என் மலர்
நீங்கள் தேடியது "Railway Station"
- தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு ரெயில் வழக்கமாக புறப்பட்டு மயிலாடுதுறைக்கு சென்றது.
- திட்டைக்கும், பண்டாரவாடைக்கும் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில் நிலையத்தின் வழியாகவும், தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு ரெயில் (எண்:06874) வழக்கமாக புறப்பட்டு மயிலாடுதுறைக்கு சென்று வந்தது. இந்த ரெயில் புறப்படக்கூடிய நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திட்டைக்கும், பண்டாரவாடைக்கும் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் தஞ்சை-மயிலாடுதுறை ரெயில் காலை 10.05 மணிக்கு பதிலாக காலை 11.40 மணிக்கு புறப்படும்.
இந்த மாதம் (ஜனவரி) முழுவதும் இதே நேரத்தில் தான் புறப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது
- நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, திரு வள்ளூர், செங்கல்பட்டு, காட்பாடி மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், பல மாநிலங்களுக்கும் அதிக அளவில் பயணிகள் செல்கின்றனர்.
இதனால் அலுவலக நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் பயணிகள் கூட்ட நெரிசல் அதிக மாக இருந்து வருகிறது. இதன் காரணமாக டிக்கெட் கவுண்ட் டர்களில் டிக்கெட் எடுப்பதில் நெரிசல் ஏற்பட்டு பயணிகளி டையே அவ்வப்போது சண்டைகள் ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் விதமாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் நிரந்தர தடுப்பை அமைத்துள்ளனர்.
டிக்கெட் கவுண்ட்டர் முன்பு பயணிகள் வரிசையாக வந்து டிக்கெட் எடுக்கும் வகையில் ஸ்டீல் கம்பிகளை கொண்டு ரெயில் நிலையம் அருகே உள்ள இரட்டை கண் பாலத்தில், ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் பழனிபேட்டை பகுதியில் இருந்து ரெயில் நிலையம், பஜார் மற்றும் பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள், மோட்டார் சைக்கிளில் வருபவர்களும் பாலத் தில் தேங்கி நிற்கும் நீரால் விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.
எனவே, இதனை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு ரெயில்வே துறை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- மதுரை ரெயில் நிலையம் முன்பு கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, ரூ. 2,590-யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை
மதுரை ரெயில் நிலைய முன்பு திலகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகப்படும் வகையில் கிழக்கு நுழைவாயில் அருகே நின்ற ஆட்டோவை கண்காணித்தார். அந்த ஆட்டோவில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் மெயின் ரோடு சிராக்உசேன் மகன் முகமது அனிபா (36), தனக்கன்குளம் வெங்களமூர்த்திநகர் மீரா உசேன் மகன் இம்ரான் கான் (22) ஆகியோரை கைது செய்தார். அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, ரூ. 2,590-யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- நாடு முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க அம்பித் பாரத் ஸ்டேசன் என்ற திட்டத்தினை ரெயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
- ரெயில் நிலையங்களில் கட்டிட வடிமைப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்கு சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்ய ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
நெல்லை:
நாடு முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க அம்பித் பாரத் ஸ்டேசன் என்ற திட்டத்தினை ரெயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ரெயில் நிலையங்கள் மேம்பாடு
இத்திட்டம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை கோட்டத்தில் அம்பா சமுத்திரம், திருச்செந்தூர், தென்காசி, புனலூர், கோவில்பட்டி உள்பட 15 ரெயில் நிலையங்களை மேம்படுத்த சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறியப்பட்டு அவற்றை மேம்படுத்த ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ரெயில் நிலையங்களில் கட்டிட வடிமைப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்கு சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்ய ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை கையில் எடுக்கும் நிறுவனம், ரெயில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவீன வசதிகள்
அதன்படி நல்ல சிற்றுண்டி சாலை, திட்டமிடப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள், மேம்படுத்தப்பட்ட விளக்குகள், தேவையற்ற கட்டிடங்களை அகற்றுதல், தனி பாதைகள், சாலைகளை விரிவுப்படுத்துதல், 5 ஜி அலைக்கற்றை கிடைக்க ஏற்பாடு செய்தல், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மூலம் ரெயில் நிலைய வளாகங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீளம் இல்லையெனில், உடனடியாக அந்த நீளத்திற்கு நடைமேடை அமைப்பதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பாதை வசதி ஏற்படுத்துவதற்கும் முடிவுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் கூடுதலாக 2 நடைமேடை அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தும்போது கூடுதல் நடைமேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
- சந்திப்பு த.மு. சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு இன்று காலை மர்ம பை ஒன்று கிடந்தது.
