search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranji Trophy"

    40 வயதாகும் வாசிம் ஜாபர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். #RanjiTrophy #WasimJaffer
    இந்திய அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர். 40 வயதாகும் இவர் ஆரம்பகால கட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். தற்போது விதர்பா அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறார்.

    ரஞ்சி கோப்பை 3-வது ரவுண்டில் விதர்பா பரோடா அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இதில் 3-வது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய வாசிம் ஜாபர் 284 பந்தில் 13 பவுண்டரி, 2 சிக்சருடன் 153 ரன்கள் குவித்தார். கேப்டன் பாசல் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 300 ரன்கள் சேர்த்தார்.



    வாசிம் ஜாபர் 97 ரன்னைத் தொட்டபோது ரஞ்சி டிராபியில் 11 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 11 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வாசிம் ஜாபர் 11056 ரன்கள் அடித்துள்ளார். அமோல் முசும்தார் 9202 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டங்களின் முழு விவரங்கள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டம் இன்று தொடங்கியது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தின் தொகுப்பை காணலாம்.

    1. ஜார்க்கண்டிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 100 ரன்னில் சுருண்டது. பின்னர் ஜார்க்கண்ட் பேட்டிங் செய்து 92 ரன்னிற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

    2. ஒடிசாவிற்கு எதிராக அசாம் 121 ரன்னில் சுருண்டது. ஒடிசா 86 ரன்னிற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

    3. நாகலாந்திற்கு எதிராக மேகாலயா 5 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்துள்ளது.

    4. கேரளாவிற்க எதிராக மேற்கு வங்காளம் அணி 147 ரன்னில் சுருண்டது. கேரளா 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.

    5. மணிப்பூருக்கு எதிராக மிசோரம் 219 ரன்னில் சுருண்டது. மணிப்பூர் 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் சேர்த்துள்ளது.

    6. சிக்கிம் அணிக்கெதிராக உத்தரகாண்ட் 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் அடித்துள்ளது.

    7. ரெயில்வேஸ் அணிக்கெதிராக சத்தீஸ்கர் 5 விக்கெட் இழப்பிற்கு 222 சேர்த்துள்ளது.

    8. சவுராஷ்டிராவிற்கு எதிராக குஜராத் 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்துள்ளது.

    9. மும்பைக்கு எதிராக கர்நாடகா 4 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் சேர்த்துள்ளது.

    10. பரோடாவிற்கு எதிராக விதர்பா 1 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்துள்ளது.

    11. தமிழ் நாடு அணிக்கெதிராக ஆந்திரா 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் சேர்த்துள்ளது.

    12. டெல்லிக்கு எதிராக ஐதராபாத் 3 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்துள்ளது.

    13. மத்திய பிரதேசம் அணிக்கெதிராக பஞ்சாப் 4 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் அடித்துள்ளது.

    14. கோவாவிற்கு எதிராக ஹரியானா 9 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் அடித்துள்ளது.

    15. ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக திரிபுரா 124 ரன்னில் சுருண்டது. பின்னர் ஜம்மு-காஷ்மீர் 1 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்துள்ளது.

    16. உத்தர பிரதேசம் அணிக்கெதிராக சர்வீசஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் அடித்துள்ளது.

    17. பீகார் - பாண்டிச்சேரி இடையிலான ஆட்டம் மழையால் நடைபெறவில்லை.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்துள்ளது. அபினவ் முகுந்த் சதமடித்து அசத்தினார். #RanjiTrophy #AbhinavMukund
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடக்கும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 4-வது விக்கெட்டுக்கு அக்‌சாத் ரெட்டி உடன் பவனகா சந்தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்தனர்.

    சந்தீப் 130 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 246 ரன்கள் சேர்த்தது. அக்சாத் ரெட்டி அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து 250 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    தமிழ்நாடு அணி சார்பில் எம்.மொகமது 3 விக்கெட்டும், விக்னேஷ், ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கவுசிக் காந்தி 24 ரன்னிலும், பாபா அபராஜித் 4 ரன்னிலும் அவுட்டாகினர். மறுபுறம், அபினவ் முகுந்த் நிதானமாக விளையாடி சதமடித்தார்.

    இறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 79 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. அபினவ் முகுந்த் 101 ரன்களுடனும், பாபா இந்திரஜித் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். #RanjiTrophy #AbhinavMukund
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கெதிராக ஐதராபாத் இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 523 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் அக்சாத் ரெட்டி இரட்டை சதம் அடித்து அசத்தினார். #RanjiTrophy #AkshathReddy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று நேற்று தொடங்கியது. திருநெல்வேலியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. டேன்மே அகர்வால், கேப்டன் அக்‌சாத் ரெட்டி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டேன்மே அகர்வால் 10 ரன்னிலும், ரோகித் ராயுடு 13 ரன்னிலும், ஹிமாலே அகர்வால் 29 ரன்னிலும் அவுட்டாகினர்.
     
    4-வது விக்கெட்டுக்கு அக்‌சாத் ரெட்டி உடன் பவனகா சந்தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அக்‌சாத் ரெட்டி சதம் அடிக்க சந்தீப் அரைசதம் அடித்தார். இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அக்‌சாத் ரெட்டி 114 ரன்களுடனும், சந்தீப் 74 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சந்தீப் பொறுப்புடன் விளையாடி சதமடித்தார். அவர் 130 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 246 ரன்கள் சேர்த்தது. அக்சாத் ரெட்டி அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார். 

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் எடுத்துள்ளது. அக்சாத் ரெட்டி 248 ரன்களுடனும், சாமா மிலிந்த் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    தமிழ்நாடு அணி சார்பில் விக்னேஷ், எம் முகமது, ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள். #RanjiTrophy #AkshathReddy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கெதிராக ஐதராபாத் முதல் நாளில் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் அக்‌ஷாத் ரெட்டி சதம் அடித்தார்.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று இன்று தொடங்கியது. திருநெல்வேலியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. டேன்மே அகர்வால், கேப்டன் அக்‌ஷாத் ரெட்டி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டேன்மே அகர்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ரோகித் ராயுடு 13 ரன்னிலும், ஹிமாலே அகர்வால் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    4-வது விக்கெட்டுக்கு அக்‌ஷாத் ரெட்டி உடன் பவனகா சந்தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அக்‌ஷாத் ரெட்டி சதம் அடிக்க சந்தீப் அரைசதம் அடித்தார். இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அக்‌ஷாத் ரெட்டி 114 ரன்களுடனும், சந்தீப் 74 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    தமிழ்நாடு அணி சார்பில் விக்னேஷ், எம் முகமது, ரஹில் ஷா தலா ஒரு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    ரஞ்சி டிராபிக்கான டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பிர் விலகியுள்ளார். ராணா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #RanjiTrophy
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 12-ந்தேதி இமாச்சல பிரதேசம் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் 37 வயதாகும் காம்பிர், இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இதனால் 24 வயதான நிதிஷ் ராணா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராணா 24 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    ரஞ்சி டிராபி தொடரின் முதல் ஆட்டம் இன்றுடன் முடிவடைந்தது. இதில் ஒவ்வொரு போட்டிகளிலும் ஏற்பட்ட முடிவுகளின் கொடுக்கப்பட்டுள்ளது. #RanjiTrophy
    இந்தியாவின் மிகப்பெரிய முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி தொடரில் முதல் ஆட்டம் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் கொண்ட இந்த ஆட்டம் இன்றுடன் முடிவடைந்தது.

    இதில் பரோடா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜாராத். * மகாராஷ்ரா - விதர்பா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * ரெயில்வேஸ் - மும்பை இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * சவுராஷ்டிரா - சத்தீஷ்கர் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * ஆந்திரா - பஞ்சாப் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

    * இமாச்சல பிரதேசம் - மேற்கு வங்காளம் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * கேரளா - ஐதராபாத் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * தமிழ்நாடு - மத்திய பிரதேசம் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. *  ஜார்க்கண்ட் - அசாம் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * ஒடிசா - ஹரியானா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

    * ஜம்மு-காஷ்மீரை 75 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான். * திரிபுரா - சர்வீசஸ் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * கோவாவை இன்னிங்ஸ் மற்றம் 247 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது உத்தர பிரதேசம். * மணிப்பூரை இன்னிங்ஸ் மற்றும் 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிக்கிம்.

