search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rescue Group"

    சிரியாவில் எயின் அல் டினே கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதாகவும் அதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Syria #Airstrike
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி உள்நாட்டுப்போர் மூண்டது. தொடர்ந்து 8-வது ஆண்டாக அந்தப் போர் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் சிரியாவின் தென் மேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள ஒரு கிராமத்தின் மீது ரஷியாவின் துணையுடன் அதிபர் ஆதரவு படைகள் நேற்று குண்டுவீச்சில் ஈடுபட்டன.

    இந்தக் குண்டுவீச்சில் 6 பேர் பலியாகினர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

    ஆனால் அங்கு இயங்கி வருகிற ஒரு மருத்துவ அறக்கட்டளை, எயின் அல் டினே கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதாகவும் அதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் கூறுகிறது.

    பலியானவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் என கூறப்படுகிறது. 35 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    அண்டை கிராமங்களில் அதிபர் ஆதரவு படைகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இடம் பெயர்ந்து எயின் அல் டினே கிராமத்துக்கு வந்த மக்கள்தான் பீப்பாய் குண்டுவீச்சில் சிக்கிக்கொண்டதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. 
    ×