என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » rajbhavan
நீங்கள் தேடியது "rajbhavan"
- டெல்லி காங்கிரஸ் அலுவலகத்திற்குள் போலீசார் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம்
- தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவிப்பு.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
டெல்லி காங்கிரஸ் அலுவலகத்துக்குள் போலீசார் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி நிர்வாகிகள், தொண்டர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது.
இந்திய ஜனநாயகத்தில் இது ஒரு துக்க நாள். டெல்லி போலீசாரின் இந்த அராஜக செயலை கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகை முன்பு இன்று (16-ந் தேதி) காலை 11 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
17-ந் தேதி (நாளை) மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்துடன் எங்களது எதிர்ப்பு நின்று விடாது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநர் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. #VCAppointments #BanwarilalPurohit #RajBhavan
சென்னை:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியபோது, துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் புரண்டதாகவும் தெரிவித்தார். தான் பதவியேற்றபிறகு தகுதியின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் கூறினார். ஆளுநரின் இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கடும் விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.
துணை வேந்தர் நியமனத்தில் யார் மீதும் குற்றம் சுமத்தியோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தோ ஆளுநர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. கோடிக்கணக்கான பணத்தின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதாக கல்வியாளர்கள் கூறிய தகவலை சுட்டிக்காட்டி தெரிவித்தார்.
2018-க்கு முன் ஒரு துணைவேந்தர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்றத்தால் ஒரு துணைவேந்தர் பதவி நீக்கப்பட்டார். 2 துணைவேந்தர்களுக்கு எதிராக லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சோதனைகள் நடைபெற்றுள்ளன.
2018ல் இதுவரை 9 துணைவேந்தர்கள் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #VCAppointments #BanwarilalPurohit #RajBhavan
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியபோது, துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் புரண்டதாகவும் தெரிவித்தார். தான் பதவியேற்றபிறகு தகுதியின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் கூறினார். ஆளுநரின் இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கடும் விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.
இந்நிலையில் துணை வேந்தர் நியமன முறைகேடுகள் தொடர்பாக ஆளுநர் வெளியிட்ட கருத்துக்கு ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
2018-க்கு முன் ஒரு துணைவேந்தர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்றத்தால் ஒரு துணைவேந்தர் பதவி நீக்கப்பட்டார். 2 துணைவேந்தர்களுக்கு எதிராக லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சோதனைகள் நடைபெற்றுள்ளன.
2018ல் இதுவரை 9 துணைவேந்தர்கள் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #VCAppointments #BanwarilalPurohit #RajBhavan
டெல்லி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சுதந்திர போராட்ட தியாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். #FreedomFighters
புதுடெல்லி:
ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை மீட்பதற்கு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதில் ஒன்று வெள்ளையனே வெளியேறு போராட்டம். இந்த போராட்டம் 1942, ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு அவர்கள் தாயகம் திரும்பினர். அன்றிலிருந்து வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் 76வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுமார் 89 சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சுதந்திர போராட்ட தியாகிகளுடன் கலந்துரையாடினார்.
இதுதொடர்பாக மோடி டுவிட்டரில் கூறுகையில், சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளுடன் கலந்துரையாடினேன். அவர்கள் நாட்டிற்கு செய்த மாபெரும் தியாகத்தை நினைவு கூர்ந்தேன் என பதிவிட்டுள்ளார்.
×

X