என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ramadan"

    • 2024-25 நிதியாண்டுக்கான கணக்குகளை முடிக்க வேண்டியுள்ளதால் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை
    • அரசு விடுமுறை தினமான இன்று (மார்ச் 31) வங்கிகள் செயல்படுவது தொடர்பாக ஆர்.பி.ஐ. விளக்கம்

    இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    இந்தியா, ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டைப் பின்பற்றுகிறது. எனவே 2024-25ம் நிதியாண்டின் கணக்குகளை அரசு மார்ச் 31ம் தேதியுடன் முடிக்க வேண்டும். இதற்காக மார்ச் 31 ஆம் தேதி வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன் அறிக்கையில், அனைத்து வங்கிகள் மற்றும் அரசாங்க வருவாய் மற்றும் செலவுகளை நிர்வகிக்கும் கிளைகள் மார்ச் 31ஆம் தேதி வழக்கமான பணிநேரத்தில் பணியாற்ற வேண்டும்.

    அரசு பரிவர்த்தனைகள் தொடர்பான கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்க வேண்டும் என்று ஆர்பிஐ அறிவுறுத்தி உள்ளது. மார்ச் 31ம் தேதியிட்ட காசோலைகளையும் கிளியர் செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் மார்ச் 31, 2025க்குள் கணக்கிட்டுக் கொள்ள வசதியாக, மார்ச் 31 அன்று அரசு காசோலைகளுக்கு பிரத்தியேகமாக CTS இன் கீழ் சிறப்பு தீர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை அன்றைய தினம் செலுத்தலாம். இதர பொதுவான வங்கி சேவைகள் இன்று இயங்காது.

    • இந்தியா, ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டைப் பின்பற்றுகிறது.
    • கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்க வேண்டும்

     மார்ச் 31 (திங்கள்கிழமை) ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் பொது விடுமுறை ஆகும். வார இறுதி விடுமுறையை தொடர்ந்து திங்கள்கிழமை இந்த விடுமுறை வருகிறது.

    ஆனால் இந்தியா, ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டைப் பின்பற்றுகிறது. எனவே 2024-25ம் நிதியாண்டின் கணக்குகளை அரசு மார்ச் 31ம் தேதியுடன் முடிக்க வேண்டும். இதற்காக மார்ச் 31 ஆம் தேதி வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன் அறிக்கையில், அனைத்து வங்கிகள் மற்றும் அரசாங்க வருவாய் மற்றும் செலவுகளை நிர்வகிக்கும் கிளைகள் மார்ச் 31ஆம் தேதி வழக்கமான பணிநேரத்தில் பணியாற்ற வேண்டும்.

    அரசு பரிவர்த்தனைகள் தொடர்பான கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்க வேண்டும் என்று ஆர்பிஐ அறிவுறுத்தி உள்ளது. மார்ச் 31ம் தேதியிட்ட காசோலைகளையும் கிளியர் செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் மார்ச் 31, 2025க்குள் கணக்கிட்டுக் கொள்ள வசதியாக, மார்ச் 31 அன்று அரசு காசோலைகளுக்கு பிரத்தியேகமாக CTS இன் கீழ் சிறப்பு தீர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை அன்றைய தினம் செலுத்தலாம். இதர பொதுவான சேவைகள் இயங்க வாய்ப்பில்லை. 

    • ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர், பிரதமர் உத்தரவிட்டுள்ளனர்.
    • பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டார்.

    புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர்.

    ரம்ஜானை ஒட்டி கருணை அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் உத்தரவிட்டுள்ளனர்.

    அதிபர் ஷேக் முகமது பின் சயீத் 1,295 கைதிகளை விடுவிக்கவும், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்கவும் உத்தரவிட்டார்.

    கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுபவர்களில் இந்திய நாட்டினர் 500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவுகள் பிப்ரவரி மாத இறுதியில் செயல்படுத்தப்பட்டன.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, வருடாந்திர ரமலான் மன்னிப்புகள் நாட்டின் கருணை மற்றும் இரண்டாவது வாய்ப்புகளுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

    புனித மாதத்தின் மதிப்புகளுடன் இணைந்து, இந்த நடவடிக்கை மன்னிப்பு, இரக்கம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. கூடுதலாக, பெருமளவிலான விடுதலை சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது.

    • மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு பொதுவிடுமுறையாகும். மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக அன்று பொதுமக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.

    நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.

    இதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ., சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரம்ஜான் நோன்பை தொடங்கிய இஸ்லாமியர்கள் தொடங்கினர்.
    • பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரம்

    இஸ்லாமிய மக்களின் 5 முக்கிய கடமைகளில் நோன்பு நோற்பது முக்கிய மானதாக கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

    ரம்ஜான் மாதத்தில் முதல் பிறை பார்த்த பின்னர் நோன்பு உறுதி செய்யப்படும். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று (24-ந் தேதி) முதல் நோன்பு நோற்கும்படி இஸ்லாமிய மக்களுக்கும், அனைத்து பேஷ் இமாம்க ளுக்கும் மாவட்ட அரசு சலாஹூத்தீன் தகவல் தெரிவித்தார்.

    முன்னதாக நேற்று இரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்க ளிலும் தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல்களிலும், அரபி மதராசக்களிலும் நடை பெற்றன.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமநாதபுரம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று முதல் நோன்பு விரதத்தை தொடங்கினர். அதிகாலை முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். பின்பு மாலையில் தொழுகை செய்து பள்ளிவாசல்களில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி உட்கொண்டு விர தத்தை முடித்துக் கொள் வார்கள். இதே போல் தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு விரதத்தை இஸ்லா மியர்கள் கடைப்பிடிப்பார்கள்.

    • கீழக்கரையில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாட்டை எஸ்.டி.பி.ஐ. கீழக்கரை நகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    வுமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரையில் நகர தலைவர் முபினா தலைமையில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி ஆகியோர் கலந்து கொண்டனர். வுமன் இந்தியா மூவ்மெண்ட் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் மற்றும் மாவட்ட செயலாளர் சித்தி நிஷா ஆகியோர் பேசினர். ஜகாங்கீர் அரூஷியின் பிரார்த்தனையோடு இப்தார் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்கான ஏற்பாட்டை எஸ்.டி.பி.ஐ. கீழக்கரை நகர செயலாளர் காதர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். கீழக்கரை நகர துணைத் தலைவர் ரீகான் நன்றி கூறினார்.

    • ஈஸ்டர் தினத்தையொட்டி கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • கொச்சியில் நடந்த பாரதிய ஜனதா கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவ மக்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தையொட்டி கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள், பிஷப்புகள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சினேக யாத்திரை என்ற பெயரில் நடந்த இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக பாரதிய ஜனதாவினர் தெரிவித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக அடுத்தவாரம் 22-ந்தேதி கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையையொட்டி பாரதிய ஜனதாவினர் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர்.

    கொச்சியில் நடந்த பாரதிய ஜனதா கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    • மேலப்பாளையத்தில் திங்கட்கிழமை தோறும் மாட்டு சந்தை நடந்து வருகிறது.
    • ஒவ்வொரு வாரமும் மேலப்பாளையம் சந்தையில் சுமார் ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையும் ஒன்றாகும். இங்கு ஆடுகளுடன், மாடு மற்றும் கருவாடு விற்பனை நடந்து வருகிறது. அந்த வகையில் வாரந்தோறும் தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தையும், செவ்வாய் கிழமை தோறும் ஆட்டுச்சந்தையும் நடந்து வருகிறது.

    மாடுகளுடன் குவிந்த வியாபாரிகள்

    வழக்கமாக ஒவ்வொரு வாரமும் சுமார் ரூ. 2 கோடி வரை விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், திருவிழா நாட்களிலும் விற்பனை மேலும் அதிகரித்து காணப்படும்.

