என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » randeep surjiwala
நீங்கள் தேடியது "randeep surjiwala"
அரியானாவின் ஜிந்த் சட்டசபை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு காரணமான வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். #Jindbypoll #BJP #KrishanLalMiddha #Modi
சண்டிகர்;
அரியானா மாநிலத்தில் ஜிந்த் தொகுதிக்கு கடந்த திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் கிருஷ்ணா நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜித் வாலா நிறுத்தப்பட்டார். ஜனநாயக ஜனதா கட்சி சார்பில் திக்விஜய் சவுதாலா போட்டியிட்டார்.
கடந்த திங்கட்கிழமை நடந்த ஓட்டுப் பதிவில் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு அங்குள்ள அர்ஜுன் ஸ்டேடியத்தில் ஜிந்த் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாஜக சார்பில் போட்டியிட்ட கிருஷண் லால் மித்தா 50,566 வாக்குகள் பெற்று, 12,935 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அரியானாவின் ஜிந்த் சட்டசபை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு காரணமான வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அரியானாவில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்த ஜிந்த் தொகுதி மக்களுக்கு நன்றி. பாஜக வாக்குறுதி அளித்தபடி தொகுதியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு சேவையாற்றும் அரியானா முதல் மந்திரி மற்றும் பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #Jindbypoll #BJP #KrishanLalMiddha #Modi
அரியானாவின் ஜிந்த் சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் கிருஷண் லால் மித்தா வெற்றி பெற்றார். #Jindbypoll #BJP #KrishanLalMiddha
சண்டிகர்;
அரியானா மாநிலத்தில் தற்போது மனோகர்லால் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ஜிந்த் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த லோக்தளம் கட்சியைச் சேர்ந்த ஹரி சந்த் மித்தா மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த திங்கட்கிழமை அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் கிருஷ்ணா நிறுத்தப்பட்டார். இவர் மறைந்த எம்.எல்.ஏ. ஹரிசந்த் மித்தாவின் மகன். லோக்தளம் கட்சியில் இருந்து விலகிய அவருக்கு பா.ஜ.க. வேட்பாளராக வாய்ப்பு அளித்து இருந்தது.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜித் வாலா நிறுத்தப்பட்டார். ஏற்கனவே கைதால் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த இவரை திட்டமிட்டு ராகுல் இந்த தொகுதி இடைத்தேர்தலில் களமிறக்கி இருந்தார்.
இந்திய தேசிய லோக்தளம் கட்சி உமத் என்பவரை வேட்பாளராக நிறுத்தி இருந்தது. இந்திய தேசிய லோக்தளம் கட்சியில் விலகிய அஜய்சிங் சவுதாலா சமீபத்தில் ஜனநாயக ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கி இருந்தார். அந்த கட்சி சார்பில் அவர் தனது மகன் திக்விஜய் சவுதாலாவை போட்டியிட வைத்தார்.
இதனால் ஜிந்த் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை நடந்த ஓட்டுப் பதிவில் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு அங்குள்ள அர்ஜுன் ஸ்டேடியத்தில் ஜிந்த் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிட்ட கிருஷண் லால் மித்தா 50,566 வாக்குகள் பெற்று, 12,935 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஜனநாயக ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட திக்விஜய் சவுதாலா 37,631 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
காங்கிரஸ் சார்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரந்தீப்சிங் சுர்ஜித்வாலா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் அரியானா மாநில காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர். #Jindbypoll #BJP #KrishanLalMiddha
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X