    * அருணாச்சல பிரதேசம் அணிக்கெதிரான ஆட்டத்தில் மேகாலயா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. * மிசோரம் அணியை இன்னிங்ஸ மற்றும் 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நாகலாந்து. * பீகாருக்கு எதிராக உத்தரகாண்ட் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ரஞ்சி கோப்பையில் தமிழக வீரர் முகமது ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அதேசமயம் மத்திய பிரதேசம் 393 ரன்கள் குவித்தது. #RanjiTrophy
    இந்தியாவின் முன்னணி முதல்தர தொடரான ரஞ்சி டிராபி நேற்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள மத்திய பிரதேசம் - தமிழ்நாடு அணிகள் திண்டுக்கல்லில் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற மத்திய பிரதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஆரியமான் பிர்லா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் அங்கித் டேன் 4 ரன்னில் வெளியேறினார்.

    3-வது வீரராக ராஜத் பதிடார் களம் இறங்கினார். இவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ராஜத் பதிடார் சதம் அடிக்க மத்திய பிரதேசம் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 சேர்த்திருந்தது. பதிடார் 110 ரன்னுடனும், எஸ் ஷர்மா ரன்ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஷர்மா 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பதிடார் இரட்டை சதத்தை நோக்கித் சென்றார். 142-வது ஓவரை தமிழகத்தின் எம் முகமது வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டுபே 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    144-வது ஓவரை எம் முகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பதிடார் 196 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் இரட்டை சதம் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த ஹிர்வானியை டக்அவுட்டில் வீழ்த்த, முகமது ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.



    மத்திய பிரதேசம் அணியின் ஸ்கோர் 360 ரன்னாக இருக்கும்போது பதிடார் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மத்திய பிரதேசம் 157.4 ஓவரில் 393 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    தமிழக அணி சார்பில் எம் முகமது, அஸ்வின் தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். பின்னர் தமிழ்நாடு முதல் இன்னிங்சை தொடங்கியது. அபிநவ் முகுந்த், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது நாள் ஆட்டம் முடியும்போது தமிழ்நாடு 2 ஓவரில் ரன்ஏதும் எடுக்கவில்லை. நாளை 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
    ரஞ்சி டிராபி தொடரில் மணிப்பூர் அணிக்கெதிரான ஆட்டத்திரல் சிக்கிம் வீரர் 261 ரன்கள் விளாச, அந்த அணி 372 ரன்கள் குவித்தது. #RanjiTrophy
    இந்தியாவின் முன்னணி முதல்தர தொடரான ரஞ்சி டிராபி நேற்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் பிளேட் பிரிவில் இடம்பிடித்துள்ள சிக்கிம் - மணிப்பூர் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற மணிப்பூர் பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி சிக்கிம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் சி டமாங்க் (0), பைசான் கான் (1), லமிச்சானே (8), பி டமாங்க் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் 13 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது நபராக மிலிண்ட் குமார் களம் இறங்கினார். 27 வயதான மிலிண்ட் குமார் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். டெல்லி அணியில் இடம்கிடைக்காததால் சிக்கிம் அணிக்கு மாறினார்.

    அனுபவம் இல்லாத மணிப்பூர் அணியின் பந்து வீச்சை அபாரமாக எதிர்கொண்டு இரட்டை சதம் விளாசினார். அத்துடன் 261 ரன்கள் குவித்து வெளியேறினார். இவர் இரட்டை சதம் அடிக்க சிக்கிம் 372 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடக்கிய மணிப்பூர் 79 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
    ரஞ்சி கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. தமிழக அணி தனது முதலாவது லீக்கில் மத்திய பிரதேசத்துடன் மோதுகிறது. #RanjiTrophy
    திண்டுக்கல்:

    உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இந்தியாவில் ஆண்டுதோறும் ரஞ்சி கோப்பை எனப்படும் முதல்தர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேசிய அணிக்கான கதவு தானாகவே திறக்கும்.

    இதன்படி 85-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி வரை நடக்கிறது. இந்த சீசனில் மொத்தம் 37 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு மாநில அணிக்கும் கட்டாயம் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று லோதா கமிட்டி உத்தரவிட்டதை தொடர்ந்து மணிப்பூர், அருணாச்சலபிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட், சிக்கிம், நாகலாந்து, மேகாலயா, புதுச்சேரி ஆகிய அணிகள் இந்த முறை ரஞ்சி தொடரில் அறிமுகம் ஆகின்றன. இதே போல் மாநில கிரிக்கெட் சங்கத்தின் மோதல் போக்கால் ஒதுக்கப்பட்டு இருந்த பீகார் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு திரும்புகிறது.

    அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ மற்றும் பி பிரிவில் தலா 9 மணிகளும், சி பிரிவில் 10 அணிகளும், பிளேட் பிரிவில் பீகார் மற்றும் 8 புதிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. தமிழக அணி ‘பி’ பிரிவில் ஆந்திரா, பெங்கால், டெல்லி, இமாச்சலபிரதேசம், ஐதராபாத், கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய அணிகளுடன் அங்கம் வகிக்கிறது.

    லீக் சுற்று முடிவில் ஏ, பி பிரிவில் இருந்து 5 அணிகளும், சி பிரிவில் இருந்து 2 அணியும், பிளேட் பிரிவில் இருந்து ஒரு அணியும் கால்இறுதிக்கு முன்னேறும். டாப்-2 குரூப்பில் கடைசி இடத்துக்கு தள்ளப்படும் அணி அடுத்த சீசனில் சி பிரிவுக்கு தள்ளப்படும். சி பிரிவில் முதல் இரு இடத்தை பெறும் அணிகள் ஏ, பி பிரிவுக்கு தகுதி உயர்வு பெறும். சி-யில் பின்தங்கும் அணி, பிளேட் குரூப்புக்கு தகுதி இறக்கம் செய்யப்படும். அதே சமயம் பிளேட் பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சி பிரிவுக்கு ஏற்றமடையும். #RanjiTrophy

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடருக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக பேட்ஸ்மேன் மந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். குர்தீரத் சிங் மான் துணைக் கேப்டன். #RanjiTrophy
    இந்தியாவின் மிகப்பெரிய முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி வியாழக்கிமை (நவம்பர்-1) தொடங்குகிறது. பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் ஆந்திராவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

    இதற்கான பஞ்சாப் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மந்தீப் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குர்கீரத் சிங் மான் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரரான ஷுப்மான் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷுப்மான் கில், 2.  ஜீவன்ஜோத சிங், 3. அன்மோல்ப்ரீத் சிங், 4. மந்தீப் சிங், 5. சன்வீர் சிங், 6. குர்கீரத் சிங் மான், 7 அபிஷேக் குப்தா, 8. அபிஷேக் ஷர்மா, 9. மயாங்க் மார்கண்டே, 10. அர்பித் பன்னு, 11. வினய் சவுத்ரி, 12. சித்தார்த் கவுல், 13. ஷுபெக் கில், 14. பால்டெஜ் சிங், 15. பரிந்தர் ஸ்ரன், 16. ஷரத் லூம்பா.
    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன பிரித்வி ஷா காயத்தால் அவதிப்படுவதால் ரஞ்சி டிராபிக்கான மும்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. #PrithviShaw
    மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் பிரித்வி ஷா. தொடக்க பேட்ஸ்மேன் ஆன இவர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தியதோடு தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

    இந்தியாவின் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார். அப்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. வருகின்ற நவம்பர் 1-ந்தேதி ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் பிரித்வி ஷாவிற்கு இடம் கிடைக்கவில்லை. காயம் குணமடைந்து உடற்தகுதி பெற்றால் ரஞ்சி டிராபியில் விளையாடுவார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பிரித்வி ஷா ரஞ்சி டிராபியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. இந்த தொடரில் பிரித்வி ஷாவிற்கு இடமுண்டு. இந்நிலையில் இந்த காயம் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.



    ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), 2. தவால் குல்கர்னி (துணைக் கேப்டன்), 3. சித்தேஷ் லாட், 4. ஜெய் பிஸ்ட்டா, 5. சுர்ய குமார் யாதவ், 6. குமார் யாதவ், 7. அஷாய் சர்தேசாய், 8. ஆதித்யா டரே, 9. ஏக்நாத் கெர்கார், 10. ஷவம் டுபே, 11. ஆகாஷ் பர்கர், 12. கர்ஷ் கோதாரி, 13. ஷாம்ஸ் முலானி, 14. அகில் ஹெர்வாத்கர், 15. துஷ்கர் தேஸ்பாண்டே, 16. ராய்ஸ்டன் தியாஸ்.
    ×