- ராபர்ட் ஜெபஸ்டியானின் பையை குமார் தவறுதலாக எடுத்துச்சென்றுள்ளார்.
நெல்லை:
குடியரசு தின விழாவையொட்டி நெல்லை ரெயில் நிலை யத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்திப்பில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் த.மு. சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு இன்று காலை மர்ம பை ஒன்று கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக கமிஷனர் ராஜேந்திரன் அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த சேகர், நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் காளிமுத்து, நடராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மர்ம பையை கைப்பற்றி சோதனை நடத்தினர்.
அதில், துணிகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த பை யாருடையது? எப்படி அங்கு வந்தது என்பது? குறித்து விசாரணை நடத்தினர். அப்போது நெல்லையை சேர்ந்த குமார் என்பவரும், நாசரேத்தை சேர்ந்த ராபர்ட் ஜெபஸ்டியான் என்பவரும் சென்னையில் இருந்து ஒரே ரெயில் பெட்டியில் பயணம் செய்து இன்று சந்திப்பு ரெயில் நிலையம் வந்துள்ளனர். அப்போது தவறுதலாக ராபர்ட் ஜெபஸ்டியானின் பையை குமார் எடுத்துச்சென்றுள்ளார். பின்னர் த.மு.சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தபோது மறந்து விட்டு அந்த பையை அங்கேயே விட்டுச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பையை கைப்பற்றிய போலீசார் அதனை ராபர்ட் ஜெபஸ்டியானிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தை நம்பியே உள்ளனர்.
- முன்பதிவில்லா பயணச்சீட்டும் குறித்த நேரத்திற்குள் பெற முடியவில்லை.
தென்காசி:
நெல்லை - தென்காசி ரெயில் வழித்தடத்தில் மிக முக்கியமான ரெயில் நிலையமாகவும், 2-வது அதிக வருமானம் தரும் ரெயில் நிலையமாகவும் பாவூர்சத்திரம் விளங்கி வருகிறது.
இந்த ரெயில் நிலையத்தில் தற்போது காலை 8.30 முதல் 10.30 வரையும், நண்பகல் 11.30 முதல் 12.30 வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் முன்பதிவு மையம் இயங்கி வருகிறது. இந்த முன்பதிவு மையமானது ரெயில் நிலைய மேலாளர்களால் இயக்கப்படுகிறது.
டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தனியாக வர்த்தக அலுவலர்கள் யாரும் கிடையாது. இதனால் சில நேரங்களில் பராமரிப்பு பணிகளுக்காக ரெயில்கள் வரும் போது ஸ்டேஷன் மாஸ்டர்களால் முன்பதிவு செய்ய முடிவதில்லை.
மேலும் பாவூர்சத்திரம் ரெயில் நிலையமானது பிளாக் ஸ்டேஷன் என்பதால், தென்காசிக்கும், கடையத்துக்கும் இடையே உள்ள ரெயில்வே கேட்டு களை மூடுவது, திறப்பது குறித்த கட்டுப்பாட்டு அறை பாவூர்சத்திரத்தில் உள்ளது.
பயணிகள் தவிப்பு
ரெயில் நிலைய மேலாளர்கள், ரெயில்கள் இயக்கத்தை ஒழுங்கு படுத்துவது மட்டுமல்லாமல் முன்பதிவையும் சேர்த்து செய்வதால், சரியான நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து திப்ப ணம்பட்டியைச் சார்ந்த ரெயில் பயணி ஜெகன் கூறியதாவது:-
பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தை நம்பியே உள்ளனர்.
சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு செல்வதற்கு 120 நாட்களுக்கு முன்பாக காலை 8 மணிக்கு செய்யப்படும் முன்பதிவு, காலை 11 மணிக்கு குளிர்சாதன வசதி அல்லாத பெட்டிகளுக்கு செய்யப்படும் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
காலை 10 மணிக்கு செய்யப்படும் ஏ.சி. தட்கல் மட்டுமே முன்பதிவு செய்ய முடிகிறது. பரா மரிப்பு ரெயில்கள் வந்து விட்டால் அதுவும் செய்ய முடியாது.
ரெயில்வேயின் ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக, வர்த்தகப் பணியாளர்கள் நீக்கப்பட்டு, ரெயில் நிலைய மேலாளர்கள் மேற்கொள்வதால், ரெயில்கள் வரும் நேரங்களில் முன்பதிவு செய்ய முடியவில்லை. மேலும் முன்பதிவில்லா பயணச்சீட்டும் குறித்த நேரத்திற்குள் பெற முடிய வில்லை.
தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படும் நேரங்களில் பயணி களுக்கும், நிலைய மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு பாவூர்சத்தி ரம் தபால் நிலையத்தில் ரெயில் முன்பதிவு மையம் செயல்பட்டு வந்ததால் பயணிகள் மிகவும் பயன டைந்து வந்தனர். தற்போது அங்கும் ஆள் குறைப்பு நடவடிக்கை காரணமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டுள்ளது.
எனவே ஆயிரக் கணக்கான பயணிகளின் நலன் கருதி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை முன்பதிவு மையம் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் செயல் படும் வகையில் தனியாக டிக்கெட் முன்பதிவு ஊழியர் ஒருவரை நியமித்து முன்பதிவு மற்றும் முன்பதிவல்லாத டிக்கெட்டுகள் தடைபடாமல் தொடர்ந்து இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
- சின்னசேலம் ெரயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் உள்ளது.
- கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் 2000 மெட்ரிக் டென் நெல் மூட்டைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து இறங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ெரயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் உள்ளது. எனவே இந்த இறங்கு தளம் மூலம் சரக்கு ெரயிலில் இருந்து வரும் உரங்கள், யூரியா, அரிசி மூட்டை ஆகியவற்றை இறக்கி சேமிப்பு கிடங்களில் வைப்பது வழக்கம். அதேபோல் கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் 2000 மெட்ரிக் டென் நெல் மூட்டைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து இறங்கியது. டெல்டா மாவட்டங்களான நாகை, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் நெல் அறுவடை முன் கூட்டியே நடைபெற்று வருகிறது.
இதனால் அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட ரேசன் கடைகளுக்கு அரிசி வழங்குவதற்காக 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வாங்கி அதை சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் ஏற்றி வந்து லாரிகள் மூலம் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதன் மூலம் அரிசி மூட்டைகளை சேமிப்பு கிடங்கில் வைத்து சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு அனுப்பி மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க உள்ளனர்.
- 1930–ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சேலம்- – விருத்தாசலம் ரெயில்பாதை அமைக்கப்பட்டது.
- குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராமல் பழுத டைந்து கிடக்கின்றன. இரவு நேரத்தில் மின்விளக்குகளும் முறை யாக எரிவதில்லை.
வாழப்பாடி:
சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்ட கிராமப்புற மக்களின் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, 1930–ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சேலம்- – விருத்தாசலம் ரெயில்பாதை அமைக்கப்பட்டது. 90 ஆண்டுகள் பழமையான இந்த குறுகிய ரெயில்பாதை, 2007-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக தரம் உயர்த்தப்பட்டது.
137 கி.மீ., நீளமுள்ள சேலம்-–விருத்தாசலம் ரெயில்பாதையை மின் மையமாக்கும் திட்டத்திற்கு 2019–ல் மத்திய அரசு அனுமதி அளித்தது. 2 ஆண்டுகளாக நடைபெற்ற மின் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததால், கடந்த ஓராண்டாக இந்த வழித்தடத்தில் சேலம்- விருத்தாசலம், சேலம்-–சென்னை-எழும்பூர்- பெங்களூர்-காரைக்கால் மின்சார ரெயில்களும், சிறப்பு மற்றும் சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகிறது.
