search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rasam vadai"

    காலையில் செய்த ரசம் மீந்து விட்டால் மாலையில் அதில் பருப்பு வடை செய்து சேர்த்து ரசம் வடையாக சாப்பிடலாம். இன்று இந்த ரசம் வடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கடலை பருப்பு - ¾ கப்
    வெங்காயம் - 1
    சிவப்பு மிளகாய் - 3
    சீரகம் - ¾ தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கொத்தமல்லி இலை - 3 மேஜைக்கரண்டி
    பெருங்காயம் - ⅛ தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    ரசம் செய்ய தேவையான பொருட்கள்

    புளி - 1 தேக்கரண்டி
    தக்காளி - 1
    மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன்
    பெருங்காயம் - ⅛ தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    சிவப்பு மிளகாய் - 3
    கொத்தமல்லி / தனியா - 1 டீஸ்பூன்
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - ½ தேக்கரண்டி
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடுகு - ½ தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சில



    செய்முறை

    வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கலாம்.

    மிக்சியில், சிகப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு மற்றும் சீரகத்தை பொடித்துக்கொள்ளவும்.

    கடலைப்பருப்பிலிருந்து தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து கலக்கவும்.

    சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டிய உருண்டைகளை, லேசாக தட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.

    ரசத்திற்கு தேவையான புளியை வெந்நீரில் ஊறவைத்து ஒரு கப் தண்ணீரில் புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்.

    மிளகாய், மிளகு, சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில், புளி கரைசலை, 3 கப் தண்ணீர், மஞ்சள், உப்பு, தக்காளி, பெருங்காயம், ரசப்பொடி மற்றும் சில கறிவேப்பிலை சேர்த்து, கலந்து அடுப்பில் வைத்து, ரசம் கொதிவந்தவுடன், வடைடைகளை சேர்த்து, உடனடியாக அடுப்பை அணைத்து, மூடி வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சிவப்பு மிளகாய், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து 15 நிமிடங்கள் குறைந்தபட்சம் ஊறியபின் பரிமாறவும்.

    அருமையான ரசம் பருப்பு வடை ரெடி.

    குறிப்பு :

    காலையில் செய்த ரசத்திலும் இதை செய்யலாம்.
    ரசம் அல்லது வடை, இரண்டில் ஒன்று சூடாக இருக்க வேண்டும். இரண்டுமே சூடாக இருந்தால் வடை கரைந்துவிடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×