search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rain water tank"

    கிகி விளையாட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போடுவது போல சென்னை மக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை எடுத்து போட்டால் சிறந்த கட்டமைப்புகளுக்கு பரிசு வழங்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. #ChennaiMetroWater
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. பருவமழையினால் கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி மூலம் சேமிக்க வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் முன் ஏற்பாடுகளை செய்யும் வகையில் பொதுமக்களை தயார் படுத்தி வருகிறது.

    வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு மையங்கள் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

    கிகி விளையாட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போடுவது போல சென்னை மக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை எடுத்து போட்டால் சிறந்த கட்டமைப்புகளுக்கு பரிசு வழங்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை சீர் செய்தல், மாடிகளை சுத்தம் செய்தல், கூழாங்கல் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது போன்ற புகைப்படங்களை எடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், மற்றும் சென்னை குடிநீர் வெப்சைட் ஆகியவற்றில் போடலாம் என்று குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


    சென்னையில் 8 லட்சத்து 93 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வீடுகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றை பருவ மழைக்கு முன்பாக சீரமைத்து மழை நீர் வீணாக்காமல் சேமித்தாலே நகரின் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியும்.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    பருவ மழை தொடங்க இருக்கின்ற இக்கால கட்டத்தில் வீடுகளில் மழை சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் மழை நீர் கட்டமைப்பு மற்றும் சீரமைக்கும் பணிகளை புகைப்படம் எடுத்து பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

    சிறந்த புகைப்படங்களுக்கு பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்கள் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு படத்தினை எடுத்து வெளியிடலாம்.

    இதில் 25 அயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். சிறந்த புகைப்படத்திற்கு சாம்பியன் பேட்ஜ் வழங்கப்படும்.

    இது தவிர குடிநீர் வாரிய என்ஜினீயர்கள், ஊழியர்கள் வீடு வீடாக சென்று மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பினை பார்வையிடுகிறார்கள். தினமும் 10 முதல் 20 வீடுகளை ஆய்வு செய்து மழை நீர் சேகரிப்பு குறித்த விதிமுறைகளை விளக்கி கூறுகிறார்கள். 325 குடிநீர் வாரிய அலுவலகங்கள், 2 ஆயிரம் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்கிறார்கள்.

    மேலும் கோயம்பேட்டில் மழை நீர் சேகரிப்பு குறித்த ஓவியப்போட்டியும் நடத்தப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பற்றி பெயிண்டிங் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #ChennaiMetroWater
    ×