search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Refrigeration box"

    • மனுக்கள் மீது உரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்
    • தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை கலெக்டர் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது. பொதுமக்கள் அடிப்படை பிரச்சினைகள் குறித்து மனு கொடுத்தனர். மொத்தம் 686 மனுக்கள் அளிக்கப்பட்டன.

    அந்த மனுக்கள் மீது உரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் மீன்ளத் துறையின் சார்பில் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாராபுரம் மீனவ கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 10 மீனவ மகளிருக்கு 60 சதவீத மானியத்தில் ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 330 மதிப்பிலும், உடுமலை மீனவ கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு 40 சதவீத மானியத்தில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 440 மதிப்பிலும் என மொத்தம் 15 பேருக்கு ரூ.5 லட்சத்து 89 ஆயிரத்து 770 மதிப்பில் குளிர் காப்புப்பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை கலெக்டர் வினீத் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை கலெக்டர் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

    ×