என் மலர்
நீங்கள் தேடியது "Railway Station"
- மேடைகளுக்குச் செல்லும் ஓவர்பிரிட்ஜ் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார்.
- ஆரா ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பீகாரில் ரெயில் நிலையத்தில் வைத்து இளம்பெண் மற்றும் அவரது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டத்தில் உள்ள ஆரா ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதான அமன் குமார் முதலில் அப்பெண்ணையும் அதன் பின் அவளது தந்தையையும் ரெயில் நிலையத்தில் நடைமேடைகளுக்குச் செல்லும் ஓவர்பிரிட்ஜ் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார்.
பின் அதே இடத்திலேயே தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பத்தால் அங்கிருந்த பயணிகள் அதிரிச்சியில் மூழ்கினர். ஆர்பிஎப் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்த மூவரும் உத்வாண்ட்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. பெண்ணின் பெயர் ஜியா குமாரி (18), தந்தையின் பெயர் அனில் சின்கா (50). காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த பெண் டெல்லிக்கு செல்வதற்காக ரெயில் நிலையம் வந்திருந்தாக தெரிகிறது.
- ரெயிலுக்கு உள்ளே பயணிகளும், வெளியே ரயில்வே கேட்டிலும் நூற்றுக்கணக்கானோர் அவதி
- 45 நிமிடங்களுக்கும் மேலாக கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தம்.
சென்னையில் இருந்து கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் வழியாக ஆந்திராவிற்கு தினமும் பல ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ரெயிலின் அபாயச் சங்கிலியில் பையை தொங்கவிட்டதால் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் 45 நிமிடங்களுக்கும் மேலாக ரெயில் நிறுத்தப்பட்டது.
இதனால் ரெயிலுக்கு உள்ளே பயணிகளும், வெளியே ரெயில்வே கேட்டிலும் நூற்றுக்கணக்கானோர் அவதியடைந்தனர்.
ரெயில்வே போலீசார் விசாரணை செய்யும் போது, பயத்தில் வட மாநில இளைஞர் இறங்கி ஓடிவிட்டதாக பெட்டியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முன்பு உள்ள வாகன நிறுத்தங்களில் சோதனை செய்த போலீசார் மர்மபொருட்கள் ஏதேனும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர்.
- வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசாரும் மாவட்டந்தோறும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
கோவை கார் வெடிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசாரும் மாவட்டந்தோறும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பஸ் நிலையம், ஜவுளிக்கடைகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
புதிய பஸ்நிலையத்தில் உள்ள கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கவாசகம், ஏட்டுகள் துரை, காளியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நீண்டநாட்களாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் குறித்து ஆய்வு செய்து அது குறித்து உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் பாளை பஸ் நிலைய பகுதிகள், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கார் நிறுத்தும் இடம், பயணிகள் இருக்கை, பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர்.
மேலும் டவுன், வண்ணார்பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளின் வாகன நிறுத்தங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முன்பு உள்ள வாகன நிறுத்தங்களில் சோதனை செய்த போலீசார் மர்மபொருட்கள் ஏதேனும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர்.
- நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.
- நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
சென்னை :
பண்டிகை காலத்தையொட்டி, ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், அந்த 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். நடைமேடை டிக்கெட் கட்டணத்தில் ரூ.10 குறைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உடுமலை வழியாக 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- தினமும் நூற்றுக்கணக்கான ரெயில் பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
உடுமலை:
கோவை திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரெயில்வே நிலையம் உள்ளது. உடுமலை வழியாக 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான ரெயில் பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இங்கு வரும் பணிகளின் பாதுகாப்பை கருதியும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமரா வைக்க ெரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காரைக்குடி ெரயில் நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் தொடக்க விழா நடந்தது.
- அவசர ஊர்தியும் மக்கள் பயன்பாட்டுக்காக நிறுத்திவைக்கப்படும் என கே.எம்.சி. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.
காரைக்குடி
காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனை சார்பில், காரைக்குடி ெரயில் நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை மையம் கமாண்டெண்ட் ெரயில்வே புரொடெக்க்ஷன் போர்ஸ் செல்வராஜ் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் கொலம்பஸ் டோபோ ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
முதல் உதவி சிகிச்சை மையத்தை பற்றி கே.எம்.சி. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் பேசுகையில் இந்த முதல் உதவிமையம் கே.எம்.சி மருத்துவமனை சார்பாக அடிப்படை அவசர சிகிச்சை உபகரணங்களுடன் 24 மணிநேரமும் ெரயில் பயணிகள் மற்றும் ெரயில்வே பணியாளர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா மருத்துவ உதவி பெரும் வகையில் செயல்படும் என தெரிவித்தார். மேலும் அவசர ஊர்தியும் மக்கள் பயன்பாட்டுக்காக நிறுத்திவைக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கே.எம்.சி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் மற்றும் டாக்டர்கள் காளியப்பு, பாலாஜி, பிரசாந்த் மற்றும் கே.எம்.சி. மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் காரைக்குடி ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ெரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- ரெயில் நிலைய அதிகாரிகளின் ஒப்புதலோடு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
- கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக பாவூர்சத்திரம் ரெயில் நிலைய நடைமேடையை சுத்தம் செய்ய வேண்டும் என நிர்வாகிகள் உறுப்பினர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு ரெயில் நிலைய அதிகாரிகளின் ஒப்புதலோடு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு துணை கோட்ட பொறியாளர் கபிலன், பிரிவு பொறியாளர் யூசுப், பாவூர்சத்திரம் நிலைய கண்காணிப்பாளர் மாணிக்க்ஷா மற்றும் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தை சேர்ந்த கே.ஆர்.பி. இளங்கோ, பொன்னறிவழகன் உள்ளிட்ட 25 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
- காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
- எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் ரெயிலில் 3பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
திருப்பூர் :
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக் கழக வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில், தமிழகத்தில் இருந்து ரெயில் மூலம் பலர் செல்கின்றனர். இந்த நிலையில் கோவையில் இருந்து காசி தமிழ் சங்கத்தினர் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் கலைபண்பாட்டு, இலக்கிய விழாவில் கலந்து கொள்ள செல்வதற்கு எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் ரெயிலில் 3பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்தில்2 நிமிடம் நின்று செல்கிறது.
