search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ranganathar"

    கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.
    கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.

    காரமடையில் முன்பு காரை செடிகளும், தண்ணீர் மடைகளும் ஆங்காங்கே இருந்ததால் காரைமடை என்று பெயர் பெற்று, பிறகு மருவி காரமடை என ஆனது. காரை புதர்கள் நிறைந்து இருந்ததால் புற்களும் நிறைந்து இருந்தது.

    அப்போது எர்ற கொல்ல தொட்டியர்கள் பசுக்களை இங்கு ஓட்டி வந்து மேய்த்துவிட்டு பால் கறப்பது வழக்கம். இப்பசுக்களில் பால் கொடுக்கும் காறாம் பசு ஒன்று மாலையில் வீடு திரும்பும்போது மடி வற்றி பால் இல்லாமல் இருப்பதை வெகு நாட்கள் கவனித்து வந்த தொட்டிய நாயக்கர் பசு மீது சந்தேகம் கொண்டு ஒரு நாள் பசு மேய்கிற இடத்திற்கு சென்றார்.

    அந்த பசு காரை புதரில் பாலை சுரந்து கொண்டிருந்தது. பசு புதருக்கு பால் கொடுக்கிறதே என்ன ஆச்சரியம் என்று எண்ணி, கையில் வைத்திருந்த கொடுவாளை கொண்டு அவர் புதரை வெட்டினார். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொட்டிய நாயக்கர் மயங்கி கிழே விழுந்து விட்டார். பசுக்கள் மட்டும் வீடு திரும்பி விட்டன.

    காலையில் சென்ற தொட்டிய நாயக்கர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த உறவினர்கள் இருட்டில் போவதற்கு துணிகளை பந்தமாக கட்டி எண்ணை ஊற்றி தீப்பந்தங்களை பற்றவைத்து கொண்டு மிருகங்கள் இருட்டில் பக்கத்தில் வராமல் இருக்க பறையடித்து கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் காரை வனத்திற்குள் தேடினார்கள்.

    அப்போது அங்கு இருந்த புதரில் ரத்தம் பீறிட்ட இடத்தில் சிவப்பாக மடைபோல் காட்சி அளித்தது. மயக்கம் தெளிந்த தொட்டிய நாயக்கர் நடந்தவற்றை எல்லாம் கூறினார். மற்றவர்கள் புதரை விலக்கி, தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்த போது சுயம்பு லிங்கம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அப்போது அங்கு இருந்த தொட்டிய நாயக்கர்களில் ஒருவருக்கு அருள் வந்து ஆடி “நான் தான் அரங்கன், எனக்கு தான் பசு பாலை சுரந்து கொடுத்தது. என்னுடைய இடத்தை சுத்தம் செய்து கோவில் கட்டி வணங்குங்கள்” என்று கூற நின்றிருந்த தொட்டிய நாயக்கர்கள் தோல் பைகளில் தண்ணீர் கொண்டு வந்து இறைவன் மீது ஊற்றி பச்சை பந்தல் போட்டு வணங்கினர். வெட்டப்பட்ட அடையாளம் இப்போதும் மூலவரின் மேல் பக்கத்தில் உள்ளதை பார்க்கலாம்.

    பின் பட்டர் வம்சத்தினர் தொட்டிய நாயக்கர்களுக்கு உதவியாய் இருந்து அரங்கனின் பெருமையை கூறினர். அதன் பின்னர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு பல கல்கார வேலைகளிலும், இத்திருக்கோவிலுக்கான மண்டபங்களிலும், தெப்பக்குள படிக்கட்டுகளிலும் மீன் சிற்பங்கள் இருப்பது மதுரை மன்னரால் கட்டப்பட்டது என்பதற்கு சாட்சியாகும்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடை பெறும் உறியடி உற்சவம் மிகவு ம் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. நேற்று மாலை உறியடி உற்சவம் நடைபெற்றது. உறியடி உற்சவத்திற்காக நேற்று காலை கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது.

