்கும் இனிப்பு வழங்குவது, அனைத்து ரெயில் நிலைய ங்களிலும் ரெயில்வே கால அட்ட வணை வைப்பது, இந்த ரெயில் பாதை திட்டம் அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து பிரசுரங்கள் மூலம் மக்களிடம் விளக்குவது உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறை வேற்றப்பட்டன.

    அமைப்பின் நிர்வாகி களான குமரகுரு, அமிர்தராஜ், அய்யப்பன், சிவராமன், ராஜலிங்கம், காசிவிஸ்வ நாதன், ராஜாராம், மோகன் சுந்தர்ராஜ், நடராஜன், முருகன், சண்முகசுந்தரம், கற்பக விநாயகம், கசமுத்து, சுந்தர்ராஜ், சுகுமார், மகேஷ் ராஜன், மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சையில் ரெயில் மோதி பெண் பலியானார்.
    • ரெயில்வே தண்டவாளத்தில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி பிணமாக கிடந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த குளிக்க ரை- கொரடாச்சேரிக்கு இடைப்பட்ட ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி பிணமாக கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக தஞ்சாவூர் ரெயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவுப்படி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் குமார், சுரேஷ், ஏட்டு சரவண செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர்.

    ஆனால் இறந்து கிடந்தவர் யார் ? எந்த ஊர்? என்று விபரம் தெரியவில்லை.இதை அடுத்து அந்த பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரயிலில் அடிப்பட்டு அந்த பெண் இறந்தாரா ? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×