என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "release"
- பாஜக எம்.பி கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி.
- படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் செல்வேன். நாடு தற்போது உள்ள சூழலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று கங்கனா தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடமானது 1977 மார்ச் 21 ஆம் தேதி வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையாக வைத்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி. இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் சீக்கிய சமூகத்தினரைத் தவறாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்சையைத் தொடர்ந்து படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அதை நீக்கும்படியும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக இந்திரா காந்தியின் படுகொலை, பஞ்சாப் கலவரங்கள் உள்ளிட்டவற்றை படத்தில் காட்டக்கூடாது என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது. படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் செல்வேன். நாடு தற்போது உள்ள சூழலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று கங்கனா தெரிவித்திருந்தார்.
சீக்கியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் எமர்ஜென்சி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சிரோன்மணி அகாலிதளம் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
- இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் பிரேம் குமார். தமிழ் சினிமாவில் தெய்வீக காதல் கதையை கூறிய திரைப்படங்களில் 96 திரைப்படம் முக்கியமானவை.
அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படம் படத்தை பிரேம் குமார் இயக்கி வருகிறார்.
'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர்கள் வரவேற்பை பெற்றநிலையில், இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்
- இப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர்.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிக்காமல் இருந்த நிலையில் எடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.
அந்தகன் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான `அந்தாதூன்' படத்தின் ரீமேக் ஆகும். பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் அந்தகன் படத்தை இயக்குகிறார்.
மேலும் இப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அந்தகன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் பிரசாந்த் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
- அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கினார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோடம்புழா பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார். ரியாத்தில் ஹவுஸ் டிரைவர் விசாவில் சென்று வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு 26 வயது.
அங்கு ஒரு தம்பதியின் நடக்கமுடியாத நிலையில் இருந்த 15 வயது மாற்றுத்திறனாளி மகனை பராமரித்து வந்தார். இந்நிலையில் காரில் சென்றபோது அந்த சிறுவனை அப்துல் ரஹீம் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனடிப்படையில் அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டார்.
சிறுவனின் கொலை தவறுதலாக நடந்தது என்று அப்துல் ரஹீம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவர் சவுதி அரேபியா சிறையில் அப்துல் ரஹீம் அடைக்கப் பட்டார். கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொது மன்னிப்பு வழங்க மறுத்ததால் அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
அவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தற்போது வரை 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். அப்துல் ரஹீமை மீட்க அவரது பெற்றோர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். சிறுவனின் பெற்றோர் மன்னித்தால் அப்துல் ரஹீமை விடுவிக்கலாம் என்று கோர்ட்டு தெரிவித்தது.
அப்போது மகன் இறப்புக்கு இழப்பீடு செய்யும் வகையில் 'பிளட் மணி' என்ற வகையில் ஒன்றரை கோடி ரியால் (இந்திய மதிப்பில் ரூ34 கோடி) வழங்கினால் மன்னிக்க தயாராக இருப்பதாக சிறுவனின் பெற்றோர் கூறினர். அந்த தொகையை கடந்த ஏப்ரல் 16-ந்தேதிக்குள் ரூ.34 கோடியை வழங்கினால் அப்துல் ரஹீம் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவானது.
ஆனால் அவ்வளவு பெரிய தொகையை அப்துல் ரஹீமின் குடும்பத்தினரால் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்துல் ரஹீமை காப்பாற்ற தேவையான நிதியை திரட்ட சமூக சேவகர்கள் களமிறங்கினர். உலகம் முழுவதும் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கினார்கள்.
இதன்மூலம் ரூ.34 கோடி வசூல் ஆனது. அந்த தொகை சவுதி அரேபியா கோர்ட்டில் குறிப்பிட்ட நாளுக்குள் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அப்துல் ரஹீம் விடுதலையாகும் சூழல் உருவானது. அவரது குடும்பத்தினர் வழங்கிய ரூ.34 கோடி கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், அப்துல் ரஹீமை மன்னிக்க தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து அப்துல் ரஹீமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படுவதாக ரியாத் குற்றவியல் நீதிமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மரணதண்டனை ரத்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டதால் சவுதி அரேபியா சிறையில் இருந்து அப்துல் ரஹீம் விடுதலையாகிறார். 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர் நாளை விடுதலை செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தகுதியான கைதிகள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அளித்தனர்.
- கைதிகள் இன்று விடுதலை செய்யபட்டனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜெயில்களில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியிடம் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் கைதிகளின் குடும்பத்தினர் அளித்த மனுக்களை ஆய்வு செய்தனர். இதில் விடுதலை செய்ய தகுதியான கைதிகள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அளித்தனர்.