    இந்நிலையில் இன்னும் 4 நாட்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று மேலப்பாளையம் மாட்டு சந்தைக்கு ஏராளமான வாகனங்களில் ஆயிரக்க ணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் கொண்டு வரப்பட்டது. அவைகள் தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. இதற்காக இன்று 100-க்கணக்கான சில்லறை வியாபாரிகள் சந்தையில் திரண்டனர். மேலும் பொதுமக்களும் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் மேலப்பாளையம் சந்தை இன்று களைகட்டி காணப்பட்டது.

    • வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
    • செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் காய்கறி, ஆடு, மாடு சந்தை கூடுவது வழக்கம்.

    இதில் ஆட்டுச் சந்தை பிரபலமானது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று வார சந்தையில் ஆட்டு சந்தை கூடியது. அதிகாலை 2 மணிக்கே விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர். அதேபோல் செங்கம், திருவண்ணாமலை, வேலூர், சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் ஆடுகளை கொண்டு வந்தனர்.

    மேலும் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம், வேலூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மினி லாரிகளில் நேற்று முன்தினமே வந்து விட்டனர். ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர்.

    வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் இங்கு வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    ஒரு செம்மறி ஆடு (15 கிலோ எடை) கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 9 ஆயிரம் முதல் 11 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. மற்ற வகை ஆடுகள் ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டன. வாரச்சந்தையில் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் ஆடுகளை வாங்கிச்சென்றனர். விலை சற்று கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். அளவுக்கு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் விலையும் சிறிது அதிகமாக இருந்ததாகவும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    • ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த ரமலான் வாழ்த்து.
    • இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மனிதநேயம் போற்றும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.

    அன்பை, அடக்க உணர்வை, எளிமையை போதித்த அண்ணல் நபிகள் பெருமான், "அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே; உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு" என போதித்து, மானுடம் அனைத்தும் பேரன்பால் பிணைக்கப்பட வேண்டியது என்பதை எடுத்துக் காட்டியவர். சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னத லட்சியங்களை உலகத்திற்கு தனது ஈகையாக வழங்கிச் சென்றவர்.

    திராவிட முன்னேற்றக் கழகமும், நமது திராவிட மாடல் அரசும் நபிகள் பெருமானார் காட்டிய சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் சமரசமின்றித் தனது பயணத்தை தொடருகிறது; என்றென்றும் தொடரும்!

    நபிகள் பெருமகனார் போதித்த நெறி வழி நின்று, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் எனது உள்ளம் நிறைந்த ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகம் மாலுமியார்பேட்டை மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாநகர அவைத்தலைவர் பழனிவேல், பொருளாளர் ராஜேந்திரன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர்கள் பாலசுந்தர் மற்றும், விஜயலட்சுமி செந்தில், வட்ட செயலாளர்கள் நவ்ஷத் அலி, வெங்கடேஷ், ராஜேஷ், பகுதி அவைத் தலைவர் சண்முகம், மனோகர், தகவல் தொழில்நுட்ப அணி பிரவின், கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஐ.ஐ.எம். அமைப்பின் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • பள்ளியின் இமாம் நெய்னா முகமது தொழுகையை நடத்தினார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் அல்ஜாமிஉல் அஸ்கர் பெரிய பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் என்கிற ஐ.ஐ.எம். அமைப்பின் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளியின் இமாம் நெய்னா முகமது தொழுகையை நடத்தினார்.

    கதீபு அப்துல் மஜீத் மஹ்லரி குத்பா பிரசங்கம் செய்தார். பள்ளிவாசல் தலைவர் அபுல் ஹசன் கலாமி, துணைத் தலைவர்கள் நவாஸ் அகமது, லெப்பை தம்பி, செயலாளர் துணி உமர், துணைச் செயலாளர் கரூர் செய்யது முகமது மற்றும் பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது தொழுகையில் பங்கேற்றவர்கள் பொது நலனுக்காக நிதி வழங்கினர். இதன் மூலம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 157 மற்றும் 1 கிராம் தங்க நாணயம் ஆகியவை கிடைத்துள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

    ×