search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rain likely"

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain
    சென்னை:

    பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது.

    இதற்கிடையே தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.


    இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (20-ந் தேதி) வடதமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

    தொடர்ந்து 21-ந்தேதி தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என்றும், 22-ந்தேதி அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain #PeitiCyclone
    வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRain #WeatherCentre
    சென்னை:

    தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அதிகாரி இன்று கூறியதாவது:-

    இலங்கையை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியிலும், தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியிலும் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.


    இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரம், வானூர் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், அனைக்காரன் புதூர் 8 செ.மீட்டரும், பேச்சிப்பாறை, சத்தியமங்கலம், பாபநாசம், மரணக்காணம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.  #TNRain #WeatherCentre
    நெல்லை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் தினமும் பலத்த மழை பெய்வதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளில் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகலார் பகுதியில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. வால்பாறையில் (பிடிஓ) 12 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 11 செ.மீ., பெரியாறில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை,  நீலகிரி மாவட்டம் ஜிபசார் ஆகிய பகுதிகளில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #RainInTamilNadu #SouthwestMonsoon
    ×