என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » rajinikanth
நீங்கள் தேடியது "Rajinikanth கேரளா கனமழை"
வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். #KeralaFloods #KeralaFloodRelief #Rajinikanth
கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.
இந்தியா முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கேரள வெள்ள பாதிப்புக்கு ரூ.15 லட்சம் நிவாரணத் தொகை அளித்துள்ளார்.
முன்னதாக நடிகர்கள் கமல், விஜய் சேதுபதி, சூர்யா - கார்த்தி இணைந்து ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். நடிகர் தனுஷ் ரூ.15 லட்சமும், விஷால், சித்தார்த், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் ஷங்கர் தலா ரூ.10 லட்சமும், நடிகை ரோஹிணி ரூ.2 லட்சமும் அளித்துள்ளனர். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #Rajinikanth
தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்டுகொன்ற தமிழக அரசை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக சாடியுள்ளார். #Bansterlite #SaveThoothukudi
பெங்களூரு :
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் :-
போராட்டகாரர்களை கொல்வது தமிழ்நாட்டுக்கு அவமானம், தமிழகத்தின் நோக்கமற்ற முதுகெலும்பற்ற அரசே.. போராட்டகார்களின் அழுகைக்குரல் உங்களுக்கு கேட்கவில்லையா ? காற்று மாசுபாடு குறித்த குடிமக்களின் வேதனைகள் முன்கூட்டியே உங்களுக்கு தெரியாதா ? அல்லது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மத்திய அரசின் இசைக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருக்கிறீர்களா ?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணி நடத்திய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi #Rajinikanth
சென்னை :
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவல்துறையின் இந்த அடக்குமுறைக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது :-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டகாரர்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூடு, சட்டத்திற்கு புறம்பான வரம்பு மீறிய மிருகத்தனமான செயல், இதைதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த துப்பாக்கிச்கிச்சூடு சம்பவம் உளவுத்துறை மற்றும் தமிழக அரசின் நிர்வாக தோல்வியை காட்டுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Bansterlite #SaveThoothukudi #Rajinikanth
×

X