search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ration shop employees"

    • நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது மளிகைப் பொருட்கள் திணிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
    • அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவும், இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ரேசன் கடை ஊழியர்களை அழைத்துப் பேசி அவர்களுக்குத் தரவேண்டிய அகவிலைப்படி உயர்வு, மளிகைப் பொருட்களை அவர்கள் மீது திணிக்கும் முடிவை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் இல்லை என்று அறிவிப்பது, புதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பது போன்ற தொழிலாளர் விரோதச் செயல்களில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

    நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது மளிகைப் பொருட்கள் திணிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவும், இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. #Rationshop
    சென்னை:

    தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் ரே‌ஷன் கடைகள் வழக்கம் போல திறந்து இருந்தன.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் நியாய விலைக்கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளும் செயல்பட்டன. மக்களுக்கு ரே‌ஷன் பொருட்கள் தடையின்றி கிடைத்தன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து ரே‌ஷன் கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன. சென்னையில் 1200 ரே‌ஷன் கடைகள் உள்ளன. டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, நாம்கோ, காஞ்சீபுரம் மொத்த கூட்டுறவு பண்டக சாலை நடத்தும் கடைகள் உள்ளிட்ட எல்லா நியாய விலைக் கடைகளும் திறந்து இருந்தன. சென்னையில் உள்ள ரே‌ஷன் கடை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் அத்தியாவசிய பொருட்கள் பாதிப்பு இல்லாமல் வினியோகிக்கப்பட்டன.

    இதுகுறித்து டி.யூ.சி.எஸ் அண்ணா தொழிற்சங்க கூட்டுறவு பிரிவு செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:-


    சென்னையில் நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. டி.யூ.சி.எஸ். சார்பில் நடத்தப்படும் 303 ரே‌ஷன் கடைகள் மட்டுமின்றி சிந்தாமணி கடைகள் 198, நாம்கோ கடைகள் 92, காஞ்சீபுரம் சொசைட்டி கடைகள் 417 என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டன என்றார்.

    இதற்கிடையில் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரே‌ஷன் கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று முதல் தொடங்கி உள்ளோம்.

    ஆனால் இதுநாள் வரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

    இதற்கிடையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.

    இந்த போராட்டம் திடீர் என அறிவிக்கவில்லை. இதுசம்பந்தமாக பலமுறை தெரிவித்தும் யாரும் பேச்சு வார்த்தைக்கு அழைக்காததால் இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.

    ஆகையால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் அதனை சந்திக்க தயாராக உள்ளோம். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ரே‌ஷன் கடைகளுக்கு சரியான அளவில் பொருட்கள் வழங்காமல் உள்ளனர்.

    ஆனால் கடைகளுக்கு பொருட்கள் வந்தஉடன் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து இருப்பு குறைவாக உள்ளது என குற்றம்சாட்டி ரே‌ஷன் பணியாளர்களை அடிமைகளாக மாற்றி அவர்களுக்கு வீண் செலவை ஏற்படுத்தி லஞ்சம் பெற்றுக் கொண்டு சஸ்பெண்டும் செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rationshop
    தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. #RationShopEmployeesStrike
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும். ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பொருள்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறுகையில், அரசுடன் கூட்டுறவு சங்க பதிவாளர், கூடுதல் பதிவாளர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். #RationShopEmployeesStrike
    தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

    தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்.  அனைத்து பொருள்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
    வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாநில அரசு அதிக ஊதியம் வழங்கி வருகிறது. மலைப் பகுதியில் பணிபுரியும் ரேஷன் ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் தரப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு நல்ல முடிவு எடுக்கும்.

    வாரிசு அரசியலை, ஊழலை ஒழிக்கும் கட்சி அதிமுக மட்டும்தான். எப்போதும், எந்த நேரத்திலும் எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ள கட்சி அதிமுக என தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
    கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தபோராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் இந்த சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமஜெயம், கந்தசாமி, சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில பிரசார செயலாளர் சுகமதி, நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப், நல்லம்பள்ளி கிளை துணைத்தலைவர் முருகன், நிர்வாகிகள் உஷாராணி, ருக்மணி, சீனிவாசன் ஜம்பு, லலிதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

    பொதுவினியோகத்திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ரேஷன்கடைகளுக்கு பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ரேஷன்கடைபணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    ×