என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » re attack
நீங்கள் தேடியது "re attack"
இலங்கையில் நாளை முதல் 28-ம் தேதி வரை மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. #srilankablasts #usawarning
நியூயார்க்:
இலங்கையில் கடந்த 21-ம் தேதி ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் புகைப்படம் இன்று வெளியானது. இலங்கை போலீசார் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் உள்ளனர். தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதாக கருதப்படும் இவர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்களையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், பொது இடங்களில் அதிகமாக கூட வேண்டாம் என்றும், வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால் இலங்கையில் நாளை முதல் 28ம் தேதி வரை பொது இடங்களில் அதிகமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. #srilankablasts #usawarning
×

X