search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raj Thackeray In Mumbai"

    மும்பையில் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுடனான லதா ரஜினிகாந்த் சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் அரசியல் உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. #LathaRajinikanth #RajThackeray
    சென்னை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த். பெங்களூரில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்தார். சென்னைக்கு வந்து நடிகராகி முன்னணி நட்சத்திரமாக மாறினார். அவரது ரசிகர்கள் வலியுறுத்தியதால் கடந்த டிசம்பர் 31-ந்தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார்.

    மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த அமைப்பான சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார் ரஜினிகாந்த். கடந்த 2010ம் ஆண்டு பால் தாக்கரேவை சந்தித்தபோது அவர் கடவுளைப் போன்றவர் என்று கூறினார். அது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தற்போது ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ள சூழலில் அவரது மனைவி லதா நவநிர்மான் சேனா தலைவரும் பால் தாக்கரேவின் மருமகனுமான ராஜ் தாக்கரேவை சந்தித்தார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் சினிமா, அரசியல் உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியுடன் இணக்கமாக இருந்த ராஜ்தாக்கரே சில நாட்களாக பா.ஜனதாவையும், மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    நேற்று லதா ரஜினிகாந்தை சந்தித்ததை டுவிட்டரில் பதிவு செய்த ராஜ் தாக்கரே ஆங்கிலத்தில் ரஜினிகாந்த் என்றும் மராத்தியில் சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்த் என்றும் ரஜினியை குறிப்பிட்டுள்ளார்.

    ரஜினிகாந்த் பிறப்பால் மராட்டியர். மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கே மகாராஷ்டிராவில் முதல் உரிமை என்பதே ராஜ்தாக்கரே மாமனாரும் சிவசேனா கட்சி முன்னாள் தலைவருமான மறைந்த பால்தாக்கரே கொள்கை என்பது குறிப்பிடத்தக்கது. #LathaRajinikanth #RajThackeray
     
    மும்பையில் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயை நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நேற்று சந்தித்தார்.
    மும்பை:

    நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நேற்று மும்பை வந்திருந்தார். பின்னர் தாதரில் உள்ள மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயின் கிருஷ்ணா குஞ்ச் இல்லத்துக்கு லதா ரஜினிகாந்த் சென்றார். அங்கு ராஜ்தாக்கரே மற்றும் அவரது மனைவி ஷர்மிளா தாக்கரே ஆகியோரை சந்தித்து பேசினார்.

    லதா ரஜினிகாந்த் உடனான இந்த சந்திப்பு குறித்து ராஜ் தாக்கரே, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

    அதில், லதா ரஜினிகாந்த் உடனான சந்திப்பின் போது அரசியல், சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தெரிவித்து இருக்கிறார். அத்துடன் உரையாடலின் போது எடுத்த படங்களையும் ராஜ் தாக்கரே பகிர்ந்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க ஆயத்தமாகி வரும் நிலையில், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயை சந்தித்து அரசியல் குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×