search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajya Sabha adjourn"

    அசாம் மாநில குடிமக்கள் பட்டியல் தொடர்பாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned #AssamNRC
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் யார் அசாமியர், யார் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதில் இந்தியர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
     
    இந்த விவகாரம் தொடர்பாக கடந்த இரு தினங்களாக பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.



    நேற்றைய கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் அசாம் தேசிய மக்கள் பதிவேடு தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராஜ்நாத் சிங் பேச எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை நாள் முழுவதும் முடங்கியது.

    இந்நிலையில், அசாம் மாநில குடிமக்கள் பட்டியல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது.

    அசாம் தேசிய மக்கள் பதிவேடு தொடர்பாக மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். #RajyaSabhaadjourned  #AssamNRC
    ×