search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "realme GT 6T"

    • அந்நிறுவனம் ஏராளமான டீசர்களை வெளியிட்டு வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் தனது GT 6T ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மே 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் தொடர்பாக அந்நிறுவனம் ஏராளமான டீசர்களை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் புதிய ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் சந்தையிலேயே முதல்முறையாக இரட்டை VC கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ரியல்மி GT 6T மாடலில் வழங்கப்படும் 9-அடுக்கு கூலிங் சிஸ்டம் ஸ்மார்ட்போன் அதிக சூடாவதை தடுக்கும் என்று ரியல்மி தெரிவித்துள்ளது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் கவர் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் இதில் 120 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் ரியல்மி தெரிவித்து இருந்தது. இதை கொண்டு ஸ்மார்ட்போனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பயன்படுத்த முடியும்.

    ரியல்மி GT 6T ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்த பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி GT 6T ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K 120Hz LTPO ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, 8MP லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 

    ×