search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rasi nakshatra"

    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்களையும், வழிபாடு செய்ய வேண்டிய முறையை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:-

    அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.
    பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சார்த்தலாம்.
    கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.
    ரோகினி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.

    மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.
    திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.
    புனர்பூசம்: சந்தன அலங்காரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
    பூசம்: தங்கக் கிரீடத்தால் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.

    ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.
    மகம்: தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.
    பூரம்: கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சார்த்தவும்.
    உத்திரம்: அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    ஹஸ்தம்: குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
    சித்திரை: வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
    சுவாதி: தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
    விசாகம்: திருநீறு அலங்காரம் போதும்.

    அனுஷம்: கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.
    கேட்டை : தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்பு-ல் மாலையும் சாற்றவும்.
    மூலம்: சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.
    பூராடம்: தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.

    உத்திராடம்: அருகம்புல் மாலையே போதும்.
    திருவோணம்: சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சார்த்தவும்.
    அவிட்டம்: வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அங்காரம் செய்யலாம்.
    சதயம்: குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.

    பூரட்டாதி: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
    உத்திரட்டாதி: ரோஜா மாலை அங்காரமே போதும்.
    ரேவதி: மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணி விக்கவும்.
    ×