என் மலர்
நீங்கள் தேடியது "rescue"
- பிரகாஷ் (வயது 26). சற்று மனநலம் பாதித்த இவர், திடீரென மாயமானார்.
- சீலநாயக்கன்பட்டி ஊத்து மலையில் சுற்றித்திரிந்த அர்ஜூன் பிரகாஷை மீட்டு அவரது பெற்றோருக்கும் திருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
திருப்பூர் மாவட்டம் காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன். இவரது மகன் அர்ஜூன் பிரகாஷ் (வயது 26). சற்று மனநலம் பாதித்த இவர், திடீரென மாயமானார். இது குறித்து அர்ஜூனின் பெற்றோர் திருப்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார், நேற்று இதுகுறித்து சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்த அன்னதானப்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன், சீலநாயக்கன்பட்டி ஊத்து மலையில் சுற்றித்திரிந்த அர்ஜூன் பிரகாஷை மீட்டு அவரது பெற்றோருக்கும் திருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அர்ஜூன் பிரகாஷின் பெற்றோர் நேற்று நள்ளிரவு சேலம் வந்து பிரகாஷை மீட்டுச் சென்றனர்.
- சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
- நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் பிணமாக கிடந்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன்.
இருசக்கர வாகனம் மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா என்று மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இன்று காலை செங்கோட்டையன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் செங்கோட்டையனின் உடலை மீட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செங்கோட்டையன் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
- மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கலிபுல்லா நகர் காலனியை சேர்ந்தவர் முத்து ராஜ். இவருக்கு சொந்தமான 30 அடி ஆழம் உள்ள கிணற்றில் அவருடைய மாடு தவறி விழுந்து விட்டது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் கிணற்றில் விழுந்த மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப் படைத்தனர். மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு நிலைய மீட்பு குழு வினருக்கு நன்றி தெரிவித்தனர்.
- திருச்செங்கோடு கூட்டப்பள்ளி கொட்டாங்காடு காட்டுப்பகுதியில் ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடந்தார்.
- கடந்த 5 நாட்களாக தேன்மொழியை காணவில்லை என அவரது வீட்டினர் தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் தேன்மொழியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு கூட்டப்பள்ளி கொட்டாங்காடு காட்டுப்பகுதியில் ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற பராமரிக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி பீட்டர் செல்வராஜ் உடனடியாக இல்ல பணியாளர்கள் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டார்.
அந்த பெண் காய்ச்சல் அறிகுறியுடன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க செய்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு உணவளித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் அவரது பெயர் தேன்மொழி எனவும், அவரது வீட்டு முகவரியும் தெரிவித்தார். கடந்த 5 நாட்களாக தேன்மொழியை காணவில்லை என அவரது வீட்டினர் தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் தேன்மொழியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மனிதாபிமான அடிப்படையில் உயிரைக் காப்பாற்றிய போலீசார் மற்றும் பராமரிக்கும் கரங்கள் இல்லத்தினரை பொதுமக்கள் பாராட்டினர்.
- ஓடையில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
- ஓடையில் இறங்கியபோது நடந்த சம்பவம்
பெரம்பலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட சேனாபதி கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 55), தொழிலாளி. இவர் கால்நடைகளுக்கு தீவனம் அறுப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக அதிகளவில் தண்ணீர் சென்ற ஓடையில் இறங்கியபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இந்தநிலையில் பாலையா வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தநிலையில், ஓடையில் உள்ள முட்புதரில் பாலையா பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் குகை பஞ்சாங்கி ஏரி பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
- இதில் மாயமான 2 சிறுமிகளும் ஈரோட்டில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
சேலம்:
சேலம் குகை பஞ்சாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவரின் 14 வயது மகள், குகை பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
இதேபோல், குகை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு 14 வயது சிறுமியும் மாயமானார். இதுகுறித்து சிறுமிகளின் தந்தை இருவரும் செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மாயமான 2 சிறுமிகளும் ஈரோட்டில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈரோட்டுக்கு விரைந்த போலீசார், சிறுமிகளை மீட்டு வந்து, அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
- நெல்லை மேலப்பாளை யத்தை அடுத்த சிவராஜபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நேற்று தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.
- இது குறித்து சிறுவர்களிடம் கேட்டபோது தந்தை திட்டிய கோபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளை யத்தை அடுத்த சிவராஜபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நேற்று தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் சரியாக பள்ளிக்கு செல்வதில்லை என்று கூறி அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அந்த சிறுவன் வீட்டில் இருந்த பணத்தில் ரூ. 500-ஐ எடுத்துக் கொண்டு தனது வீட்டின் எதிரே வசிக்கும் ஒருவரது 9 வயது மகனை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். இரவு வெகு நேரம் ஆகியும் அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த 2 சிறுவர்களின் பெற்றோரும் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் 2 பேரையும் தேடி வந்த நிலையில் சிறுவர்கள் நள்ளிரவு நேரத்தில் புதிய பேருந்து நிலையத்தில் திருச்செந்தூரில் இருந்து வந்த பஸ்ஸில் இருந்து இறங்கியுள்ளனர்.
