என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rehearsal"

    • மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏதுமில்லை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் வகையில் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அதில் கோவிட் -19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளன.

    மேலும் போதியளவு மருத்துவர்கள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்று தடுப்புக்கான சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 கேஎல் மற்றும் 10 கே.எல். கொள்ளளவு திறன் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப ஆக்சிஜனுடன் தயார் நிலையில் உள்ளன.

    மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏதுமில்லை. கோவிட்-19 நோய் தொற்று வரும் நிலை இருந்தாலும் அதை முழுமையாக தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் ஒருங்கி ணைந்து தேவை யான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளன. பொது மக்களை பொறுத்தவரை கோவிட்-19 நோய் தொற்று குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாமல் மருத்துவத்துறை வழங்கும் ஆலோசனைகளை கடைபிடித்து முககவசம் பயன்படுத்தி பாதுகாப்புடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.செந்தில் குமார், சுகாதார ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
    • மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அடுத்த மரைக்கான் சாவடி பகுதியில் உள்ள கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் எனப்படும் கெயில் நிறுவன எரிவாயு சேகரிப்பு மையம் உள்ளது.

    அங்கு உள்ள எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    நாகப்பட்டினம் மாவட்ட கலெகடர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வயல் வெளியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டால் எவ்வாறு தகவல் அளிக்க வேண்டும், மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து கெயில் நிறுவன ஊழியர்கள் பொதுமக்களுக்கு செய்து காட்டினார்.

    இதில் வருவாய்த்துறை பினர் தீயணைப்புத் துறையினர் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பேரிடர் கால ஒத்திகை இன்று நடத்தப்பட்டது.
    • அனைத்து துறைகள் ஒத்துழைப்போடு ஒத்திகை நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் பேரிடர் கால ஒத்திகை இன்று நடத்தப்பட்டது.

    தேசிய பேரிடர் மேலாண்முகமை, தேசிய பேரிடர் மீட்பு குழு, இந்திய வானிலை மையம் இணைந்து புதுவை அரசின் அனைத்து துறைகள் ஒத்துழைப்போடு ஒத்திகை நடந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கும் மக்களை மீட்டு நிவாரண மையங்களில் சேர்ப்பது, மருத்துவம், உணவு வழங்குதல், முதலுதவி குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.

    தவளக்குப்பம் என்.ஆர்.நகர், காலாப் பட்டு, கரிக்கலாம்பாக்கம் சுகாதார மையம், ஆரியப்பாளையம் பாலம் உட்பட 5 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    • கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலாளர் தலைமை தாங்கினார்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது, இங்கு சமையல் கேஸ் சிலிண்டரில் நிரப்பப்பட்டு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்பட பல்வேறு ஆகிய மாவட்ட மக்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

    இங்கு கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலா ளர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஓசூர் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலத்துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலை துணை மேலாளர் சரத் சந்திரா, சேலம் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர், அதனைத் தொடர்ந்து கேஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே அதிநவீன தண்ணீர் வெளியேறி அணைக்கும் பயிற்சியும் மற்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்ல பயிற்சி அளிக்கப்பட்டது,

    தொழிற்சாலை பாதுகாப்பு துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அலுவ லர்கள், தொழி லாளர்கள், ஊழியர்களுக்கு விபத்து ஏற்படும்போது விழிப்பு ணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கப்பட வேண்டும் உயிர் காக்கும் கருவிகள் அணிந்து கொண்டு பணி புரிய வேண்டும் என்றார், முகாமில் கேஸ் ஏஜென்சி மேலாளர் முருகேசன்,கருப்பூர் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அன்பழகன், தீயணைப்பு வீரர்கள், பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் தொழிற்சாலை மேலாளர் சிவராம கிருஷ்ணன் பயிற்சி அளித்த போது எடுத்த படம் அருகில் இணை இயக்குனர் சபீனா, உள்ளார்.

    • கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டார்
    • 181 மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சியினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் தெரிவித்ததாவது:-தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 207 முதல் தவணை தடுப்பூசிகளும், 13 லட்சத்து 78 ஆயிரத்து 358 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் மற்றும் 1 லட்சம் 86 ஆயிரத்து 461 முன்னெச்சரிக்கை நடவடிக்கை தடுப்பூசிகள் என மொத்தம் 29 லட்சத்து 77 ஆயிரத்து 26 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.மேலும் கோவிட் தொற்று சிகிச்சை அளிக்க ஏதுவாக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 125 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 290 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 85 படுக்கைகளும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 326 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 94 படுக்கைகளும் மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 121 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 149 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 50 படுக்கைகளும் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 364 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 26 படுக்கைகளும் என மொத்தம் 1,630 படுக்கை வசதிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 1,800 பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் 4,664 ஆர்.டி.பி.சி.ஆர் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    2023 நடப்பாண்டில் 23 நபர்களுக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதில் 15 நபர்கள் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 8 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்காக 181 மருத்துவர்களும், 285 செவிலியர்களும், 12 மருத்துவ உதவியாளர்களும், வெண்டிலேட்டர் பயிற்சி பெற்ற 40 நபர்களும் மற்றும் 110 வெண்டிலேட்டர்களும், 23 ஆக்ஸிமீட்டர் கருவிகளும், 148 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள், 549 ஆக்ஸிஜன் உருளைகளும், திரவ ஆக்ஸிஜன் 4 கொள்கலன்களும் தயா ர்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 21,023 எண்ணிக்கையிலான கவச உடைகளும், 6,326 எண்ணிக்கையிலான 95 முகக்கவசங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    பேட்டியின் போது அரசு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி, இணை இயக்குநர் ராதிகா, இருக்கை மருத்துவர் இந்திராணி, துணை இயக்குநர் ராம்கணேஷ், வட்டாட்சியர் விஜயலெட்சுமி பலர் உடனிருந்தனர்.

    • வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
    • வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் ஆண்டிபட்டியில் உள்ள சோழவந்தான் வனச்சரக அலுவலகத்தில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.வனவர்கள் பூபதி ராஜன், லோகநாதன், முருகேசன் முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சதக்கத்துல்லா தலைமையில் வீரர்கள் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடத்தினர். வனப்பகுதியில் தீ பிடித்தால் அணைக்கும் முறை பற்றியும், புயல், மழை, வெள்ளம் பேரிடர் காலங்களில் மீட்கும் முறை பற்றியும் உள்ளிட்ட செயல்முறை கருவிகளோடு பயிற்சியளித்தனர்.

    • தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்றது
    • பல்வேறு ஒத்திகைகள் செய்து காண்பிக்கப்பட்டது

    கரூர்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் முத்தனூரில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தீயணைப் புதுறை நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகையை செய்து காட்டினார்கள். அப்போது தீ விபத்தில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது சமையல் அறையில்சமையல் செய்யும் போது எண்ணெய் சட்டியில் திடீரென தீப்பிடித்தால் எவ்வாறு எதை கொண்டு அணைக்க வேண்டும் என்பது குறித்தும், தீப்பிடித் துக் கொண்ட வீட்டில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது, கேஸ் சிலிண்டரில் கேஸ் லீக் ஆகி தீ பிடித்தால் எப்படி அணைப்பது, புகை சூழ்ந்த இடங்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது. அவர்களை எப்படி காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகைகளை செய்து காட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    • திருப்பூரில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
    • சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குமரன் சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை, அவிநாசி சாலை, பி.என்.ரோடு உள்ளிட்ட பிரதான இடங்களில் அதிக அளவிலான வாகன போக்குவரத்து எப்பொழுதும் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் போக்குவரத்து நெரிசல் இருந்த வண்ணம் உள்ளது.

    குறிப்பாக மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலால் மங்களம் செல்லக்கூடிய வாகனங்கள் வளர்மதி பாலம் வரை நீண்ட வரிசையில் நிற்கின்றது. அதேபோன்று ரயில் நிலையம் மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் பல்லடம் சாலையில் உள்ள பாலம் வரை நிற்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் வாகனங்கள் சிக்னலில் நீண்ட நேரம் நிற்க அவசியம் ஏற்படாது.

    இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி சிக்னலில் இதற்கான ஒத்திகை நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி சிக்னல் அணைத்து வைக்கப்பட்டு வழி மாற்றம் செய்தனர். குமரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பல்லடம் சாலைக்கும், மங்கலம் சாலைக்கும் சிக்னலில் நிற்காமல் சென்றது .

