search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "remarkson Rafale"

    ரபேல் விவகாரத்தில் நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடன் என்று சுப்ரீம் கோர்ட் கூறியதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. #BJPMP #Rahulremarks #remarksonRafale #SC #MeenakshiLekhi
    புதுடெல்லி:

    ரபேல் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்கள் மீது புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.  

    இந்த தீர்ப்பை வரவேற்று அமேதியில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ’ரபேல் பேரத்தில் சில வகையிலான ஊழல் நடந்திருக்கிறது என்பதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது’ என குறிப்பிட்டார்.

    மேலும், சுப்ரீம் கோர்ட் நீதி வழங்கி உள்ளது. ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் முன்னர் தன்னை குற்றமற்றவர் என கூறிவிட்டதாக மோடி சொல்லிக்கொண்டிருக்கிறார். புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த சம்மதித்தன் மூலம் நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடன் என சுப்ரீம் கோர்ட்டும் கருதுகிறது என்னும் பொருள்படும் வகையிலும் ராகுல் கூறினார்.



    சுப்ரீம் கோர்ட் சொல்லாத ஒரு கருத்தை சுப்ரீம் கோர்ட்டின் கருத்தாக திரித்துக் கூறிய ராகுல் காந்திக்கு எதிராக ரபேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பாஜக தலைமை எச்சரித்திருந்தது.

    இந்நிலையில், பாஜக எம்.பி.மீனாட்சி லேக்கி இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மூலம் தொடரப்பட்ட இந்த வழக்கு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. #BJPMP #Rahulremarks #remarksonRafale #SC  #MeenakshiLekhi
    ×