சேலம் சந்திப்பு
விருத்தாசலம் ரெயில் வழித்தடத்தில், சேலத்தில் இருந்து 30 வது கி.மீ., தூரத்திலுள்ள வாழப்பாடி முக்கிய ரெயில் நிறுத்தமாக விளங்கியது. 15 ஆண்டுகளுக்கு முன், வாழப்பாடியின் தென் கிழக்கு பகுதியில், புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, பயணிகள் தங்குமிடம், பயணச்சீட்ட முன்பதிவு மையம், பணியாளர்கள் குடியிருப்பு, நடைமேடை, கூடுதல் ரெயில் பாதைகள், சரக்கு வைப்பகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ரெயில் நிலையம் இயங்கி வந்தது.
மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில்பாதையாக மாற்றப்படுவதற்கு முன், ரெயில் நிலையம் மூடப்பட்டதோடு பாழடைந்த கிடந்த கட்டிடங்களும் 10 ஆண்டுக்கு முன்பே இடிக்கப்பட்டது. இதனையடுத்து, அகல ரெயில்பாதை அமைக்கப்பட்ட பிறகு வாழப்பாடியின் மையப்ப குதியான தம்மம்பட்டி சாலை ரெயில்வே கேட் பகுதியிலேயே 'எப்' வகுப்பு ரெயில் நிறுத்தம் அமைக்கப்பட்டது.
பயணச்சீட்டு வழங்கும் அறையை தவிர, பொருள் பாதுகாப்பு மற்றும்
பயணிகள் காத்திருப்பு
அறைகள் அமைக்கப்பட வில்லை. ஏறக்குறைய ஒரு கி.மீ., தூரமுள்ள நடை
மேடையில், 3 இடங்களில்
மட்டும் சிறிய அளவில்
நிழற்குடை அமைக்கப்பட்டு ள்ளது. பயணிகளுக்கான கட்டப்பட்டுள்ள கழிப்பி டங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது.
குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராமல் பழுத டைந்து கிடக்கின்றன. இரவு நேரத்தில் மின்விளக்குகளும் முறை யாக எரிவதில்லை. தனியார் முகவரால் பயணச்
சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. முன்பதிவு வசதிகள் ஏற்படுத்தவில்லை. இதனால், வாழப்பாடி ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருப்பினும், சேலம் –விருத்தாலம் வழித்தடத்தில் கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுக்கும் ரெயில் நிறுத்தங்களில் ஒன்றாக வாழப்பாடி விளங்கி வருகிறது.
எனவே, பயணிகள் நலன் கருதி, பயணிகள் பொருள் பாதுகாப்பு அறை, நடைமேடை முழுவதும் பயணிகள் நிழற்குடை, நவீன கழிப்பிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பயணச்சீட்டு முன்ப திவு மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, வாழப்பாடி ரெயில் நிறுத்தத்தை தரம் உயர்த்திட சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
- மதுரை ரெயில் நிலையத்தில் பழைய கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ரூ.375 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மதுரை
மதுரை ரெயில் நிலையத்தில் ரூ.375 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு விமான நிலையத்தில் உள்ள வசதிகளுக்கு இணையாக உலக தரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதற்கு வசதியாக தற்போது மதுரை ரெயில் நிலையத்தில் தற்காலிக பணியிட அலுவலகம், ஒப்பந்ததாரர் அலுவலகம், திட்ட மேலாண்மை அலுவலகம் ஆகியவை தொடங்கப்பட்டு உள்ளன.
ரெயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இன்னொரு புறம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தை வேறு பகுதிக்கு மாற்றும் வேலைகள் தொடங்கி உள்ளன.
மதுரை ரெயில் நிலைய கிழக்கு- மேற்கு நுழைவு வாயிலில் இரு முனையங்கள், 3 அடுக்கு வாகன காப்பகங்கள், கிழக்கு- மேற்கு பகுதிகளை இணைத்து ரெயில் பாதை மேல் காத்திருப்பு அரங்கு ஆகியவற்றுக்கான பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன.
