என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » reported
நீங்கள் தேடியது "reported"
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று பெரும்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களை விற்பனைசெய்பவர்கள் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் பதிவு மற்றும் உரிம சான்றிதழை ஆன்லைனில் பெறுவது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டமன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-
தமிழ்நாடு உணவுபாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவின்படி, வருகிற 2019 ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல், பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கு இ-பேமெண்ட் வாயிலாக மட்டுமே பெற முடியும். இணையதளத்தின் மூலம் அவரவர் வங்கி கணக்கில் இருந்து அதற்கான தொகையினை உரிமம் அளிக்கும் அரசு நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றாலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஓட்டல்கள் அல்லது உணவு நிறுவனங்களில் பயன்படுத்தினாலும் மற்றும் உணவு பொருட்களில் கலப்படம் இருந்தாலும் 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கலாம். 24 மணி நேரத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
×

X