search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rakshasa Bandhan"

    • ஹுமாயுனை சகோதரனாக பாவித்து உதவி கேட்டும் விதமாக அவருக்கு வண்ணக் கயிற்றினை அனுப்பி வைத்தார்.
    • நான் சிறுமியாக இருந்தபோது கேட்டு வளர்ந்த அந்த கதையை நான் கூறினேன்

    மாநிலங்களவை எம்.பியும்  பத்ம பூஷன் வென்ற எழுத்தாளருமான சுதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி ஆவார். நேற்றைய தினம் நாடு முழுவதும் ரக்க்ஷா பந்தனுக்கு சுதா மூர்த்தி வெளியிட்ட வாழ்த்து செய்தி சர்ச்சையானது. அதில் ராணி கார்னாவதி ஆபத்தில் இருந்தபோது மன்னர் ஹுமாயுனுக்கு வண்ணக்கயிறு ஒன்றை அனுப்பி அவரை உதவிக்கு அழைத்தார். ரக்க்ஷா பந்தனின் பின்கதை இது என்று பேசியிருந்தார்.

    16 ஆம் நூற்றாண்டில் தற்போதைய ராஜஸ்தானில் அமைந்துள்ள சித்தோர்கர் Chittorgarh பகுதி ராஜ்யத்தின் அரசர் ராணா சங்கா உயிரிழந்த பிறகு அவரது மனைவி கார்னாவதி ராஜ்யத்தின் ராணியானார். அப்போது குஜராத் சுல்தான் பகதூர் ஷா சித்தோர்கர் ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்தார். இந்த தாக்குதலை சமாளிக்க ராணி கார்னாவதி டெல்லி சுல்தான் ஹுமாயுனின் உதவியை நாடினார். ஹுமாயுனை சகோதரனாக பாவித்து உதவி கேட்டும் விதமாக அவருக்கு வண்ணக் கயிற்றினை அனுப்பி வைத்தார். [இந்து-முஸ்லீம்] சகோதரத்துவத்தை உணர்த்தும் இந்த நிகழ்வே ரக்க்ஷா பந்தன் கொண்டாடப்பட காரணம் என்ற பின்கதை ஒன்று உண்டு. இதை மையப்படுத்தியே சுதா மூர்த்தி தனது வாழ்த்து செய்தியில் பேசியிருந்தார்.

    ஆனால் ரக்க்ஷா பந்தன் பழம்பெரும் பண்டிகை எனவும், ஒரு பொய்யான கதையோடு அதை தொடர்புப்படுத்துகிறார் எனவும் இணையத்தில் அவருக்கு எதிராக சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுதா மூர்த்தி விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் சொன்ன கதை ரக்க்ஷா பந்தன் கொண்டப்படுவற்கான காரணமாக கூறப்படும் பல்வேறு கதைகளில் ஒரு கிளைக் கதை. நான் சிறுமியாக இருந்தபோது கேட்டு வளர்ந்த அந்த கதையை நான் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×