இந்த பட்டியல் அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு கவர்னரிடம் அளித்து ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் கொல்லப்பள்ளி ஜெயிலில் இருந்து 213 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த கைதிகள் இன்று விடுதலை செய்யபட்டனர். இந்த கைதிகளில் 205 பேர் ஆயுள் தண்டனை 8 பேர் அதற்கு குறைவான தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இம்ரான்கானை உடனே விடுவிக்க வேண்டும் என ஐ.நா.குழு வலியுறுத்தியது.
- இது உள்நாட்டு விவகாரம் என பாகிஸ்தான் அரசு பதிலளித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.
இதற்கிடையே, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தடுப்புக் காவல் தன்னிச்சையானது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்து இழப்பீடு வழங்கவேண்டும் என தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஏப்ரல் 2022-ல் இம்ரான்கான் வெளியேற்றப்பட்டதிலிருந்து அவருக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகள் குறித்து ஐ.நா. குழு தீவிர கவலைகளை எழுப்பியது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் குழுவின் இந்தக் கோரிக்கைக்கு பாகிஸ்தானின் அரசு, இது உள்நாட்டு விவகாரம் என பதிலளித்துள்ளது.
- படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
- ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் வீடியோ ஜூலை 5 அன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.
- கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மாபெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான கங்குவா படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச் செய்தது.
இதற்கிடையில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸை ஒட்டி கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பட ரிலீஸுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இதனை இன்னும் தூண்டிவிடும் வகையில் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது பட ரிலீஸுக்கு என்ற கவுண்டவுனை ஆரம்பித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வ்லைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படத்தின் டிரைலர் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது.
- இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மாபெரும் பொருட் செலவில் பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான கங்குவா படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச் செய்தது.
இதற்கிடையில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸை ஒட்டி கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முன்னதாக படத்தில் பணியாற்றியவர்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் படத்தில் பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேகா படம் பார்த்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது, 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'.
- இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வருண் தவானை சுற்றி ஒரு கூட்டமே கத்தியுடன் சூழ்ந்துள்ளது. இவர் ஒற்றையாளாக முறைத்துக் கொண்டே நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அதே டிசம்பர் 25 அன்று அமீர்கான் மற்றும் ஜெனிலியா நடித்திருக்கும் சிதாரே சமீன் பர் படமும் அன்று வெளியாகவுள்ளதால், எந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெகஷனில் அதிகம் வசூலிக்கும் ஒரு போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).
- இரண்டாவது பாடல், "சின்ன சின்ன கண்கள்" இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பாடலின் குட்டி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் "விசில் போடு" ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைதொடர்ந்து, விஜய்யின் 50-வது பிறந்த நாளை ஒட்டி கோட் படத்தின் இரண்டாவது பாடல், "சின்ன சின்ன கண்கள்" இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பாடலின் குட்டி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது. அதனபடி சின்ன சின்ன கண்கள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கபிலன் வைரமுத்து வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் மற்றும் யுவனின் தங்கையும் மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் ஏ.ஐ குரலில் இந்த 'சின்ன சின்ன கண்கள் பூக்கிறதோ' பாடல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நேற்று நள்ளிரவு 12 ணிக்கு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு GOAT படத்தின் 50 வினாடிகள் கிலிம்ஸ் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உயிரிழந்த இளம்பெண் பினாயுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்தபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.
- பெண்ணை கடுமையாக டிரோல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக தெரிகிறது.
கேரளாவில் தனது காதல் பிரேக் அப்பை நெட்டிசன்கள் கிண்டல் செய்ததால் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மைனர் பெண் இன்ஸ்டாகிராம் இன்புலுயென்சர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வந்த ஆதித்யா நாயர் என்ற அந்த இளம்பெண் கடந்த வாரம் ஜூன் 10 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆதித்யாவை காதலித்து ஏமாற்றிய 21 வயதாகும் பினாய் என்ற மற்றொரு இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டர் போக்சோ சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டார். உயிரிழந்த ஆதித்யா, பினாயுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்துபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.
ரீல்ஸ் செய்வதில் அதிக கவனம் செலுத்தியதால் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதித்யா 2 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். இதற்கிடையில் திடீரென இவர்களின் காதல் பிரேக் அப்பில் முடித்த நிலையில் பினாயின் இன்ஸ்ட்டாகிராம் ஃபாலோவர்கள் இணையத்தில் ஆதித்யாவை கடுமையாக டிரோல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக தெரிகிறது.
இந்நிலையில் மைனரான தனது பெண்ணை பினாய் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி மயக்கி ஏமாற்றியதாகபெண்ணின் தாய் தெரிவித்துள்ளார். மேலும் பினாய் மற்றும் உயிரிழந்த ஆதித்யாவின் மொபைல் போன்களை ஆராய்ந்ததன் மூலம் பினாய்க்கு எதிரான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்