    அதேபோன்று பல்லடம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பூங்கா சாலை வழியாக செல்லாமல் தாடிக்காரன் முக்கு வழியாக நட்ராஜ் தியேட்டர் சென்று ெரயில் நிலையம் சென்றது. இந்த ஒத்திகையால் எப்பொழுதும் பரப்பரப்பாக காணப்படும் பூங்கா சாலை நேற்று இரவு 7,30 மணிக்கு வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இனி நீண்ட நேரம் சிக்னலில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • ஜெயங்கொண்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது

    ஜெயங்கொண்டம்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ தடுப்பு போலி ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காண்பிக்கப்பட்டது. மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. தற்செயலாக வீடுகளில் தீவிபத்து ஏற்படும் அப்போது எண்ணெயினால் ஏற்படும் தீயை எவ்வாறு அனைப்பது. சமையல் எரிவாயுவினால் ஏற்படும் எரிவாயு கசிவு அதனால் ஏற்படும் தீ இவைகளை எவ்வாறு கையாள்வது தீயை கட்டுப்படுத்தி அணைப்பது, தீ ஏற்பட்ட வீடுகளில் இருந்து மக்களை எவ்வாறு வீட்டிலிருந்து வெளியே கொண்டு வருவது போன்றவைகளைப் பற்றி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செயல்முறைகள் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி காண்பித்தனர். இந்த போலி ஒத்திகை நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் வீரர்கள் செய்து காண்பித்தனர்.

    • பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் பயிற்சி நடைபெற்றது.
    • வீட்டிற்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசல், வெடி பொருட்கள் போன்றவற்றை சேமித்து வைக்காதீர்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாசில்தார் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் துறை சார்பில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் மாவட்ட அலுவலர் குமார் உத்தரவின் பேரில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    ஒத்திகையின் போது திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் கூறுகையில் பெண்கள் சமையல் செய்யும்போது பருத்தி ஆடை அணிவது நல்லது, குழந்தைகளை அடுப்பின் அருகில் தீப்பெட்டியுடன் விளையாட அனுமதிக்காதீர்கள், வீட்டிற்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசல், வெடி பொருட்கள் போன்றவற்றை சேமித்து வைக்காதீர்கள். ஆடையில் தீப்பற்றிக் கொண்டால் எங்கேயும் போகாமல் கீழே படுத்து உருளுங்கள். பின் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஒத்திகை யில் திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட கலந்து கொண்டனர்..

    • பெரம்பலூர் மாவட்டத்தில் பேரிடர்கால ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
    • 100 இடங்களில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், தொழிற்சாலைகள் , அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் என 100 இடங்களில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி மாவட்ட அலுவலர் அம்பிகா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் பெரம்பலூர் உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் நிலைய அலுவலர் (போக்குவரத்து) முருகன் மற்றும் முன்னணி தீயணை ப்பாளர் இன்பஅரசன் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்கமும், தீத்தடுப்பு சாதனங்களை கையாளும் விதம் குறித்தும், குடியிருப்பு மற்றும் பணிபுரியும் இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாளுவது, பாதுகாப்பாக வெளியேறுவது எவ்வாறு என்பது குறித்து செயல் விளக்கம், ஒத்திகை மூலம் விழி ப்புணர்வு ஏற்படு த்தினர். இதனை அரசு அலுவ லர்கள், பணியாளர்கள், மாணவ , மாணவிகள், வாசகர்கள் மற்றும் பொது மக்கள் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்.

    • சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • சுதந்திரதினத்தன்று முதலமைச்சரை காவல்துறை வாகன அணி வகுப்புடன் அழைத்து வருவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    76-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (15-ந்தேதி) நாடு முழுவ தும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    சென்னை காமராஜர் சாலையில் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி இதற்கான இறுதி ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்தது. இதில் போலீசார் சீருடையில் அணி வகுத்தனர்.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் சுதந்திரதினத்தன்று முதலமைச்சரை காவல்துறை வாகன அணி வகுப்புடன் அழைத்து வருவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    அதனை தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப் படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டு தேசிய கொடியைஏற்றி பேசுவது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    அதன் பின் தகைசால் தமிழர் விருது, ஏபிஜே அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகள் வழங்குவது போன்று ஒத்திகை நடந்தது.

    இதையொட்டி இன்று காலை காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    காலை 8 மணி முதல் ஒத்திகை நிகழ்ச்சி முடிவடைந்த 10 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை, கொடிமரச் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது

    போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகையையொட்டி இன்று சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளம், மற்றும் காமராஜர் சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதில் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

    ×