இந்தநிலையில் மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் ரெயிலில் சோதனை நடத்தப்பட்டது. பயணிகளின் உடைமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து உள்ளே அனுப்புகின்றனர்.
- நெல்லை மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- இன்று ரெயில் மூலமாக யூரியா உரம் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பயிர் நல்லமுறையில் துளிர்த்து வளருவதற்கு யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட ரசாயன உரங்கள் தேவைப்படுகிறது. இதனால் போதிய உரம் இருப்பு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலமாக யூரியா உரம் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.
மொத்தம் 1,900 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தடைந்தது.
இந்த உர மூடைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் மாநகர பகுதிகளின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு பிரிவு போலீசார் அதிரடி சோதனை
நெல்லை:
பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
ரெயில் நிலையம்
இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் மாநகர பகுதிகளின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருப்புப் பாதை இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் ஜான், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் ரெயில்வே தண்டவாளம்,ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் ஆகியவையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு உபகரணங்கள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ரெயில்வே பார்சல் சர்வீஸ் அலுவலகம், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நீண்ட நாட்களாக கேட்பாரற்றுக் கிடக்கும் இருசக்கர வாகனங்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் முழுவதும் அதிநவீன கருவிகள் கொண்டு தணிக்கை செய்யப்பட்டது.
இதேபோல் நெல்லை மாநகர் பகுதிகளில் இருக்கும் முக்கிய அலுவலகங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கேட்பாரற்ற நிலையில் இருக்கும் அனைத்து விதமான வாகனங்களும் தீவிர தணிக்கை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையம் வழியாக சென்னை- செங்கோட்டை, மதுரை-செங்கோட்டை, செங்கோட்ட- மயிலாடுதுறை, வேளாங்கண்ண-எர்ணாகுளம், சென்னை- கொல்லம், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் ஆகிய ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையம் வழியாக தினசரி 6 ெரயில்கள் செல்கிறது. பொதுமக்கள் ஆட்டோ மூலம் ெரயில் நிலையத்திற்கு செல்கின்றனர். வெளியூர் பயணிகள் நீதிமன்றம் சென்று அங்கிருந்து ெரயில் நிலையத்திற்கு நடந்து செல்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி, திருத்தங்கல், கிருஷ்ணப்பேரி, அச்சங்கு ளம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளை தேரடி, நகராட்சி அலு வலகம், தாலுகா அலுவலகம், ெரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் ெரயில் பயணிகள் மட்டுமின்றி தாலுகா அலுவலகம் செல்லும் மக்களும் பயனடைவர். இதனால் நகர பஸ்களை ெரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தென்னக ரெயில்வே சார்பில் அந்தந்த பகுதியில் பிரபலமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ரூ.300 முதல் அவற்றின் தரத்திற்கேற்ப பாய்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
ஒரு ரெயில் நிலையம் ஒரு பொருள் என்ற திட்டத்தின் கீழ் தென்னக ரெயில்வே சார்பில் அந்தந்த பகுதியில் பிரபலமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் 8-ந் தேதி வரை இந்த விற்பனை நடைபெற்றது.
பனை பொருட்கள் அங்காடி
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி, பனம் பழ ஜூஸ், பனை ஓலை பொருட்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த விற்பனைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்த காரணத்தினால் தற்போது மீண்டும் 2-வது முறையாக 15 நாட்களுக்கு பனை பொருட்கள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது.
பத்தமடை பாய்கள்
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த விற்பனையில் ஏராளமான பயணிகள் பொருட்களை பார்வையிடுவதுடன் அவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
அதன்படி தற்போது உலகப் புகழ் பெற்ற பத்தமடை பாய்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பாய்கள் சாதாரணமாக இல்லாமல் அவற்றில் பல்வேறு ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.
இயற்கை ஓவியங்கள்
அந்த வகையில் சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கண்களை கவரும் இயற்கை ஓவியங்கள் என பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒரு பாயின் விலை ரூ. 300 முதல் ரூ. 10 ஆயிரம் வரை அவற்றின் தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பனையில் இருந்து கிடைக்கும் பொருட் களிலிருந்து தயாரி க்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட வைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவைகள் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் ெரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இங்கு வெற்றிலைப் பெட்டி, குழந்தைகள் விளையாடும் கிலுக்கு, காய்கறிக் கூடை, விசிறி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பனை ஓலையால் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.