search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "replaces"

    ஒடிசா சட்டசபை தேர்தலில் கடைசி நேரத்தில் 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என திடீரென மறுத்து விட்டனர். #Congress #CongressCandidate #Odisha
    புவனேசுவரம்:

    பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இங்கு 4-ம் கட்ட தேர்தல் 29-ந் தேதி நடக்கிறது.

    இங்கு பர்சானா, நிமாபாரா ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களாக சீதாகந்த் மோகபத்ரா, சத்யபிராத் பத்ரா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள்.

    இந்த நிலையில், இவர்கள் இருவரும் போட்டியிட முடியாது என நேற்று முன்தினம் இரவு திடீரென மறுத்து விட்டனர்.

    அதைத் தொடர்ந்து அவ்விரு தொகுதிகளில் புதிய வேட்பாளர்களாக அஜய் சமால், திலீப் நாயக் ஆகியோர் அறிவிக்கப்பட்டு, நேற்று கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே ஒடிசா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்த 4 பேர் போட்டியிட மறுத்து விட்டது நினைவுகூரத்தக்கது. #Congress #CongressCandidate #Odisha 
    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடம் பிடித்தார். #RogerFederer #RafaelNadal
    மாட்ரிட்:

    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடம் பிடித்தார்.

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (8,670 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,950 புள்ளிகள்) மாட்ரிட் ஓபன் போட்டியில் கால் இறுதியில் வெளியேறியதால் ஒரு இடம் சரிந்து 2-வது இடத்தை பெற்றுள்ளார். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 3-வது இடத்தில் நீடிக்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 12-வது இடத்தில் இருந்து 18-வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார். 2007-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு ஜோகோவிச் முதல் 15 இடத்துக்கு வெளியே தள்ளப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.



    பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (7,270 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (6,845 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா (6,175 புள்ளிகள்) 3-வது இடத்திலும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (5,505 புள்ளிகள்) 4-வது இடத்திலும் தொடருகின்றனர். செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா 2 இடம் முன்னேறி 8-வது இடத்தையும், மாட்ரிட் ஓபன் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் 5 இடம் முன்னேறி 15-வது இடத்தையும், ரஷிய வீராங்கனை ஷரபோவா 12 இடங்கள் ஏற்றம் கண்டு 40-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர்களில் யுகி பாம்ப்ரி 8 இடம் சரிந்து 94-வது இடம் பிடித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக யுகி பாம்ப்ரி ஓய்வில் இருந்து வருகிறார். சசிகுமார் முகுந்த் 45 இடங்கள் முன்னேறி 377-வது இடத்தை பெற்றுள்ளார். ராம்குமார் ராமநாதன் 124-வது இடத்தையும், பிராஜ்னேஷ் குணேஸ்வரன் 175-வது இடத்தையும், சுமித் நாகல் 226-வது இடத்தையும், அர்ஜூன் காதே 371-வது இடத்தையும், சகெத் மைனெனி 441-வது இடத்தையும், சுந்தர் பிராஷாந்த் 467-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 23-வது இடத்தில் நீடிக்கிறார். திவிஜ் சரண் 2 இடம் சரிந்து 44-வது இடத்தையும், லியாண்டர் பெயஸ் ஒரு இடம் பின்தங்கி 51-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 7 இடம் முன்னேறி 187-வது இடத்தையும், கர்மான் கவுர் 16 இடம் ஏற்றம் கண்டு 254-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 
    ×