அவர்களை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சிறுவர்களிடம் கேட்டபோது தந்தை திட்டிய கோபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
- கார்த்திகேசன் வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
- வீட்டிலிருந்த சுமார் 50,000 மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நெடுங்காடு கூழ் குடித்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கார்த்திகேசன். இவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகிலுள்ள குடும்பத்தார்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், காரைக்கால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி அசோக் குமார் தலைமையில், வீரர்கள் விரைந்து சென்று தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர். இருந்தும் குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து சேதமானது. வீட்டிலிருந்த சுமார் 50,000 மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.
விவரம் அறிந்த புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கார்த்திகேசன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், கார்த்திகேசன் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர் என்பதால், இரண்டொரு நாளில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 50,000 வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- 5 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக தனியார் ஏஜென்ட் மூலம் மலேசியா சென்றார்
- இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவகாமி. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக தனியார் ஏஜென்ட் மூலம் மலேசியா சென்றார், பின்னர் அங்கு தனக்கு உணவு மற்றும் இருப்பிடம் இல்லாமல் கொடுமை படுத்தி வருவதாகவும் தன்னை தமிழகம் மீட்க உதவுமாறு தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு வெளியான செய்தியின் அடிப்படையில், சுற்றுலாத்துறை அமைச்சரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இததையடுத்து அமைச்சர் ராமச்சந்திரன் தனது முயற்சியால் இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடுகள் மேற்கொண்டு சிவகாமியை மீட்டார்.
இதனையடுத்து சிவகாமி விமானம் மூலம் தமிழ்நாடு வந்தடைந்தார். பின்னர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தார்.
- கழிவு நீர் தொட்டியில் இன்று காலை மாடு ஒன்று உள்ளே விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த தீயணைப்பு வீரர்கள் மாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் மாநகராட்சி பூங்கா அருகில் கழிவுநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் இன்று காலை மாடு ஒன்று உள்ளே விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்
அதன் பேரில் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை பொது மக்கள் பாராட்டினர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கொத்தடிமையாக இருந்த பீகார் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
- இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த கீழான் மறைநாடு கிராமத்தில் ஒரு தனியார் பேப்பர் மில் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பேப்பர் மில்லில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரீஷ் (வயது17), சுரேஷ்குமார் (13) ஆகிய 2 சிறுவர்கள் கொத்தடிமை குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்ப்பது தெரியவந்தது. அவர்களை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- 4 நாய்க்குட்டிகள் சாலையில் குறுக்கே அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தது.
- செல்ல பிராணிகளை சாலையில் விடாமல் பாதுகாக்க முன்வர வேண்டும்.
கோபி:
கோபிசெட்டி பாளை யத்தில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் பாரியூர் கோவில் அருகே பிறந்து சில நாட்களே ஆன 4 பெண் நாய்க்குட்டிகளை அடையாளம் தெரியாத நபர்கள் சாலையோரமாக விட்டு சென்றுள்ளனர்.
அப்போது பசியில் தவித்த அந்த 4 நாய்க்குட்டிகள் சாலையில் குறுக்கே அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தது. இந்த நாய்க்குட்டிகளுக்கு அந்த வழியாக சாலையில் செல்லும் சில வாகன ஓட்டிகள் பால் ஊற்றி சென்று வந்தனர்.
இந்த நிலையில் கோபியில் இருந்து அத்தாணி சாலையில் செல்லும் பாரியூர் அருகே சாலையோரம் கைவிடப்பட்ட நாய்க்குட்டி களின் பரிதாப நிலை கண்டு ஆப்பக்கூடல் நர்சிங் கல்லூரி முதல்வர் கலை வாணி என்பவர் நாய்க்குட்டி களை மீட்டு சென்று உள்ளனர்.
அப்போது கூகலூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் நாய்க்குட்டிகளுக்கு பிஸ்கட் கொடுத்து நாய்க்குட்டிகளை மீட்க உடன் இருந்து உதவினார்.
இதனையடுத்து 4 நாய்க் குட்டிகளையும் தாய் அன்புடன் மீட்டு சென்ற சம்பவத்தை நேரில் பார்த்த சாலையோர வாகன ஓட்டிகள் மற்றும் பிராணிகள் நல ஆர்வலர்கள் சிலர் நாய்க்குட்டிகளை மீட்டு சென்ற நபருக்கு உணர்வுபூர்வமாக நன்றி தெரிவித்து சென்றதையும் காண முடிந்தது.
பூனைக்குட்டி மற்றும் நாய்க்குட்டி உள்ளிட்ட வீட்டு செல்ல பிராணிகளை சாலையில் விடாமல் பாதுகாக்க முன்வர வேண்டும். அல்லது பிராணிகள் நல அமைப்பு தொடர்பு கொண்டு பாதுகாக்க வேண்டும் என்பதே பிராணிகள் நல ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.