    சித்திரை வீதிகளில் வெண்ணெய் விளையாட்டு கண்டருளி கிருஷ்ணன் சன்னதிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் மாலையில் நம்பெருமாள், உபநாச்சியார்கள் திருச்சிவிகையில், கிருஷ்ணனுடன் புறப்பட்டு அம்மாமண்டபம் சாலையில் உள்ள யாதவ ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். இரவு 8.15 மணியளவில் பாதாள கிருஷ்ணர் சன்னதி அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் உறியடி உற்சவம் கண்டருளினர்.

    உறியடி உற்சவத்திற்காக நாலுகால் மண்டபத்தின் மேல் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அலங்கரிக்கப்பட்ட 3 பானைகளில் பால், தயிர், வெண்ணெய் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணன் நாலுகால் மண்டபம் எதிரில் வந்தவுடன் கீழிருந்து நீண்ட குச்சியின் மூலம் அந்த பானைகள் உடைக்கப்பட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது. பானை உடைந்தபோது கீழே சிதறிய பால், தயிர், வெண்ணெயை பக்தர்கள் பிரசாதமாக எடுத்து உண்டனர். பின்னர் அங்கிருந்து கிருஷ்ணன் மற்றும் நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தனர். 
    ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் நம்பெருமாள் எழுந்தருளி, காவிரித்தாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.
    ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளி, காவிரித்தாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் கோவிலில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு தங்க பல்லக்கில் புறப்பட்டார். வழிநடை உபயங்கள் கண்டருளினார். அம்மா மண்டபத்திற்கு மதியம் 1 மணி அளவில் வந்தடைந்தார்.

    படித்துறை வரை நம்பெருமாள் சென்றார். அங்கு பாய்ந்தோடும் காவிரியில் பட்டர்கள் வேத மந்திரங்கள் சிறிது நேரம் ஓதினர். அதன்பின் நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மாலை 4.45 மணி அளவில் காவிரித்தாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சந்தனம், சேலை, மாலை உள்பட மங்கல பொருட்களை யானை மீது தாம்பூல தட்டில் வைத்து பட்டர்கள் எடுத்து வந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் யானை மீது இருந்து சீர்வரிசை பொருட்களை காவிரி ஆற்றில் தூக்கி வீசினர். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்ட பின் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8.30 மணிக்கு நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் அரங்கனுக்கும் தொடர்பு உண்டு. இதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் அரங்கனுக்கும் தொடர்பு உண்டு. ஒரு முறை காவிரியில் அரங்கனுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்ற நேரம் காவிரியில் வேகம் அதிகரித்தது. அரங்கனை அந்த வெள்ளத்தில் இருந்து மீட்க முடியுமா என்ற பயம் ஏற்பட்ட போது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த கூரநாராயண ஜீயர் என்பவர், சுதர்சன சதகத்தை இயற்றி ஸ்ரீசுதர்சனரை வேண்ட... காவிரி வெள்ளம் குறைந்து, அரங்கள் கரையேறினான். இந்த சுதர்சன சதக பாராயணம் பல சங்கடங்களைப் போக்கும் மாமருந்தாகும்.

    கும்பகோணத்தில் சக்கரத்தாழ்வாருக்கு என்றே தனிக் கோவில் அமைந்துள்ளது. வேறெங்கும் காண முடியாத அமைப்பு அது. மேலும், இங்கு மூலஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் (மூலவரும் உற்சவரும்) சுதர்சனவல்லித் தாயாருடன் காட்சியளிக்கிறார். தவிர, விஜயவல்லித் தாயாரும் பிரகாரத்தில் தனிக்கோவில் கொண்டு காட்சியளிக்கிறார்.

    இவரை தரிசிக்க தட்சிணாயன, உத்தராயன வாசல்கள் அமைந்துள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயன வாசல் வழியாகச் செல்ல வேண்டும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் வழியாகச் செல்ல வேண்டும். சூரிய பகவானின் கர்வத்தை அடக்கியவர் சக்கரபாணி என்கிறது தலவரலாறு. அதனால் இத்தலத்தை பாஸ்கர க்ஷேத்திரம் என்றும் போற்றுவர்.
    ×