search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "releases list of candidates"

    உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளத்தில் போட்டியிட உள்ள ஜெயப்பிரதா, மேனகா காந்தி உள்ளிட்ட வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது. #LSpolls #BJP #JayaPrada #ManekaGandhi
    புதுடெல்லி:

    பிரபல நடிகை ஜெயப்பிரதா கடந்த 1994-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். சந்திரபாபு நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2004-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பில் உத்தரபிரதேசத்தில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஜெயப்பிரதா சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் சேர்ந்தார்.

    இதற்கிடையே, இன்று காலை ஜெயப்பிரதா திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் போட்டியிட உள்ள 39 வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாஜக தலைவர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரபிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார்.

    மேனகா காந்தி சுல்தான்பூரிலும், வருண் காந்தி பிலிபித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்காளத்தின் அல்பேரியா தொகுதியில் நடிகர் ஜாய் பானர்ஜி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #LSpolls #BJP #JayaPrada #ManekaGandhi
    ×