மதுரை-திருமங்கலம் இடையேயான இரட்டை ரெயில் பாதையில் 2-வது வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இது மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதை ஆகும்.
இங்கு தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா சிறப்பு ரெயில் மூலம் குழுவுடன் சென்று மின்மய பாதைகளை ஆய்வு செய்தார். அப்போது வழியில் உள்ள பாலங்கள், ரெயில்வே கேட்டுகள் ஆகியவற்றில் மின்சார வழங்கல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மின்தடம் பற்றிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதா? அங்கு பணியாற்றும் ரெயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் உரிய பயிற்சி எடுத்து உள்ளனரா? என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதிய மின் தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு ரெயில் இயக்கப்பட்டது. அப்போது முதன்மை மின் வழங்கல் துறை பொறியாளர் சுந்தரேசன், ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகரரெட்டி, மின்துறை மேலாளர் ராமநாதன், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோரும் ரெயிலில் பயணம் செய்தனர்.
மதுரை-திருமங்கலம் இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு விட்டன. எனவே அங்கு எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பது என்று ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- முன் பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளை சுலபமாக பெற்றுக்கொள்ள முடியும்
- க்கெட் விற்பனை எந்திரங்கள் ‘‘கியூ ஆர் கோடு'' வசதியுடன் அமைக்கப்பட உள்ளது
சென்னை :
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தெற்கு ரெயில்வேயில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் தற்போது 99 தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் கூடுதலாக 254 தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரெயில் பயணிகள் முன் பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளை சுலபமாக பெற்றுக்கொள்ள முடியும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள் தெற்கு ரெயில்வேயில் உள்ள 6 ரெயில்வே கோட்டத்துக்கும் வழங்கப்பட உள்ளன. அதில் 96 எந்திரங்கள் சென்னைக்கும், 12 எந்திரங்கள் திருச்சிக்கும், 46 எந்திரங்கள் மதுரைக்கும், 50 எந்திரங்கள் திருவனந்தபுரத்துக்கும், 38 எந்திரங்கள் பாலக்காட்டுக்கும், 12 எந்திரங்கள் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கும் வழங்கப்பட உள்ளன.
மேலும் இந்தத்தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள் ''கியூ ஆர் கோடு'' வசதியுடன் அமைக்கப்பட உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். இதன் மூலம் பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள 'யூ.பி.ஐ' ஆப்கள் மூலமாக உடனுக்குடன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இது பயணிகள் மத்தியில் வரவேற்பைப்பெறும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைய தேவையில்லை.
- சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வதந்தி பரப்பபடுகிறது.
திருப்பூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் திருப்பூரில் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது தவறி விழுந்து ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சந்தேகமடைந்த வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் காண்பித்த பின்னர் சமாதானம் அடைந்த தொழிலாளர்கள் திரும்பி சென்றனர். மேலும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வடமாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா இந்தியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைய தேவையில்லை. அனைவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வதந்தி பரப்பபடுகிறது. அவற்றை யாரும் நம்பி அச்சமடைய தேவையில்லை என தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- ரெயில் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
- இந்த குழுவினர் நாளை விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் ரெயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.
மதுரை
நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகள் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் 6 பேர் அடங்கிய தேசிய ரெயில்வே பயணிகள் வசதி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரவிச்சந்திரன், மதுசூதனா, கோட்டோலா உமா ராணி, அபிஜித் தாஸ், ராம்குமார் பஹான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இந்த குழுவினர் 3 நாட்கள் பயணமாக மதுரை வந்துள்ளனர். அவர்கள் இன்று காலை தீவிர ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த குழுவினர் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்துடன் ஆலோசனை நடத்தினர். அப்போது முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, மூத்த கோட்ட என்ஜினீயர் பிரவீனா(தெற்கு), கோட்ட வர்த்தக மேலாளர் பிரபு பிரேம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த குழுவினர் நாளை விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் ரெயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர். நாளை மறுநாள் (8-ந் தேதி) கோவில்பட்டி, சாத்தூர், திருமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.