search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reduce water release"

    • தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • நேற்று 1866 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை 1200 கன அடி நீர்மட்டுமே திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    வைகையாறு, முல்லைப்பெரியாறு, கொட்டக்குடியாறு, வராகநதி உள்பட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கேரளாவிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1712 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 136.55 அடியாக உள்ளது.

    பரவலாக மழை பெய்து வருவதால் முல்லை ப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்ப ட்டுள்ளது. நேற்று 1866 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை 1200 கன அடி நீர்மட்டுமே திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. 2992 கன அடி நீர் வருகிறது. 2685 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. அணைக்கு வரும் 376கன அடி நீர் உபரியாக திக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.73 அடியாக உள்ளது. 49 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 8.2, தேக்கடி 8.6, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 4.3, வீரபாண்டி 3.4, ஆண்டிபட்டி 8, அரண்மனைபுதூர் 2.2, போடி 1.4, பெரியகுளம் 21, மஞ்சளாறு 31, சோத்துப்பாறை 14 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×